யாவும் கற்பனையே…!

0
1345
மூளையில் பரவிக் கிடந்த
பளுக்களை ஒதுக்கி
ஈர் கண்ணிமை மத்தியில்
புதியதோர் கற்பனை சூழ
 
உறவுகள் மறந்து
ஓர் உலகம் காணும்
அழகிய தேவதை
வைத்த பாதம் எங்கும்
 
நீண்டு வளர்ந்த 
செடிகளின் பூக்கள் 
தலை மேல் வளர்ந்து
தலை வணங்க 
 
சேமித்த புன்னகையை
அதற்கனைத்துக்கும்
அர்ப்பணிக்க,
 
தொடர்ந்த பாத அடியுடன்
நீர்த்துகள் வந்து
கன்னத்தை முத்தமிட
 
திரும்பி பார்த்து
வியந்து நின்றேன் 
வீழ்ச்சியடைந்த 
நீரைக் கண்டு…
 
ஒருவாறு தப்பித்தவளாய்
மேலும் அடி வைக்க
வண்ணம் பரவிய பூச்சிக்கள்
பூவுடன் சேர்த்து
எனையும் வருட,
 
மட்டற்ற மகிழ்ச்சியில்
இதமான குளிர்காற்றுடன் 
ஒருவாறு அமர்ந்து
 
எங்கோ பறப்பது போல்
உணர்ந்து இருக்கை நோக்க
மேகம் எனை எங்கே 
கொண்டு செல்கிறது என
குழப்பத்துடன்,
 
அழகிய பூமியை 
மெய் மறந்து ரசிக்க
திடீரென ஏதோ உணர்ந்து
கண் விழிக்கையில்
 
கண்ட காட்சி யாவும்
கனவு தான் என
உறுதிப்படுத்தலோடு
தொடர்ந்தேன் வழமை 
வேலைகளை…

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments