முயல்

0
9428

முயல் உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டி விலங்காகும். குடும்பமாக வாழும் இவை தாவர உண்ணிகளாகும்.

  • இவை நான்கு முதல் பத்து ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இறைச்சிக்காகப் பண்ணைகளிலும் செல்ல விலங்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் காதுகள் இவற்றை குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன. ஆண் முயலினை “பக்” என்றும் பெண் முயலினை “டோய்” என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

முயல்களில் கருமுட்டை வெளிப்படுவது தன்னிச்சையாக நடப்பதில்லை. இவைகளில் ஓஸ்டிரஸ் சுழற்சி காணப்படுவதில்லை. எனவே இனச்சேர்க்கை மூலம் கருமுட்டை வெளிவருமாறு தூண்டப்படுகிறது. இனச்சேர்க்கைத் தூண்டலானது இனக்கலப்பினாலோ, வெளிப்புறத் தூண்டலினாலோ, இனப்பெருக்க அணு உற்பத்தித் தூண்டுதல் மூலமாகவோ, கருமுட்டை வெளிவருதல் மூலமாகவோ நடைபெறுகிறது.

  • முயல்களின் சினைக்காலம் 28-32 நாட்கள் ஆகும். பெண் முயல் கூண்டுக்குள் வைக்கோல், புற்கள் போன்ற பொருட்கள் வைப்பதால் சினை முயல் தன் குட்டிகளுக்கு படுக்கையைத் தயார் செய்து கொள்ளும்.
  • குட்டி ஈனுவதற்கு ஒரு வாரம் முன்பே வைக்கோல், புற்கள், மரத்துண்டுகள் போன்ற பொருட்களை உள்ளே போட்டு வைத்துக் கொள்ளவேண்டும். மரத்தூளைப் படுக்கை தயார் செய்ய தனது சொந்த முடியையே பிய்த்துக் கொள்ளும்.
முயல் வகைகள்
  • இமாலயன்
  • சோவியத் சின்சில்லா
  • டச்சு
  • ஆல்பினோ
  • நியூசிலாந்து வெள்ளை
  • நியூசிலாந்து சிவப்பு
  • வெள்ளை ஜெயின்ட்
  • சாம்பல் நிற ஜெயின்ட்
  • பிளமிஸ் ஜெயின்ட்
rabbit

சரியான தீவனம் மற்றும் தூய தண்ணீர் சினைக்காலத்தில் வழங்கப்படவேண்டும். சூழ்நிலை மாற்றங்கள் சினை முயல்களைப் பாதிக்காமல் பாதுகாத்தல் அவசியம்.

முயல்களின் வசிப்பிடம்

முயல்கள் சமவெளி காடுகள் சதுப்பு நிலங்கள் புல்வெளிகள் மற்றும் பாலை நிலங்களில் வாழும் விலஙகினமாகும். முயல்கள் கூட்டமாக வாழ்பவை. வட அமெரிக்கவில் முயல்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. முயல்கள் ஐரோப்பிய தென்மேற்கு ஆசியா சுமத்ர ஆப்ரிக்கா தென்அமெரிக்க மற்றும் ஜப்பானின் சில தீவுகளை பிறப்பிடமாக கொண்டுள்ளன.முயல்களின் ஒருநாள் சராசரி உறங்கும் நேரம் 8.5 மணிநேரம்.முயல்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்பவை என்பதால் இவை பல நாடுகளில் வேளாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

முயல்களின் உணவு

தினசரி உட்கொள்ளும் உணவு அதன் உடல் எடையில் 5 சதவிகிதம் ஆகும். அதே போல் முயலானது தனது உடல் எடையில் 10 சதவிகிதம் அளவு நீர் அருந்தும். சினை முயல்களுக்கு இந்த அளவு மேலும் அதிகரிக்கும்.

நாளொன்றுக்கு 100 கிராம் புற்களும், 200-250 கிராம் சமச்சீரான தீவனம் ஒரு சினை முயலுக்கு அவசியம் ஆகும்.

முயல்களின் இனப்பெருக்கம்

சாப்பிடுற உணவை, கறியா மாத்துற திறனும், இன விருத்தியும். மத்த விலங்குகளைவிட முயலுக்கு அதிகம்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments