வெந்தயக் குழம்பு

0
1339

தேவையான பொருட்கள்:

வெங்காயம் – 2

தக்காளி – 2

புளி – எலு‌மி‌ச்சை அளவு

வெந்தயம் – அரை தேக்கரண்டி

மிளகாய் தூ‌ள்- 1 தேக்கரண்டி

த‌னியா தூ‌ள் – 2 தே‌க்கர‌ண்டி

மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி

தே‌ங்கா‌ய் – 2 ப‌த்தைக‌ள்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி

கொத்துமல்லி, கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய் – தாளிக்க

Fenugreek Curry

செய்முறை:

  • வெந்தயத்தை பொன்னிறமாக (தீய்த்து விடக் கூடாது) வறுத்து அதனை மிக்சியில் போட்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை தேவையான அளவிற்கு நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். தே‌ங்கா‌யை‌ ந‌ன்கு மை போ‌ல் அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
  • குழம்பு வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து பாத்திரம் காய்ந்ததும் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு பொறிந்ததும் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை போட்டு நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். 
  • பின்னர் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். தக்காளி வதங்கி நன்கு மசிந்து விட வேண்டும். அதற்காக தக்காளியுடன் உப்பு போட்டு வதக்கினால் சீக்கிரம் வதங்கி விடும். இ‌ப்போது அரை‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் தே‌‌ங்காயையு‌ம் அ‌தி‌‌ல் சே‌ர்‌த்து வத‌க்கவு‌ம்.
Fenugreek Curry
  • பின்னர் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம், தக்காளி எல்லாம் மசாலாவுடன் சேர்ந்து நன்கு வதங்கியதும் புளிக் கரைசலை கொட்டி கொதிக்கவிடவும். 
  • குழம்பு நன்கு கொதித்து சுண்டிய நிலையில் அரை தேக்கரண்டி வெந்தயத் தூளை சேர்த்து கொதிக்க விடவும். வெந்தயத் தூளை அதிகமாக சேர்த்து விடவும் கூடாது, குழம்பு அதிகமாக கொதித்து விடவும் கூடாது. ஏனெனில் குழம்பு கசந்து விடும். 
  • எனவே குழம்பை இறக்குவதற்கு 5 நிமிட நேரத்திற்கு முன்பு வெந்தயத் தூளை போட்டு கொதிக்க விட்டு கறிவேப்பிலை, கொத்துமல்லியைத் தூவி இறக்கவும். சுவையான வெந்தயக் குழம்பு தயார்.

நன்மைகள்: 

  • வெந்தயம் என்ற வார்த்தையின் பிற்பகுதி  அயம் என்று உள்ளதற்கேற்ப வெந்தயத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. விதைகள் மியூசிலேஜ் கொண்டவை. நோயை தீர்க்கும். 
  • சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும். அஜீரணத்தைப் போக்கும். மாதவிடாய் போக்கை அதிகரிக்கும். 
  • வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாயுக்கோளாறு, சீதபேதி, பசியின்மை, இருமல், நீர்க்கோவை, ஈரல், மண்ணீரல் வீக்கம், வாதநோய், ரிக்கெட்ஸ், ரத்தசோகை, நீரிழிவு நோய் ஆகியவற்றை குணப்படுத்தும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments