ராட்சஷி

0
1262
வசியக்காரி முனுமுனுத்து-
கொண்டு இருந்தாள்,
மந்திரம் என்று நினைக்கிறேன்;🍁
 
“இந்த பழுப்பேறிய பக்கத்தை
பத்திரப்படுத்த வேண்டும்” என்றபடி,
புத்தகத்தை மூடி வைத்தேன்🍁
 
சில வினாக்கள் மறைக்கப்படுகின்றன!
 
சில விஷயங்கள் அப்படி தான்,
வழி தெரிந்தும் நம் பாதையாக இருக்காது;🍁
 
Her eyes wandered,
Between the lines,
like a wave
hits the shore;🍁
 
கலைந்து கிடக்கும் அறையில்
எனக்கான பகுதியில்
பொழுதை கழித்து கொண்டிருக்கிறேன்,
கவலைகள்,
சோகங்கள்,
இருக்கிறது காதல்காரி,
நீயும் இருக்கிறாய்…🍁
 
என் வலது கையை
உடைத்து விடலாம்
என்று இருக்கிறேன்,
அதுவே சரியென்று
இதயமும் சொல்கிறது;🍁
 
தனிமை பற்றி புனைவு கதை
ஒன்றை எழுதி கொண்டிருக்கிறேன்- பார்த்திபா,
“சர்வ வல்லமை படைத்த பைத்தியக்காரன்”
என்று பெயரும் வைத்து விட்டேன்;🍁
 
என் கனவுகள்
தீயென சுடுகின்றன
காதல்காரி,
உடனே என்னை
அனைத்துக்கொள்;
 
இந்த கனவு எனக்கு
மிகவும் பிடித்திருக்கிறது
காதல்காரி,
அதற்கான ரசனையுடன்
பார்த்து பழகியது
போன்று,
மிகவும் யதார்த்தமாக,
உணர்வுகளை தீண்டியபடியே… 
 
இராவணணோ என்றென்னி
மீண்டும் ஒருமுறை
தலை தடவி நின்றேன்,
சகலமும் சௌகரியங்களுக்கா- எனத் தெரியவில்லை?
ஆனால் இன்று ஒரு நாள் மட்டும்,
நான் நானாக இல்லை என்பது மட்டும் உண்மை🍁
 
பாதி எரிந்த தழலையும்
முடியயிருக்கும் தணளுக்குள்ளே
தள்ளிய படி நகர்ந்தான்
தலைவன்🍁
 
இதோ
இந்த அறையில் இருக்கும்
ஒற்றை ஜன்னல் தான்
என் நம்பிக்கை,
அதன் அருகேயே கிடந்து இருப்பது
எனக்கு வசதியாக உள்ளது;
 
திவ்யமான ஒளியை
கையில் தாங்கி கொள்ளும்
வரம் பெற்றவன்,
பாக்கியவான் ஆகிறான்;
 
சிலவற்றை தாங்கி கொள்கிறேன்,
சிலவற்றை திணித்து நகர்கிறேன்
நான் யார்??
 
சில நேரம் அப்படியே
இருந்துவிட தோன்றுகிறது காதல்காரி
அப்படியே என்றால்…
அப்படியே;
 
புதினங்களின் வழி
இதயத்தை அறுத்து கொண்டிருக்கிறேன்,
என் பசி தீர்ந்துவிடுமா என்பது சந்தேகம் தான்…
குருதி நீக்கி மண்ணில்
புதைக்க ஆசை.
எங்கே மீண்டும்
இந்த இதயம்
துளிர்விடுமோ என்ற பயம்
இருக்குத்தான் செய்கிறது,
சாத்தானின் இதயத்துடிப்பாய்
அறைக்குள்ளே அலறியபடி
இதோ இந்த விடியலை மீண்டும் ஒருமுறை
காறி உமிழ்கிறேன்;
 
சில கவலைகள் அப்படி தான்,
சொல்லாத காதல் போல
அதிக தவிப்பையும்,
பதட்டத்தையும் ஒருங்கே கொண்டிருக்கும்
 
நான் எழுதி முடிக்காத
கதையின் சுவாரஸ்யம்- நீ
 
ஒரு யதார்த்தவாதியின்
அத்துனை கனவுகளையும்
சேமித்து வைத்திருக்கிறேன்
காதல்காரி;
இந்த பிரபஞ்சத்தின்
முடிச்சுகள் பற்றிய கவலைகள்
எனக்கில்லை,
மாறாக அதே பிரபஞ்சத்தின் மீது
மொத்த வெறுப்புகளும்
ஓங்கி நிற்கிறது;
 
சென்று கொண்டிருந்த வளைந்த பாதையின்
மறுப்புறம் பார்த்து கொண்டே நடப்பது,
ஒர் வித நம்பிக்கை தீண்டி கொண்டு தான் இருக்கிறது,
ஆனால் இந்த பயணத்தின் நீளம் தான் போதவில்லை காதல்காரி,
அம்மா கிட்ட சொல்லிட்டு தான் வாயேன்…
உனக்கு உலகம் சுற்றி காட்டுறேன்;🍁
 
இந்த பிரபஞ்சத்தின்
முடிச்சுகள் பற்றிய கவலைகள்
எனக்கில்லை,
மாறாக அதே பிரபஞ்சத்தின் மீது
மொத்த வெறுப்புகளும்
ஓங்கி நிற்கிறது;
 
அந்த கிழிந்த ஜீன்ஸ்காரனின்
ஷூ உண்மையிலேயே 
கிழிந்துள்ளது!
 
உன்னை தூங்க வைக்க நான் சொல்லப் போகும் கதையில், எனை நீ தேடினால்- நலம்🍁
 
சமரசம் கொள்ளாத கலாரசிகை நீ🍁
 
என் உலகத்தில்
வானும் மழையும்
காற்றும் நிலமும்
விதியும் வேதனையும்
வலியும் வழக்கும்
சதியும் தீர்ப்பும்
உயிரும் உளமும்
பாலமும் கரையும்
காலமும் நாழிகையுமாய்
நான் இருக்கிறேன்;
 
மகத்துவம் நிறைந்த மலர் ஒன்று
ஏதேன் தோட்டத்தில் பூத்திருக்கிறது,
 
சர்வ ஜாக்கிரதையாய்
ஒரு கொலை செய்வதில்
என்ன திருப்தி 
இருந்து விட போகிறது?
 
உலகத்தின் ஏதோவொரு மூலையில் அமர்ந்துக் கொண்டு மரணத்தையடையும் வழியில் சிறப்பாக இயங்கி கொண்டிருக்கிறோம்!
 
கலைந்த ஆடைக்குள் ஒளிந்து கொண்டு
குறும்பாக சிரித்தாள் என் ராட்சஷி🍁
 
மனமகிழ்திடும் ஒரு கதை எழுதி
“மீண்டும் ஒரு காதல்” கதையென பெயர்சூட்டி மகிழ்ந்தேன்🍁
 
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments