வேப்பம்பூ ரசம்

0
1730

தேவையான பொருட்கள்:

வேப்பம்பூ – ஒரு கைப்பிடி அளவு

புளி – ஒரு நெல்லிக் காய் அளவு

கடுகு – ஒரு டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் – 2

பெருங்காயத்தூள் – சிறிதளவு

எண்ணெய் – ஒரு டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

Neem Flower Rasam
Neem Flower Rasam

செய்முறை:

  • வேப்பம்பூவை சிறிதளவு எண்ணெயில் வறுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு. கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து, புளிக்கரைசல், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும்.
  • சிறிது கொதித்ததும் வறுத்த வேப்பம்பூ, பெருங்காயத்தூள் சேர்த்து. கொதித்ததும் சிறிதளவு தண்ணீர் விட்டு, மேலும் ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

நன்மைகள்:

  • வேப்பம்பூவை சிறிது நெய் விட்டு வறுத்து, பொடியாக்கி, வெல்லத்துடன் சேர்த்து உருண்டை செய்து கொள்ளவும்.
  • வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப்பூச்சி நீங்கும். 
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது.
  • கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments