விழித்தெழு தோழா!

0
904
getty_522390562_328684

 

 

 

 

ஓடிவரும் காற்று, ஓயாது வீசித்
தன்னையேத் தாக்கி தானாக வீழ்த்துமென்று
தானறிந்த பின்னாலும் பூக்கள் காற்றால் அழுவதில்லை
பூத்தேதான் குலுங்குமடா
உந்தனை வீழ்த்திட, உலகமே காத்திட – நீ
ஓடி ஒளிந்து உறங்குவது ஏன்?

நூறுகோடி பேருக்குச்
சோறுபோட்ட விவசாயியைக்
கூறுபோட்டுக் கொன்றபோது,
வேறு என்ன செய்யவென்று
ஷேர் பண்ணி சிந்தித்த சிந்தனையாளனே!
வீறுகொண்டெழுந்து வெற்றிப் பெற்றிடும்
வீரன் தமிழன் மறந்தாயோ?

நாலுபிடி சோறுஇன்றி விவசாயி
நாள்தோறும் போராடி இறக்கும்போது,
நாளை என்றோர் நாள்பிறக்கும்
நாளையே நிச்சயம் போரிடுவேனென்று
நாள்தோறும் உறுதி ஏற்பது ஏன்?
இன்றே காப்போம் எழுந்திடு வா.

நாகரிகத்தின் தொட்டிலிலே – நல்ல
பெண்தெய்வம் வாழ்கின்ற நாட்டினிலே
தங்கையும் தோழியும் அன்பு அக்காளும்
மானம் இழப்பதை மறப்பது ஏன்?
ஆண் என்னும் பெயரில் அலைந்திடும்சில
அரக்கரை அழித்திட எழுந்திடு வா!

விழித்து, பசித்து, தனித்திருவென்று
வீரத்துறவி சொன்னாரே; விவேகத் துறவி சொன்னாரே
நூறே இளைஞர் போதும் எனக்கு – இவ்
வூரே உருப்படும் என்றாரே.
பாரை ஆளப் பிறந்த வீரா,
விழிகள் விழித்து, வினைகள் பசித்து,
”எழுந்துநில் தோழா” 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments