#அவன்
அண்டத்தின் ஒரு மூலையிருந்தாலும்
அதி சக்தி படைத்தவன்!!
அகிலத்துக்கே ஆதாரமானவன்!
ஆயிரமாயிரம் அணுகுண்டுகளின் சக்தியை
அனுதினமும் சேதாரம் செய்பவன்!!
#அவள்..!
அழைப்புகள் பலவுண்டு-ஆனால் அவளின்
அமைப்பு எங்கும் ஒன்று!
உலகிற்கே உணவளித்து காப்பவள்..
உயிரின் பரிணாமத்தை வார்ப்பவள்!
அவனுக்கு அவளில் மோகம்
அடங்காத தாகம்!
அவளுக்கோ #அன்னையின் மீது தான் பாசம்!
அதிலன்றி வேறெதிலுமில்லை அவள் நேசம்!!
அவன் அழைத்தான்.!
அவள் மறுத்தாள்!!
அவன் சினந்தான்..
ஆத்திரத்தில் கனன்றான்!
ஆயிரம் #கரங்களை நீட்டி
அவள் ஆவியை இழுத்தான்!!
மோகம் கொண்டவன், அவளை
மேகத்தில் சிறை வைத்தான்!!
அந்தோ..!!
அவளின் அன்னையின் ஈர்ப்பை மீறி
அவளை தன்னோடு சேர்க்க
அவனால் இயலவில்லை!!
தோற்றது அவன் சக்தி
அவள் அன்னையின் ஈர்ப்பின் முன்!!
அவள் மீண்டு வந்தாள்
அன்னையிடம்..
மாசுகள் அனைத்தும் அழிந்து
மழையாக..!!
அதோ..!
தாயின் மடியில் மகள்!!
#அவன் – ஆதவன்
#அவள் – தண்ணீர்
#அன்னை- பூமி
#கரங்கள் – வெப்பக் கதிர்கள்!!
– மழை கவிதை சொல்கிறது
யாரும் குடை பிடிக்காதீர்கள்-