வானும் மண்ணும் நம் வசமே

1
829

 

 

 

 

வானும் மண்ணும் நம் வசமே
(தன்முனைக் கவிதைகள்)

நஸீரா எஸ்.ஆப்தீன் BA, MA ( Pub. Administration ) BA,
ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர்
ஏறாவூர், இலங்கை.

எனது இரண்டாவது நூலான ”வானும் மண்ணும் நம் வசமே” எனும் பெயரில் தன்முனைக் கவிதைகளில் இடம்பெற்ற கவிதைகளை நீர்மை வலைத்தளத்தில் பகிர்கின்றேன்.

”தன்முனைக்கவிதைகள்” என்பது நானிலு எனப்படும் தெலுங்கு கவிதை வடிவத்தின் மறு பிறவியெனலாம். எனது முதலாவது நூலாகிய ”ஹைக்கூவில் கரைவோமா?” என்ற நூல் ஜப்பானில் தோற்றம் பெற்ற 03 வரிக் கவிதையான ஹைக்கூ கவிதைகள் பற்றி ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஹைக்கூவின் தோற்றம், வளர்ச்சி, ஹைக்கூவிற்கான இலக்கணங்கள், ஹைக்கூ வகைமைகள் என்றவாறு பல்வேறு வடிவங்களில் வெளிவந்து இருக்கும் நிலையில், இங்கு 04 வரிக் கவிதைகளான நானிலுவிலிருந்து உருவான தன்முனைக் கவிதைகளை வடிக்கின்றேன். தெலுங்கில் நானிலு எனப்படும் அதிநவீன இலக்கிய வடிவத்தை தமிழகக் கவிஞரான கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்கள் தன்முனைக் கவிதைகளெனப் பெயரிட்டு தமிழுக்கு அறிமுகப் படுத்தியுள்ளார். உலகத் தமிழ்க் கவிஞர்கள் இந்தக் கவிதை வகைமையின் எளிமை, அழகு நிறை இலக்கணக் குறிப்பில் ஈர்க்கப்பட்டு ஆர்வத்துடன் தன்முனைக் கவிதைகளை எழுதி வருகின்றனர். 2017 நவம்பர் மாதம் தன்முனைக் கவிதைகள் எனும் முக நூல் குழுமத்தின் ஊடாக இம்முயற்சி ஊக்குவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல தன்முனைக் கவிதை நூல்களும் வெளியிடப்பட்டு வருகின்றன. 2019 இல் வெளியிடப்பட்ட ”வானம் தொடும் வண்ணத்துப்பூச்சிகள்” நூலில் உலகளாவிய ரீதியில் 52 கவிஞர்களின் தன்முனைக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றுள் என்னுடைய தன்முனைக் கவிதைகளும் இடம் பெற்றிருப்பதைப் பெருமிதத்துடன் கூறிக் கொள்கின்றேன். சில கவிதைகளை இப்போது பகிர்கின்றேன். இனிவரும் படைப்புக்களில் தொடர்ச்சியாக எனது கவிதைகள் பதிவேற்றப்படும் என்பதை அறியத்தருகின்றேன்.

கலைந்து கிடக்கின்றன
மேசையெங்கும் புத்தகங்கள்.
பத்திரமாய்க் கோவையில்
கல்விச் சான்றிதழ்கள்

***

பதினொரு வருடங்கள்
படித்த புத்தகக் கட்டுகள்.
ஒற்றைத் தாளில் கோவையில்
பரீட்சைப் பெறுபேறு.

***

புத்தக அலுமாரியில்
அடுக்கடுக்காய்ப் புத்தகங்கள்.
ஒன்றொன்றாய்க் குறைகிறது
இரவல் கொடுப்பதால்.

***

பெறுமதி மிக்க நூல்கள்
அருகி வருகின்றன.
புதிய பதிப்புகள்
இடம் பெறாததால்.

***

 

 

 

 

 

4 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Mohamed Munafar
Mohamed Munafar
3 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

ஆழமான கருத்து நிறைந்த வரிகள்