வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க உங்களுக்கான வெப்சைட்டுகள்!

0
1645

ஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ஏனென்றால் இதில் இருக்கும் வேலைகள் அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் பொருந்த கூடியதாக உள்ளது. மேலும், இவை இருந்த இடத்தில் இருந்தே பல ஆயிரங்களில் சம்பாதிக்க வைக்கிறது.

பகுதி நேர வேலை

இணையதளங்கள் நீங்கள் செலவிடும் ஒவ்வொரு மணி நேரமும் இந்திய மதிப்பில் ரூ.1000 முதல் ரூ.5000 வரையிலான ஊதியம் வழங்கக் கூடிய பல நூற்றுக் கணக்கான வேலைகள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு ஏற்ற சில வகையான வேலைகளை மட்டும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

பகுதி நேர எழுத்தர் வேலைகள் :

இந்த வகையான ஆன்லைன் வேலைகள் இ-புத்தகம் எழுதுதல், கதை எழுதுதல், டேட்டா என்ட்ரி மற்றும் பல எழுது வேலைகள் வழங்குகின்றன. சாதாரணமாகவே நீங்கள் ஒரு பிளாக் (Blog) இணையம் தொடங்கி சம்பாதிப்பதை விட வளர்ந்த நிறுவனத்தின் கீழ் இவ்வேலையைச் செய்வதன் மூலம் மாதம் பல ஆயிரங்களை நீங்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்.

பகுதி நேரத் தொழில்நுட்ப வேலைகள் :

நீங்கள் தொழில் நுட்பத் துறையை சார்ந்தவராக இருந்தால் அல்லது தொழில் நுட்ப அறிவு இருப்பின் இந்த வேலை உங்களுக்கு தாராளமாகப் பொருந்தும். C, C++, Java, .Net Framework, HTML, Delphi போன்ற கணினி மொழியில் புரோகிராம் எழுதுவதே இப்பணியாகும். இதன் மூலம் ஆன்லைன் வேலை ஒன்றிற்கு ஆரம்பமாகவே ரூ.15 ஆயிரம் வரையில் சம்பாதிக்க முடியும்.

இணையதள (WEBSITE) வடிவமைப்பு :

நீங்கள் இணையதள வடிவமைப்பதில் வல்லவராக இருந்தால் அல்லது அதுகுறித்தான அறிவு உள்ளவராக இருந்தால் இது உங்களுக்கான ஆன்லைன் வேலை தான். இதன் மூலம் கணிசமான தொகையினை பெறலாம்

லோகோ (LOGO) தயாரித்தல் :

உங்களுக்குக் கணினியில் கிராபிக்ஸ் வடிவமைப்பு, போட்டோ எடிட்டிங் தெரியும் என்றால் உங்களுக்கு மிகவும் பொருத்தமான ஆன்லைன் வேலையாகும். இதன் மூலம் நீங்கள் வடிவமைக்கும் ஒவ்வொரு லோகோவிற்கும் குறைந்தது ரூ.2 முதல் ரூ.3 ஆயிரம் வரையில் சம்பாதிக்க முடியும்.

பகுதி நேரப் புகைப்பட பணியாளர் :

உங்க கையில் நல்ல புகைப்படக் கருவியும், அதனை முழுமையாகப் பயன்படுத்தக் கூடிய திறமையும், கற்பனையும் மட்டுமே போதும். ஆயிரம் என்ன உங்களது திறமைமிகு புகைப்படத்திற்கு ஏற்ப லட்சங்களில் கூட சம்பாதிக்கலாம். உங்கள் புகைப்படங்களை விற்பதன் மூலமாகவோ அல்லது அவர்களுக்கான புகைப்படங்களை எடுத்துக் கொடுப்பதன் மூலமாகவோ ஈசியாகவே இத்துறையில் பணத்தை ஈட்ட முடியும்.

மெய்நிகர (VIRTUAL) உதவியாளர் :

இதன் மூலம் நீங்கள் ஒருவரின் நேர்முக உதவியாளராக வீட்டில் இருந்தபடியே பணியாற்றலாம். அவர்களுக்கான முன்னேற்பாடுகளைச் சரிசெய்தல், அவர்களின் அன்றாட பணிகளை பட்டியலிடுதல், அவர்களின் மின்னஞ்சல்களைப் படித்து அதற்கான பதில்களை அனுப்புதல் போன்றவை இதில் அடங்கும். இதன் மூலம் ஒரு மணி நேரத்திற்கு உங்களுக்கான வருமானமாக ரூ.500 முதல் ரூ.800 வரையில் சம்பாதிக்கலாம்.

டாப் 5 வேலை வாய்ப்பு இணையதளங்கள்

இங்கே சிறந்த 5 பகுதி நேரப் பணியாளர் இணையதளங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கீழ்க் கண்ட அனைத்து இணையதளங்களும் பல வருடங்களாக ஆன்லைன் வேலையை வழங்கி வருகின்றன. மேலும் பல பகுதி நேரப் பணியாளர்களின் விமர்சனங்களின் அடிப்படையில் இது தொகுக்கப்பட்டுள்ளது.

upwork (அப்வேர்க்)

அப்வேர்க் பகுதி நேரப் பணியாளர் இணையதளம் உலக அளவில் அனைவராலும் பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும். ஏராளமான ஆன்லைன் வேலைகள் மற்றும் பணியாளர்களை இது கொண்டுள்ளது. உங்கள் முன்அனுபவங்களை குறித்து ஒரு சுயவிபரம் தயாரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு பணியை பெறுவதற்கும் நீங்கள் அந்தப் பணிக்கேற்ற விலையைக் கேட்க முடியும். எனவே நல்ல புரொபைல் மற்றும் குறைந்த விலை கேட்டல் முதலியவை உங்களின் பணி பெறும் வாய்ப்பை அதிகரிக்கும்.

https://www.upwork.com/

Odesk (ஓடெஸ்க்)
ஈலேன்ஸ் இணையதளத்திற்கு மாற்றாக ஒன்றைத் தேர்ந்தெடுக்க நீங்கள் விரும்பினால் உங்களுக்கு ஓடெஸ்க் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம். இங்கு நீங்கள் Sign Up செய்த முதல் நாளே உங்களுக்கான பணியை பெற முடியும். முதன் முதலில் பணியை தொடங்குபவர் மற்றும் முன் அனுபவமுள்ளவர் என அனைவருக்கும் எண்ணற்ற பணிகளை கொண்டுள்ள ஒடெக்ஸ் இணையதளமானது அதற்கேற்ற பணத்தையும் வழங்குகிறது. இன்றே நீங்கள் இந்த இணையதளத்தில் சேர்ந்து உங்களின் வருமானத்தைத் துவக்கலாம்.

https://www.odeskwork.com/register/

Freelancer
ஃப்ரீலான்சர் இணையதளமானது கடந்த பல வருடங்களாகப் பகுதி நேர வேலைப் பணிகளை இணையத்தில் வழங்கிவருகின்றது. மேலும் இதன் எண்ணற்ற வேலைகள் பல பணியாளர்களைக் கொண்டுள்ளதோடு, பணியாளர்களின் நன் மதிப்பையும் பெற்றுள்ளது.

https://www.freelancer.com/

Fiverr
பைவ்வர் இணையதளத்தில் உங்களின் பணிகளை விற்கலாம். ஒவ்வொரு பணியும் கிக்ஸ் எனப்படும். ஒவ்வொரு கிக்ஸ்ம் ரூ.350 மதிப்புடையதாக இருக்க வேண்டும். எந்த வகையான பணிகளையும் நீங்கள் விற்கலாம். உதாரணத்திற்குப் படம் வரைதல், கற்பனையான ஓவியம், லோகோ வடிவமைப்பு, மொழிபெயர்ப்பு, சிறுகதை எழுதுதல் என உங்களது திறமைக்கு ஏற்ப இதில் பணியாற்றலாம்.

https://www.fiverr.com/

Guru
குரு, பகுதி நேரப் பணியாளர் இணையதளமாகப் பிற இணையதளங்களைப் போலவே கடந்த சில வருடங்களாகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் உள்ள ஆன்லைன் வேலைகள் அனைத்துத் தர பணியாளர்களுக்கும் பொருந்தக் கூடியதாகவும் உள்ளது. நீங்கள் உங்கள் பணியை தொடர இது உகந்த இணையதளமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

https://www.guru.com/

மூலம் : வலைத்தளப்பகிர்வு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments