இருளை விலக்கி ஒளி தரும்
தன் நிலை மறந்து உருகிடும்
தவித்திடும் உயிர்க்கு உறவாய் இருந்திடும் என் கண்ணீர் வற்றி போகும் வரை
உன்னோடு துணையாய் நான் இருப்பேன்
அச்சம் கண்டு நடுங்கி விடாதே
என்னை பற்ற வைத்து நான் கரைந்திடும் நிலை கண்டு பரிதாபம்
கொள்ள மனம் வரவில்லையா மனிதனே
நானும் ஒர் உயிரென மதியாமலோ பார்த்து இரட்சிக்க பழகி விட்டாயோ
பரவாயில்லை என் ஆயுட் காலம் சிறிதல்லவா
என்னை கொல்லாதவர் யாரும் இல்லை
இருந்தும் ஒளி வீச மறுப்பதில்லை
மனிதா இம்மண்ணில் நான் சிந்தும்
கண்ணீரையையும் கலையாக்கி பேரின்பம் பெற்றாயே
அணு அணுவாய் உருகி கசிந்து பிறர்க்கு ஒளியாவதே என் மகிழ்ச்சி
விடை பெறவா என் மனிதா