மென்டல் ப்ரேக் – Mental Outbreak

0
1062

ஒவ்வொரு வருடத்திற்கும் இருக்கும் கனவுகள் எல்லோருக்கும் இந்த வருடத்தின் ஆரம்பத்திலோ அல்லது சென்ற வருடத்தின் இறுதியிலோ தோன்றியிருக்கும். பெரிய பெரிய இலட்சியங்கள் கொண்ட இலட்சியவாதிகளுக்கு அப்பால் வருடத்திற்கு ஏதாவது ஒன்றேனும் உருப்படியாய் செய்ய வேணும் என்ற நிலையில் இருக்கும் சாதாரண மனிதர்களின் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் சூழ்ந்ததுதான் இந்த உலகு.

யாரேனும் சூழ்நிலை இப்படி மாறிப் பொகுமென்று சொல்லியிருந்தால் நாம் என்ன செய்திருப்போம். அதிகபட்சமாய் உளறாதே என்ற எச்சரிப்புடன் நகர்ந்திருப்போமோ? இல்லை புன்னகையுடன் பைத்தியங்கள் என்று கடந்திருப்போமோ? ஆனால் இப்போது பத்திரிகை, ரேடியோ தொலைக்காட்சி சுற்றியுள்ள இன்டர்னெட் சூழ் யுகத்தில் தேடுவதெல்லாம் கொரோனா! காண்பதெல்லாம் கொரோனா காட்சிகள்! இந்த பயோ வாரிலிருந்து தப்பிக்க தடுத்துக்கொள்ள அனைத்து நாடுகளும் எடுக்கும் சூட்சுமம் Lock Down, No to Social Break சுருக்கமாக சொல்வது என்றால் House Arrest with our own family. கொரோனா என்பது என்ன? இந்த வைரஸிலிருந்து பாதுகாக்க என்ன செய்யணும்? எப்படி நம்மிடமிருந்து பிறருக்கு தொற்றாமலிருக்க பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கணும் என்ற 1000 கட்டுரைகளில் சொல்லாததை இப்போது இந்த கட்டுரை சொல்லப் போவதில்லை. ஏனென்றால் இவை அனைத்தையும் தாண்டி இப்போதெல்லாம் சில நாட்களாக ஓரிடத்தில் 24 மணித்தியாலங்களும் அடைபட்டு இருக்கும் மனிதர்களின் மனநிலை எப்படியிருக்கும்? குடும்பத்தோடு செலவிட இப்போதுதான் நேரம் கிடைத்திருக்கின்றது என நிம்மதியாக மூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நபர்கள் தவிர்த்து ‘எப்போதுதான் வெளியேறுவோம்?’ என காத்திருக்கும் நபர்களுக்கான பதிவுதான் இது.

இப்போது உங்கள் கைகளில் முழுமையாக 24 மணிநேரம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. நம்மால் அதை எவ்வாறு பிரயோசனமாக பயன்படுத்த முடியும் என்பதை நன்றாக திட்டமிடுவோம்.

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் எப்போதும் வழமையான நாட்களில் படி படி என்று விரட்டுவதைப்போல இந்த நாட்களிலும் விரட்ட வேண்டாம். நாளுக்கு குறிப்பிட்ட சில மணிநேரங்கள் அவர்களோடு அமர்ந்து அவர்களுக்கு கற்றல் விடயங்களை சொல்லிக் கொடுங்கள். அதை விடவும் அதிகமாக அவர்களுக்கு ஆர்வமான விடயங்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள்.

நீங்கள் எப்போதேனும் ட்ரை பண்ணி பார்க்கணும் என்று நினைத்த சமையலை இப்போது மணக்க மணக்க செய்து பார்க்கலாம்.

நேரமில்லை என்று நினைத்து ஒதுக்கிய உங்களுக்கு பிடித்தமான புத்தகங்களை வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். தேர்ந்தெடுத்து நல்ல எழுத்துக்களை வாசிப்பது சிறந்தது.

எப்போதும் உங்கள் வீட்டில் தாய், சகோதரி அல்லது மனைவிதான் சமையல் முதற்கொண்டு வீட்டை ஒழுங்குபடுத்தும் அனைத்து வேலைகளையும் செய்பவர் என்றால் ஒரு மாறுதலுக்கு நீங்கள் அதனை பொறுப்பேற்கலாம் அல்லது அந்த வேலைகளில் உதவலாம். குழந்தைககைளுக்கும் அந்த வேலைகளை கற்றுக் கொடுக்கும்போது உற்சாகமாய் உங்களுடன் சேர்ந்தே ஈடுபடுவார்கள்.

எல்லாவற்றையும் தாண்டி கொரோனா மட்டுமே நம் உலகம் என நம்பிக் கொண்டிருக்க வேண்டாம். இந்த சூழ்நிலை மாறியபின் என்னென்ன செய்ய வேண்டும் என குடும்பத்தினருடன் அமர்ந்து திட்டமிடுங்கள்.

கொரோனா பற்றிய அப்டேட்களை அறிந்திருப்பது நல்லது. அதற்காக தினமும் அதைப்பற்றிய செய்திகளை மட்டுமே பார்ப்பதும், பேசுவதும் உங்களை அறியாமல் உங்களுக்கு மன அழுத்தத்தையே உருவாக்கும். எதற்கு வீண் டென்ஷன் வீண் ப்ரஷர்?

நேரமில்லை என்று ஒதுக்கி வைத்த உங்கள் எண்ணங்களுக்கு கொஞ்சம் புடம் போடலாம். கவிதை, கதைகள், ஓவியங்கள் என உங்களின் கற்பனைகளுக்கு களம் கொடுங்கள்.

ஆபீஸ் நண்பர்கள், அறிமுக நண்பர்களை தாண்டி பள்ளியில் படித்த பழைய நண்பர்களுடன் மனம் விட்டு பேசலாம். அதற்காக நேரடியாக போய் பேசுவதல்ல. இப்போதுதான் வாட்சப் கோல், அன்லிமிடட் கோல்ஸ் இருக்கின்றதே! பழைய நினைவுகள் உங்கள் மனதில் உற்சாகத்தை வர வைக்கலாம்.

முடிந்தால் இந்த கட்டாய ஓய்வுகாலப் பகுதியில் நல்லதொரு வீட்டுத் தோட்டத்திற்கு ப்ளான் செய்யுங்கள். அல்லது இருக்கும் உங்கள் தோட்டத்தின் அமைப்பை அழகாக மாற்றி அமையுங்கள். இப்போதுதான் மாடி வீடுகளிலும் வீட்டுத் தோட்டம் அமைக்க முடியுமே!

நீங்கள் கொரோனாவிலிருந்து எந்தளவு பாதுகாப்பாக உள்ளீர்களோ அது போல் சுத்தத்தின் அவசியம் உணர்ந்து தினமும் குளியுங்கள். வீட்டில்தானே இருக்கிறோம் என தாமதமாக எழும்புவதோ ஒரு நாள் இடைவெளியில் குளிப்பதோ வேண்டாம். ஒரு நாளிற்கு மூன்று வேளை குளிப்பது கூட சிறந்ததுதான் ப்ரண்ட்ஸ்!

நேரத்திற்கு எழுவதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். அப்படியே ஏதேனும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றிற்கு நேரம் ஒதுக்குங்கள். அதிகம் தூங்கி உடம்பை துருப்பிடித்து விட வைக்க வேண்டாம்.

எப்பாதும் செல்போனில் மூழ்குவதை தவிர்த்து உங்கள் வீட்டிற்குள்ளேயான இயல்பினையும் வெளியேயான இயற்கையையும் கொஞ்சம் ரசிக்கலாமே.

எல்லா சூழ்நிலையினையும் முகம் கொடுக்கும் தைரியம், பொஸிடிவ் மைன்ட். இதை விட சிறந்த இம்யூனிட்டியை நம் மன நிலை நமக்கு உருவாக்கித்தரப் போவதில்லை.

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் அதே நேரம் உங்களுக்கு பிடிச்சவங்க படிக்க ஒரு ஷெயார்.😊

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments