யானைக்கள்ளி

0
741

 

 

 

 

ஆங்கிலப் பெயர் : ‘எலிஃபன்ட் காக்டஸ்’ (Elephant Cactus)
தாவரவியல் பெயர்: ‘பகிசிரியஸ் பிரிங்லி’ (Pachycereus pringlei)
வேறு பெயர்கள்: ‘கார்டான்’ (Cardon), ‘மெக்சிகன் ஜயன்ட் காக்டஸ்’ (Mexican Giant Cactus)

* வறண்ட நிலப்பகுதிகளில் காணப்படும் தாவரம் கள்ளி. பெரும்பாலும் செடியாக இருக்கும் எனினும், மரமாகவும் வளரும். 127க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.

* யானைக்கள்ளி, உலகிலேயே உயரமாக வளரக்கூடிய கள்ளி இனம். மெக்சிகோவின் பாஜா கலிஃபோர்னியா (Baja California), சொனோரா (Sonora) பாலைவனப் பகுதிகளில் வளர்கிறது.

* பசுமை மாறா வகையான இது, மிக மெதுவாகவே வளரும். சராசரி உயரம் 32 அடி.

* தண்டுகளில் வரி போன்ற அமைப்புகளும் (Ribs — ரிப்ஸ்), சாம்பல் நிறத்தில் வட்டமாக அமைந்துள்ள கூரிய முட்களும் (Areole — ஏரியோல்) காணப்படுகின்றன. அடித்தண்டில் இருந்து கிளைகள் வளரும்.

* வெள்ளை நிறத்தில், இரவில் பெரிதாகப் பூக்கும். வெளவால், பாலைப்பறவைகள் போன்றவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடக்கும்.

* வேர்களில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை காரணமாக இது மணலோ மண்ணோ துளியும் இல்லாத வறண்ட பாறைகளின் மீதும் இவை செழித்து வளரும்.

* முட்கள் செறிந்திருக்கும் சிவந்த சதைப்பற்றுள்ள பழம், மெக்சிகோ பழங்குடியினரால் உண்ணப்படுகிறது. தண்டின் சதைப்பகுதி வலி நிவாரணியாகவும், தொற்று நீக்கியாகவும் பயன்படுகிறது.

* சொனோரா பாலைவனப்பகுதியில், 63 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள யானைக்கள்ளி 2007ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments