காதல் மொழி

0
687
மொழி-b61426b4

அள்ளி தந்த ❤️தில்
ஏற்றினாய் உள்ளத்தில்
இதழ்களோடு உரசம்பொது
இரசனை கண்ட ❤️மே!
விடியும் வரை கண்ணில்
தென்படும் வரை ஏங்கினேன்!
காதோரம் கலந்து பேசும்
உன் மொழிகள் விண் பறந்ததே!
எட்டி பிடிக்கும் ஆசையல்லவா
உன் மனதில் புலந்ததே
வாழ்க்கையென்னும் மயக்கத்தில்     வளமை கண்டதே!
விழிகளோடு விழி நோக்கம் போது
விடையைத் தந்தாய் நீ யல்லவா!
வெளிச்சமோ இருட்டிலோ பளிச்சென்று  காணும் தேவதை நீ அல்லவா!
நிலவின் ஒளியாய் முகம் கண்டு
உன்புன்சிரிப்பால் மகிழும்
நாளெல்லாம் நினைவலைகள் இன்றும் நினைக்கிறேன்! மகிழ்கிறேன்!
வான் மயிலே என் தேவதையே
காற்றில் கலந்த இசையே!
காதல் கலக்கமில்லா தேனமுதே!
நாளும் மனதில் மலரும் மலரே!
உன் காதலை எண்ணிக் களிக்கிறேன்
உன் எழிலான  உறவு
இறைவன் தந்த பெண்ணல்லவா!
என் இதயமே என்றும் கரையாத
காலத்தால் அழியாத பொன் சிறப்பம்சங்கள் நீயல்லவா!
என் இதய மலரே  தெய்வீக மலரே!
உம்மை போன்று பொண்ணோருத்தி
இன்பயுலகில் காண்பதெங்கே!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments