ஹோலோலென்ஸ்கண்ணாடி? மைக்ரோசாப்ட் தொழிலாளர்களின் எதிர்ப்பு

0
1004

மைக்ரோசாப்ட் தொழிலாளர்கள், U.S ராணுவத்திற்கு ஹோலோலென்ஸ் ஹெட்செட் வழங்குவதற்கான  ஒப்பந்தத்தை ரத்து  செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

ஹோலோலென்ஸ்கண்ணாடி என்றால் என்ன ?

  • மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஹோலோலென்ஸ் கண்ணாடியை பயன்படுத்தி மனித உடலின் அனைத்து பாகங்களையும் கண்காணிக்கலாம்.
  • இந்த கண்ணாடியை உடல்கூறு பயிற்சிக்கும்  பயன்படுத்தலாம்.
  • இதை அணிந்து கொண்டு எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், தசைகள், இதயம், மூளை அனைத்தையும் தனித்தனியாக கவனிக்கலாம். பல விதமான சோதனைகளில் கண்டுபிடிக்கும் பிரச்சினைகளை இந்த கண்ணாடி அணிந்து கொண்டால் எளிதாகக் கண்டு பிடித்துவிடலாம்.

 கல்வி, மருத்துவம் என தொடங்கி  பொழுதுபோக்கு வரை அனைத்து துறைகளையும் மாற்றி  எழுத வரும் புது டெக்னாலஜி.இது ஒருங்கிணைந்த விஷுவல் ஆக்மென்ட்டேஷன் சிஸ்டத்தின் மூலம் செயல்படுகிறது.மேலும் போர் மாதிரிகள் மற்றும் பயிற்சி ஆகிய இரண்டிற்கும் சிறப்பாக இந்த ஹோலோலென்ஸ் பயன்படுத்துகிறது.

இந்த ஹோலோலென்ஸ் சாதனத்தை கொண்டு உங்கள் வரைபடத்தின் நிலைப்பாடு, வரைபட திசைகாட்டி, எதிரிகளின்  ஆயுதம் கூட பார்க்க முடியும். இதில் உள்ள தெர்மல் இமேஜிங் இருண்ட நிலையில் அனைத்தையும் மிகத்துல்லியமாக காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்ரோசாப்ட் ஊழியர்களிடமிருந்து பெறப்பட்ட ஒரு பகிரங்கமான கடிதமானது, மைக்ரோசாப்ட் நிறுவனம் இராணுவத் திட்டத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியது.

தற்போது,50 க்கும் அதிகமான மைக்ரோசாப்ட் ஊழியர்கள் கையெழுத்திட்ட ஒரு கடிதம் ஒரு உள் செய்திக் குழுவில் விநியோகிக்கப்பட்டன.அதில் அவர்கள்,

“போர் மற்றும் அடக்குமுறைக்கான தொழில்நுட்பத்தை உருவாக்க மறுக்கின்றனர்” என்பது முக்கிய கருத்தாக வைக்கபட்டுள்ளது, மற்றும் இராணுவம் அறிவித்த 48 கோடி டாலர் ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி கேட்கிறது. மேலும் ஹோலோலென்ஸ் ஒருவரை  கொல்வதற்காக இல்லை எனவும் அவர்கள் கூறினர்.

ஊழியர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில்,அது அமெரிக்க இராணுவத்திற்கு தனது தொழில்நுட்ப உதவிகளை தொடர்ந்து வழங்க திட்டமிட்டுள்ளது.

 ஏனென்றால்,மைக்ரோசாப்ட் ஆனது அமெரிக்க பாதுகாப்புத் துறையை ஆதரிக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்த நாட்டிலுள்ள மக்களும், குறிப்பாக இந்த நாட்டிற்கு சேவை செய்யும் மக்களின் முதுகுக்குப் பின்னால் மைக்ரோசாப்ட் நிறுவனம் துணை நிற்கும். அவர்கள் நாங்கள் உருவாக்கும் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தை அணுகுவார்கள்” என்று விளக்கம் அளித்துள்ளது.

ஸ்பெயினில் பார்சிலோனாவின் மொபைல் உலக மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை ஹொலலென்ஸ்  ஹெட்செட்ஸை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வலை பகிர்வு
நன்றி : டெக் தமிழ்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments