வெந்தயக்கீரை இட்லி

0
1604

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 2 கப்

வெந்தயக்கீரை – 2 கட்டு

பெரிய வெங்காயம் – 1

எலுமிச்சம்பழச் சாறு – ஒரு டேபிள்ஸ்பூன்,

உப்பு – சிட்டிகை

வறுத்துப் பொடிக்க: காய்ந்த மிளகாய் – 5, கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பெருங்காயம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.

Fenugreek spinach Idly

தாளிக்க:  கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 2 டீஸ்பூன், நெய் – 1 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

  • வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெயில்லாமல் சிவக்க வறுத்துப் பொடித்துக்கொள்ளுங்கள். கீரையை பொடியாக நறுக்கி அலசிக்கொள்ளுங்கள். 
  • வெங்காயத்தையும் பொடியாக நறுக்குங்கள். இட்லி மாவைக் கொண்டு, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
Fenugreek spinach Idly
  • வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை பொடித்துக்கொள்ளுங்கள். எண்ணெய், நெய்யைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், சிட்டிகை உப்பு, மஞ்சள்தூள் சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கிய தும் கீரையை சேர்த்து, மேலும் நன்கு வதக்குங்கள்.
  • பிறகு, பொடித்த பொடியைத் தூவி, இட்லிகளைச் சேர்த்து, எலுமிச்சம்பழச் சாறு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலந்து சூடாகப் பரிமாறுங்கள்.

நன்மைகள் : ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவுகளை சீரான விகிதத்தில் பாதுகாக்க வெந்தயக்கீரை உதவுகிறது.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments