செய்முறை :
- முதலில் பத்மாசனம் நிலையில் அமரவும்
- பின்னர் கைகளை பின்னே மடித்து, வலது கை இடது காலின் பெருவிரலையும், இடது கை வலது காலின் பெருவிரலையும் தொடுமாறு பார்த்துக் கொள்ளவும்.
- இப்பொழுது மூச்சை வெளியே விட்டவாறு குனிந்து, மூக்கு அல்லது வாயால் தரையைத் தொடவும் இப்படி 30 வினாடிகள் செய்யவும்.
- பின்னர் மூச்சை உள்ளே இழுத்தவாறு எழவும். இப்படி தினமும் 3 முறை செய்து வர வேண்டும்.
மூச்சின் கவனம்
குனியும்போது வெளிமூச்சு, ஆசனத்தின் போது இயல்பான மூச்சு, நிமிரும் போது உள்மூச்சு
உடல் ரீதியான பலன்கள்
முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மை பெறும். சிறுநீரகம் வலிமை அடையும். தலைப்பகுதியில் இரத்த ஓட்டம் மிகும். ஞாபக சக்தி கூடும். பிட்யுட்டரி, பீனியல் தைராய்டு, பாராதைராய்டு ஆகிய சுரப்பிகள் தூண்டி விடப்படும். வாழ்நாள் அதிகரிக்கும். மாணவர்களுக்கு மிகவும் ஏற்ற ஆசனம்.
பயன்பெறும் உறுப்புகள்: முதுகெலும்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதி
குணமாகும் நோய்கள்
மலச்சிக்கல் நீங்கும். கர்ப்பப்பை பிரச்சனைகள் நீங்கும். நீரிழிவு நோய் நீங்கும்.
எச்சரிக்கை
இந்த ஆசனத்தை உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், இடுப்பு வலி உள்ளவர்கள், இதய நோயாளிகள் செய்யக்கூடாது.