வாசிப்பின் 10 நன்மைகள்: நீங்கள் ஏன் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும்(10 Benefits of Reading: Why You Should Read Every Day)

0
41226

கடைசியாக நீங்கள் எப்போது ஒரு புத்தகத்தை, சஞ்சிகையை அல்லது பத்திரிகையை வாசித்து முடித்தீர்கள் என்று ஞாபகம் இருக்கின்றதா? ட்விட்டரில், முகநூலில் அல்லது நீங்கள் சமைக்கும் உணவுப்பாக்கெட்டில் உள்ள விடயங்களை வாசிப்பது என்பதுதான் உங்கள் வாசிப்புப் பழக்கமா?
அறவே வாசிப்புப் பழக்கமற்ற எண்ணற்ற நபர்களில் நீங்களும் ஒருவர் எனில் உங்களுக்கான கட்டுரைதான் இது. வாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஏராளம். அவற்றுள் 10 நன்மைகளைப்பற்றி பார்ப்போம்.

1. மன தூண்டுதல் (Mental Stimulation)

வாசிப்புப் பழக்கமானது உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும், ஈடுபாட்டுடனும் வைத்திருப்பதோடு ஆல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பியல் நோய்கள் (அதாவது இது அறிவாற்றல் இழப்பின் அல்லது மறதிநோயின் மிகப் பொதுவான வடிவம் ஆக பார்க்கப்படுகின்றது) ஏற்படுவதை வாசிப்புப்பழக்கமானது பெரும்பாலும் தடுக்கின்றது. மேலும் இத்தகைய நோய்கள் ஏற்படாமல் தடுப்பதற்கு முயற்சிக்கின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உடலில் உள்ள மற்ற தசைகளைப் போலவே, மூளைக்கும் அதை வலுவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உடற்பயிற்சி தேவைப்படுகிறது. எனவே புதிர்களைச் செய்வது மற்றும் சதுரங்கம் போன்ற விளையாட்டுகளை விளையாட பழக்கப்படுத்திக்கொள்வதும் உங்கள் அறிவாற்றலை தூண்டுதலுக்கு உதவியாக இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

 

 

 

 

2. அழுத்த குறைப்பு (Stress Reduction)

வேலையில், உங்கள் தனிப்பட்ட உறவுகளில், அல்லது அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிற பிரச்சினைகளில் உங்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் இருந்தாலும் ஒரு சிறந்த கதையினை நீங்கள் வாசிக்கும் அனுபவமானது இவை அனைத்தையுமே உங்களை மறக்கச் செய்துவிடும்.

நன்கு எழுதப்பட்ட நாவல் உங்களை ஒரு நல்ல மனநிலைக்கு கொண்டுசென்று விடும். அதே நேரத்தில் ஒரு ஈர்க்கக்கூடிய கட்டுரை உங்களை திசைதிருப்பி உங்களின் பதட்டங்களை மறக்கடிக்கச் செய்து உங்களுக்கு ஒரு ஆறுதலான, ஓய்வான மனநிலையை வழங்கும்.

3. அறிவு (Knowledge)

நீங்கள் வாசிக்கும் ஒவ்வொரு விடயமும் உங்கள் அறிவை அதிகரிக்கச் செய்வதோடு புதிய விடயங்களை தெரிந்து கொண்ட நபராக உங்களை மாற்றும். உங்களிடம் தோன்றும் அதிகமான அறிவானது நீங்கள் எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் சமாளிக்க சிறந்த ஆயுதம்ஆகும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் நாம் எதிர்காலத்தில் எத்தகைய மோசமான சூழ்நிலைக்கும் முகம் கொடுக்க வேண்டி வரலாம். இப்போது நமக்குப் பாதுகாப்பாக இருக்கும் வேலை, உடைமைகள், பணம், ஏன் உடல்நலம் கூட நமக்கு இழக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். ஆனால் நாம் பெற்றுக் கொள்ளும் அறிவானதை போன்றவற்றை ஒருபோதும் ஒருவராலும் நம்மிடமிருந்து எடுக்க முடியாது.

4. சொல் விரிவாக்கம் (Vocabulary Expansion)

அதாவது நீங்கள் எவ்வளவு அதிகமாகப் படிக்கிறீர்களோ அவ்வளவு அதிகமான சொற்களை, வார்த்தைகளை உங்களால் அறிந்து கொள்ள முடியும். அது உங்கள் சொந்த மொழியிலோ அல்லது பிற மொழி நூல்களாகவோ கூட அமைந்திருக்கலாம். இது உங்களை அறியாமலே உங்கள் சொல் வளத்தை அதிகப்படுத்தி விடுகின்றது.

எந்தவொரு தொழிலிலும் சிறந்த பேச்சுவண்மையானது உங்களை தனித்து சிறப்பித்துக்காட்டும் என்பதில் எதுவித ஐயமுமில்லை. உங்களால் எந்த ஒரு விடயத்தைப்பற்றியும் தெளிவாகவும் தன்னம்பிக்கையுடனும் அதிகம் பேச முடியும். பரந்த சொல்லாற்றலற்ற மற்றும் இலக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாதவர்களைக் காட்டிலும் நன்கு கற்கக்கூடிய பல்வேறு தலைப்புகளில் அறிவுள்ளவர்கள் பதவி உயர்வுகளை விரைவாகவும் அடிக்கடியும் பெறக்கூடிய வாய்ப்புக்களை அடைகிறார்கள்.

புதிய மொழிகளைக் கற்பதற்கு புத்தகங்களைப் படிப்பதும் மிக முக்கியம் ஆகும். ஏனெனில் பிற மொழிகளைக்கற்பதானது எழுத்தாற்றலை மற்றும் பேச்சாற்றலை வளப்படுத்த மிகச்சிறந்த உத்தியாகும்.

5. நினைவு மேம்பாடு (Memory Improvement)

நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது கதாபாத்திரங்கள், அவற்றின் பின்னணிகள், லட்சியங்கள், வரலாறு மற்றும் நுணுக்கங்கள், அத்துடன் ஒவ்வொரு கதையிலும் உங்களை கடத்திச்செல்லும் கொண்டு செல்லும் பல்வேறு விடயங்களையும், மாற்றங்களையும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும். நினைவில் கொள்வது மிகவும் பொதுவான ஒரு விடயம். ஆனால் மூளை என்பது அற்புதமாக நம்மால் ஆர்வத்துடன் கிரகிக்கக்கூடிய விடயந்களை எளிதாகவே நினைவில் வைத்துக்கொள்ளும்.

ஆச்சரியப்படும் விதமாக நீங்கள் உருவாக்கும் ஒவ்வொரு புதிய நினைவகமும் புதிய பாதைகளை உங்கள் மூளையில் உருவாக்குவதோடு மற்றும் ஏற்கனவே உள்ள உங்கள் நினைவாற்றலையும் பலப்படுத்துகிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா?

மூளை சக்தியை எவ்வாறு அதிகரிப்பது மற்றும் 10ஒ புத்திசாலித்தனமாக மாறுவது பற்றி மேலும் அறிய நீங்கள் விரும்பினால் இந்த நுட்பத்தைப் பாருங்கள்! (மிக விரைவில் பிரசுரிக்கப்படும்)

6. வலுவான பகுப்பாய்வு சிந்தனை திறன் (Stronger Analytical Thinking Skills)

நீங்கள் எப்போதாவது ஒரு அற்புதமான மர்ம நாவலைப் படித்திருக்கிறீர்களா? புத்தகத்தை முடிப்பதற்கு முன்பு அந்த மர்ம நாவல் இப்படித்தான் முடியும் என நீங்களாகவே அனுமானித்திருக்கிறீர்களா? இது ஏனென்று நீங்கள் சிந்தித்ததுண்டா? நமது மூளையானது தனக்கு வழங்கப்பட்ட அனைத்து விவரங்களையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்பறியும் திறன் (whodunit)மூலம் அவற்றை வரிசைப்படுத்தி விமர்சன மற்றும் பகுப்பாய்வு செய்து ஒரு தீர்மானத்திற்கு வருகின்றது.

விவரங்களை பகுப்பாய்வு செய்வதற்கான அதே திறன்தான் ஏதேனும் சதித்திட்டத்தை விமர்சிக்கும்போதும் மனிதர்களுக்கு வருகின்றது.

மற்றவர்களுடன் நீங்கள் வாசித்த புத்தகத்தைப் பற்றி விவாதிக்க உங்களுக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களையும் நீங்கள் உள்வாங்கியிருந்தால் உங்கள் கருத்துக்களை தெளிவாக உங்களால் கூறவும், கலந்துரையாடவும், விவாதிக்கவும் உங்களால் முடியும்.

 

 

 

 

 

7. மேம்படுத்தப்பட்ட கவனம் மற்றும் செறிவு (Improved Focus and Concentration)

இணைய உலகில் ஒவ்வொரு நாளும் நாம் பல பணிகளைச் செய்யும்போது ஒரே நேரத்தில் வெவ்வேறு திசைகளில் பல மில்லியன் விடயங்களில் நாம் கவனம் செலுத்துகின்றோம். ஒரு 5 நிமிட இடைவெளியில் சராசரி நபர் ஒருவர் ஒரு குறித்த பணியில் பணிபுரிந்து கொண்டே மின்னஞ்சலைச் சரிபார்ப்பதுஇ ஓரிரு நபர்களுடன் அரட்டை அடிப்பது (whatsapp / fb போன்றவை வழியாக), ட்விட்டரில் ஒரு கண் வைத்திருப்பது, ஸ்மார்ட்போனை கண்காணிப்பது, மற்றும் சக ஊழியர்களுடன் தொடர்புகொள்வது போன்ற பல வேலைகளை செய்கின்றனர். இவ்வாறு ஒரே நேரத்தில் பல விடயங்களில் ஈடுபடுவதானது மன அழுத்தத்தை அதிகரிப்பதோடு குறித்த பணியில் நமது உற்பத்தித்திறனையும் குறைவடையச் செய்கின்றது.

ஆனால் நீங்கள் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது உங்கள் கவனமெல்லாம் கதையில் குவிக்கப்படுவதோடு உலகமே மறந்த நிலையில் நீங்கள் அந்த கதையோடு பயணப்பட்டு விடுகின்றீர்கள்.இது உங்களின் கவனத்தை சிதறச்செய்யாமல் ஒரே விடயத்தை நோக்கி உங்களை நல்ல வாசிப்பானது கொண்டு செல்கின்றது.

நீங்கள் வேலைக்கு பஸ்ஸிலோ புகையிரதத்திலோ செல்பவர் எனில் உங்கள் பயணத்தில் 15-20 நிமிடங்கள் படிப்பதற்கு முயற்சித்துப்பாருங்கள். நீங்கள் அலுவலகத்திற்கு வந்ததும் எவ்வளவு கவனம் செலுத்துகிறீர்கள் என்பதில் ஆச்சரியப்படுவீர்கள்.

8. சிறந்த எழுதும் திறன்(Better Writing Skills)

நீங்கள் ஒரு எழுத்தாளர் எனில் வாசிப்பானது சொல்வளத்தை அதிகரிப்பதோடு மேலும் படைப்புக்களை புதிய முறையில் படைப்பதற்கும் வழிவகுக்கும். நீங்கள் உங்களுக்குப்பிடித்த நன்கு பிரபல்யமான ஒரு எழுத்தாளரின் சிறந்த வாசகர் எனில் நீங்கள் உங்கள் சொந்த எழுத்தில் படைப்புக்களை படைக்க முற்படும்போது அந்த குறித்த எழுத்தாளரின் சாயலை உங்கள் படைப்புக்கள் பிரதிபலிக்கும். ஏனென்றால் மற்ற எழுத்தாளர்களின் எழுதும் தன்மை, மற்றும் எழுதும் பாணிகளைக் கவனிப்பது உங்கள் சொந்த படைப்பில் குறித்தளவு மாற்றத்தை கொண்டு வரும்.

உதாரணமாக இசைக்கலைஞர்கள் ஒருவருக்கொருவர் ஒரே மாதிரியான சாயல் கொண்ட இசை வெளியிடுவதும், ஓவியர்கள் ஆரம்பகால ஓவியர்களின் தனித்த நுட்பங்களைப் பயன்படுத்துவதும் எவ்வாறு உள்ளதோ அவ்வாறே எழுத்தாளர்கள் மற்றவர்களின் படைப்புகளைப் படிப்பதன் மூலம் உரைநடையை எவ்வாறு வடிவமைப்பது மற்றும் தன் எழுத்தை எவ்வாறு சுவாரஷ்யமாக கொண்டு செல்வது என்றும் கற்றுக்கொள்கிறார்கள். 

9. அமைதி (Tranquility)

ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பதானது உங்கள் மன இறுக்கங்களைப்போக்குவதோடு மகத்தான உள் அமைதியையும் அமைதியையும் உங்களுக்கு தரக்கூடும்.

ஆன்மீக நூல்களைப் படிப்பது இரத்த அழுத்தத்தைக் குறைத்து மிகுந்த அமைதியைக் கொண்டுவரும். அதே நேரத்தில் உளவியல் நூல்களைப் படிப்பதானது சில மனநிலைக் கோளாறுகள் மற்றும் லேசான மனநோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

10. இலவச பொழுதுபோக்கு (Free Entertainment)

நம்மில் பலர் புத்தகங்களை வாங்க விரும்புகிறோம் ஆனால் எல்லோரும் அவ்வாறு வாங்குவதில்லை. ஆனால், உண்மையிலேயே புத்தகங்கள் மிகவும் விலைமதிப்பற்றவை.

நூல்கள் வாசிப்பதானது குறைந்த பட்ஜெட் பொழுதுபோக்காகும். நம்மில் பலர் இப்போதெல்லாம் அந்த விடயத்தினை தவற விடுகின்றோம். நாம் வசிக்கும் ஊரில் உள்ள நூலகத்தில் ஒரு அங்கத்தவராகுவதன் மூலம் நல்ல நூல்களை வாசிக்கும் சிறந்த அனுபவத்தைப் பெற முடியும்.

உள்ளூர் நூலகம் இல்லாத ஒரு பகுதியில் நீங்கள் வாழ நேர்ந்தால் அல்லது உங்களால் நூலகத்திற்கு செல்ல முடியாது எனத் தோன்றினால் பிரச்சினையில்லை. ஏனெனில் பெரும்பாலான நூலகங்கள் தங்கள் புத்தகங்களை PDF மற்றும் ePub வடிவத்தில் தருகின்றன. இப்போது அதற்காக தனிப்பட்ட சில வலைத்தளங்களும் இயங்கி வருகின்றன. எனவே அவற்றை உங்கள் ஈ-ரீடர், ஐபாட், உங்கள் கணினித் திரை அல்லது ஸ்மார்ட் போனிலேயே இருக்கும் இடத்திலிருந்தவாறே படிக்க முடியும். இலவச மின் புத்தகங்களை பதிவிறக்கம் செய்து உங்கள் வாசிப்பை சுவைபடுத்தலாம்.

 

 

 

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு கல்வியறிவுள்ள நபருக்கும் ஒவ்வொரு வாசிப்பு வகை உள்ளது. உங்கள் வாசிப்பின் சுவை கிளாசிக்கல் இலக்கியம்இ கவிதைஇ பேஷன் இதழ்கள், சுயசரிதைகள், மத நூல்கள், இளம் வயது புத்தகங்கள், உளவியல் நூல்கள் அல்லது காதல் நாவல்கள் ஆகியவற்றில் ஏதாவதாகவும் இருக்கலாம். அவற்றைக் கண்டுகொள்வது உங்களை சரர்ந்தது.

உங்கள் கணினியிலிருந்தும் இயந்திரத்தனமான வாழ்க்கையிலிருந்தும் சிறிது நேரம் விலகி உங்களுக்குப் பிடித்த புத்தகத்தைத் திறந்து சிறிது நேரம் உங்கள் ஆன்மாவை வாசிப்பால் நிரப்பிடுங்கள்.

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments