வரம் வேண்டி நிற்கும் கவிதை

0
2009
425c9b9768e4523337a4219374b08478

 

 

 

 

எழுத்தில் வடிக்க முடியா
ஏழ்மை என் பேனாவுக்கு…

இதய காகிதத்தின்
ஏக்கங்கள் எல்லாம்
சிறகடிக்க முயன்று
சிக்கிச் சின்னாபின்னமாக

இழுபட்டுப்போன
காலத்தைச் சுமக்கமுடியாது
தள்ளாடும் இதயம்

நெருப்பு நீர் உண்டு
எரிமலைக் குழம்பில்
எருவாகி
அழிவுப் புயல்களுக்குள்
ஆழவேரோடி

மீண்டும்,
கருக்கட்டும் அவசரத்தில்
ஈன்றெடுப்பதெல்லாம்
மூக்கும் முழியுமில்லா
வெறும் சதைப் பிண்டங்களையே…

பதிக்கப்படும் முன்னரே
காலாவதியாகிப் போகின்ற
பக்கங்களின்
வெறுமையை ரசித்தபடி

என் மனப்பூமியின்
வெம்மையெல்லாம்
உறிஞ்சும் வரம் வேண்டி
நனைந்தே கிடக்குறேன்
பூச்சியமான
என் ராச்சியத்தில்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments