யானை

0
2647

யானை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு தாவர உண்ணி (இலையுண்ணி) விலங்காகும்.

  • இது நிலத்தில் வாழும் விலங்குகள் யாவற்றினும் மிகப் பெரியதாகும். மிக நீண்ட நாட்கள் வாழக்கூடியதும் ஆகும் (~ 70 ஆண்டுகள்). மனிதர்கள் தவிர்த்து மற்றைய விலங்குகளில் இதுவே அதிக நாட்கள் வாழும் தரை வாழ் விலங்கு ஆகும். யானைகள் மிகவும் வலிமையானவை.

ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். யானையின் குட்டியைக் கன்று என்றோ குட்டியானை என்றோ சொல்வர். யானை உரக்க எழுப்பும் ஒலியை பிளிறுதல் என்பர்.

  • ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விட உருவத்தில் பெரியவை. பெரிய காது மடல்களைக் கொண்டுள்ளன. ஆப்பிரிக்க யானைகளில் ஆண் பெண் இரண்டும், தந்தங்களைக் கொண்டுள்ளன. ஆனால் ஆசியப் பெண் யானைகளில் தந்தம் அரிதாகவே காணப்படுகிறது.
  • ஆப்பிரிக்க யானைகளின் முதுகுப்புறம், தலைக்கு அடுத்து சற்று உள்நோக்கி வளைந்தும், புடைத்த நெற்றி மேடுகள் இல்லாமல் சமனாகவும் இருக்கும். இவற்றின் துதிக்கை நுனியில் இரண்டு இதழ்கள் இருக்கும். ஆனால் முன்னங்கால்களில் நான்கு அல்லது ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் மூன்று நகங்களும் இருக்கும்.

ஆசிய யானைகளின் முதுகு சற்று உயர்ந்து மேடாக இருக்கும். நெற்றியில் இரு மேடுகளும் காது மடல்கள் சிறியனவாக இருக்கும். துதிக்கை நுனியில் ஒரே ஓர் இதழும் இருக்கும் (மேல் புறம். முன்னங்கால்களில் ஐந்து நகங்களும், பின்னங்கால்களில் நான்கு நகங்களும் இருக்கும்.

elephant
எஞ்சியுள்ள மூன்று சிற்றினங்கள்
  • ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள்
  • ஆப்பிரிக்கக் காட்டு யானைகள்
  • ஆசிய யானைகள்
யானையின் தோற்றம்

ஆண் யானைகள் பொதுவாக 3 மீட்டர் உயரமும் 6000 கிலோகிராம் எடையும் கொண்டவை. யானையின் தோல் மிகவும் தடிப்பானவை. சுமார் 3 செ.மீ தடிப்பு இருக்கும்,. எனினும் மெத்தெனவே இருக்கும். இதனால் கொசு முதலியனவும் கடிக்கும். யானை வலுவான நான்கு கால்களைக் கொண்டிருக்கிறது. யானை பெருத்த உடலைக் கொண்டிருந்தாலும் மலை மீது நெடுங்குத்தான இடங்களிலும் திறம்பட ஏறவும் இறங்கவும் வல்லது. “ஆனைக்கும் அடி சறுக்கும்” என்னும் பழமொழி, யானையின் நெடுங்குத்தான ஏற்ற இறக்கங்களில் அதன் நடைத்திறனைக் குறிப்பிட்டு எழுந்ததாகும்.

யானைகளின் இனப்பெருக்கம்

யானையின் சினைக்காலம் 22 மாதங்கள் ஆகும். இதுவே பாலூட்டிகளில் மிக நீண்ட சினைக்காலம் ஆகும். பொதுவாக இவை ஒரேயொரு கன்றையே ஈனுகின்றன. இரட்டைகள் பிறப்பது மிகவும் அரிது. பிறந்த யானைக் கன்றானது 90 – 115 கிலோகிராம் எடை வரை இருக்கும். யானை ஈனும் முன்னும், ஈனும் பொழுதும், ஈன்ற பின்னரும் அதனைச் சுற்றிலும் மற்ற வளர்ந்த யானைகள் இருந்து மிகவும் உதவுகின்றன. யானைக்கன்று பிறந்ததில் இருந்து, அது யானைக் கூட்டத்தாலேயே வளர்க்கப்படுகின்றது.

யானைகளின் உணவு

யானைகள் மரம் உண்ணும் இலையுண்ணி அல்லது தாவர உண்ணிகள் ஆகும். இவை மூங்கில், கரும்பு போன்றவற்றை விரும்பி உண்கின்றன. இவை ஒரு நாளைக்கு 16 மணி நேரம் உணவு சேகரிப்பதில் ஈடுபடுகின்றன. மேலும் இவற்றின் செரிமானத் திறன் மிகவும் மந்தமானது. எனவே இவை உண்பதில் 40 விழுக்காடே செரிமானம் ஆகிறது. எனவே இவை நிறைய உணவு உட்கொள்ள நேரிடுகிறது. நன்கு வளர்ந்த யானைகள் நாள் ஒன்றுக்கு சுமார் 140 முதல் 270 கிலோ வரை உணவு உட்கொள்கின்றன.

புலன் உணர்வு

யானைகள் மிகச்சிறந்த கேட்கும் திறனையும் மோப்பத் திறனையும் பெற்றுள்ளன. யானையின் கண் சற்று கிட்டப்பார்வை கொண்டது. எனவே, ஒரு யானை தன் பார்வையை விட கூர்மையான கேட்பு சக்தியையும், நுட்பமான மோப்பத்திறனையுமே நம்பி வாழ்கிறது. இவற்றின் தும்பிக்கையும் உணர்திறன் மிக்கது. இவற்றின் காதுகள் மட்டுமன்றி தும்பிக்கையும் அதிர்வுகளை உணர வல்லது. இவற்றின் பாதங்கள் மிகக் குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளையும் உணர வல்லன.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments