மூங்கில்

0
3975
  • மூங்கில்   புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும்.சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம் முழுவதும் 1500க்கும் மேற்பட்ட இனவகை மூங்கில்கள் வளர்க்கப்படுகின்றன.
  • உண்மையில் மூங்கில் புல் வகையைச் சேர்ந்த ஒரு மரம் தான். மூங்கில் மரம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. இதன் அதிக அளவு பருமன் 1 சென்ட்டிமீட்டரிலிருந்து 30 சென்ட்டிமீட்டர் வரை இருக்கும். மூங்கில் மிகவும் வேகமாக வளரக்கூடிய ஒரு மரம். 
  • ஒரே நாளில் 250 cm (98 in) கூட தக்க சூழ்நிலையில் வளருவதாகத் தாவரவியலாளர் கண்டறிந்துள்ளனர்.ஒரு மூங்கில் மரத்தின் வயது 60 ஆண்டுகள். ஆனால், அது 60 அடி உயரம் வரை வளரும் காலமே 59 நாட்கள்தான்.

கடல் மட்டத்திற்கு மேல் 4000 மீட்டர் உயரம் உள்ள பிரதேசங்களில்தான் மூங்கில் நன்றாக வளரும். எனவே மலைச்சரிவுகளும், மிக வறண்ட பகுதிகளும் மூங்கில் வளர்வதற்கு ஏற்ற இடங்கள்.

சீனா,இந்தியா,தாய்லாந்து,பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா, நேபாளம்,வங்காளதேசம், கோஸ்டிரிக்கா, கென்யா ஆகிய நாடுகள் மூங்கில் உற்பத்தியில் முன்னணி நாடுகளாக இருக்கின்றன.

Bamboo
  • மூங்கிலின் வேர் நிலத்தை ஒரு அடிக்கு மேல் பற்றிக் கொண்டிருக்கும். மூங்கில் ஒன்றோடொன்று இணைந்து வளரும் தொகுப்பு 6 கியூபிக் மீட்டர் வரை இருக்கும். இளம் மூங்கில் குருத்துகள், 
  • இலைகள் ஆகியன பாண்டா, சிவப்பு பாண்டா, மூங்கில் லெமூர் விலங்குகளின் முதன்மையான உணவாகும். எலிகளும் இவற்றின் பழங்களை உண்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மூங்கிலரிசி

மூங்கிலரிசி என்பது மூங்கிலில் விளையும் ஒரு வகை விதையிலிருந்து கிடைக்கும் சிறு தானியம் ஆகும்.

மூங்கில் பூப்பதும், அதில் அரிசி விளைவதும் எப்போதோ ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு. மூங்கில்கள் அதன் ஆயுள் முடியும் காலகட்டத்தில்தான் பூக்கின்றன. ஒரு முறை பூத்த பிறகு, விதைகளை உற்பத்தி செய்துவிட்டு அவை இறந்துவிடுகின்றன. விதைகளை உற்பத்தி செய்யும்போது அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அதற்குப் பிறகு மூங்கில் இறந்துவிடுகிறது என்பது சில ஆய்வாளர்கள் கருத்து

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments