வாழை மரம் (Banana Tree)

0
5170
  • வாழைப்பழம்  என்பது தாவரவியலில் சதைப்பற்றுள்ளக் கனியும்,வாழைப்பேரினத்தில் உள்ள பெரும் குறுஞ்செடி வகைப் பூக்கும் தாவரத்தில் உற்பத்தியாகும் உண்ணத்தக்க பழமாகும்.சில நாடுகளில் இது சமைக்கும் வாழைக் காய்களாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • இப்பழங்கள் அளவு, நிறம், கெட்டியான தன்மை என்பவற்றால் பல வகைகளாக உள்ளபோதிலும், அவை பொதுவாக நீண்டு வளைந்திருக்கும். மிருதுவாக சதையைக் கொண்ட இது மஞ்சள், பச்சை, சிவப்பு, பளுப்பு, ஊதா நிறத் தோல்களினால் மூடப்பட்டிருக்கும்.வாழை‌ப் பழ‌ம் எ‌‌ன்பது ‌மிகவு‌ம் ம‌லிவான ‌விலை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் பழ‌ம் எ‌ன்ற போ‌திலு‌ம், அ‌தி‌ல் ‌இ‌ரு‌க்கு‌ம் ச‌‌த்துகளு‌ம், மரு‌த்துவ குண‌ங்களு‌ம் வேறு எ‌ந்த பழ‌த்‌திலு‌ம் இரு‌க்காது.
  • வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும். ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் நிறைந்துள்ள சத்துக்களைப் பற்றி சொன்னால், நம்பமாட்டீர்கள்.

வாழைப்பழம் ஆரோக்கியமானது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியம் குறைவாகவும் உள்ளதால்,

இதில் எண்ணற்ற நன்மைகள் உள்ளடங்கியுள்ளது. பொதுவாக வாழைப்பழத்தை அனைவருமே சாப்பிடலாம். நீரிழிவு, இதய நோய், சிறுநீரக நோய்கள் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் கூட எவ்வித அச்சமும் இல்லாமல் வாழைப்பழத்தை சாப்பிடலாம்.

  • பழுத்த வாழைப்பழம், பழுக்காத வாழைப்பழத்தைவிட நார்ச்சத்து மிகுந்த 
Banana Tree

ஆகாரமாகவும், வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்ததாகவும் உள்ளது. பழுத்த வாழைப்பழம், அதிக வைட்டமின்களையும், புரதங்களையும், பொட்டாசியம், ஆன்டி ஆக்சிடென்டுகளையும் அளிப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

  • நன்கு பழுத்த வாழைப்பழங்களின் மீது காணப்படும் கரும்புள்ளிகள், டி.என்.எப். எனப்படும் டியூமர் நேசிரோசிஸ் பாக்டர் எனப்படும் ஒரு வேதிப்பொருளை உருவாக்குகின்றன. இது புற்றுச் செல்களை எதிர்த்துப் போராடக்கூடியது.
  • வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி, உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.
  • குறிப்பாக வாழைப்பழத்தில் மட்டும் நன்மைகள் நிறைந்திருப்பதில்லை, வாழைமரத்தின் ஒவ்வொரு பகுதியும் பல்வேறு வகையில் பயன்படுகிறது. மேலும் அதன் ஒவ்வொன்றிலும், நிறைய சத்துக்கள் உள்ளன.
இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது

தொடர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டு வருவது, ருமட்டாய்டு ஆர்த்தரைடீஸ், மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

நோய்கள் வராமல் தடுக்கும்

தினமும் ஒரு பழுத்த வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவந்தால் ரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி, எலும்புச்சிதைவு மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும்

இவை தவிர, பழுத்த வாழைப்பழத்தை உண்டுவந்தால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்

தினமும் பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதிலுள்ள நார்ச்சத்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்தும்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments