விமோசனம்

0
474
FB_IMG_1589323606583-cbd67f7a

அன்பே !
தெருவோரம் உன் தோள் பற்றி
நாம் நடந்து சென்ற அந்த நாள் ஞாபகம் இருக்கிறதா?
கருப்பாடை அணிந்த மேகங்களும் பச்சைப் போர்வை போர்த்திய மரங்களும் நீல மை பூசிய நீரோடையும் நம்முடன் நடந்து வந்தன நினைவிருக்கிறதா ?

அன்பே !
காதல் தேசத்திற்கு நாம் சுற்றுப்பயணம் சென்ற போது
இரவுக் கடலில் குளித்து விட்டு நட்சத்திர ஆடை அணிந்து நிலவுத் தீவில் தீ மூட்டிக் குளிர் காய்ந்தோமே அது உன் நினைவில் நிற்கிறதா ?

அன்று அங்கு உன்னை தொலைத்துவிட்டு
இன்று இங்கு என்னுள் உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்….

விதி விபத்தில் உன்னைப் பறிகொடுத்த பாவத்திற்காய் வீட்டுக் கூண்டினுள் என்னை நானே சிறைப்படுத்திக் கொண்டேன்
கண்ணீர் ஊற்றி அணைத்த உன் நினைவுத் தழல் இன்னமும் என் நெஞ்சினில் புகைந்து கொண்டிருக்கிறது…

நீயற்ற வெறுமைகள் ஊசியாய் மாறி உள்ளத்தை குத்திக் கிழிக்கின்றன
உயிரைப் பிரிந்த என் இதய ஆன்மா உன்னைச் சுற்றி அலைந்து கொண்டிருக்கிறது காதலில் விமோசனம் தேடி…..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments