பரிசுத்த வேதத்தின் வார்த்தையின் ஆற்றல்

0
875
images (5)-9d1c21b5

பரிசுத்த வேதத்தின் வார்த்தையின் ஆற்றல்

வேதம் என்பது உயர்வான அறிவு என்று எடுத்துக் கொள்ளலாம். பரிசுத்த வேதம் என்பது சுத்தமான வார்த்தைகள் ஆகும். அதைப் படிப்பது அவசியம். ஆவிக்குரிய உண்மைகளைச் சத்தியங்களை நாம் அறியாமல் இருப்பதற்குக் காரணம் தேவனுடைய வார்த்தையை ஆழமாகச் சிந்தித்துப் படிப்பதில்லை.
தீர்க்கதரிசனம் என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்து வந்தது தீர்க்கதரிசி, இது கிரேக்கத்திலிருந்து தீர்க்கதரிசனம். ஒரு தீர்க்கதரிசனம் என்பது ஒரு நபர் தெய்வீக உத்வேகம் மூலம் அல்லது கர்த்தரின் கிருபையால் எழுதப்பட்ட வார்த்தைகள் ஞானம் பெறுவதன் மூலம்  என்ற கணிப்புதீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மானிடனுடைய  சித்தத்தினாலே தோன்றவில்லை ; தேவனுடைய பரிசுத்த மனுசர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்” (2 பேதுரு 1:21) என்று வேதத்தைக் குறித்து பேதுரு சாட்சியிடுகிறார். வேதம் மனிதனுடைய வார்த்தை அல்ல. அது தேவனுடைய வார்த்தை, தேவனுடைய சத்தம். பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு எழுதப்பட்ட வேத புத்தகம். அது காலம் கடந்து நம்முடைய  கைகளில் இறைவன் நம்மோடு பேசும் படியாக நமது கைகளில் கொடுக்க ப் பட்டுள்ளது.

பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய செய்திகளைப் பற்றி வாக்குத்தத்தம் பண்ணினபடி’. வேதாகமம் எவ்வளவு நம்பிக்கைக்குரிய ஒன்றாக இருக்கிறது. ரோமாக்கு பவுல் எழுதும்பொழுது வேதாகமத்தில் சொன்ன இந்த வசனம் நிறைவேறிற்று என்ற நிச்சயத்தை இந்த இடத்தில் வெளிப்படுத்துகிறார். மெய்யாலும் வேதாகமம் நாம் நம்பத்தக்கத் தேவனுடைய வார்த்தை என்பதை நம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து செயல்பட வேண்டும். அநேக சமயங்களில் வேதாகமத்தை நாம் பார்க்கும் பொழுதுத் தவறிவிடுகிறோம். ஒருவேளை நாம் அந்த ஆழமான உணர்வு கொண்டிராததினால்  வேதத்தை நாம் ஆராய்ந்து நம்முடைய வாழ்க்கையைக் கட்டக்கூடிய செயலில் நாம் குறைவுள்ளவர்களாக இருக்கிறோம். “தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்றைய காலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னாதென்பதையும் ஆராய்ந்தார்கள்” (1 பேதுரு 1:11) என்று பேதுரு சொல்லுகிறார்.

தேவனுடைய வார்த்தையை ஆராய்ந்து வாசிப்பது  அவசியம். ஆவிக்குரிய உண்மைகளைச் சத்தியங்களை நாம் அறியாமல் இருப்பதற்குக் காரணம் தேவனுடைய வார்த்தையை ஆழமாக ஆராய்ந்து  வாசிப்பதில்லை. “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுசருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுசர்கள் பரிசுத்த ஆவியினாலே  ஏவப்பட்டுப் பேசினார்கள்”  (2 பேதுரு 1:21) என்று வேதத்தைக் குறித்து பேதுரு சாட்சியிடுகிறார். வேதம் மனிதனுடைய வார்த்தை அல்ல. அது தேவனுடைய வார்த்தைகள். தேவனுடைய சத்தம். பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டு எழுதப்பட்ட வேத புத்தகம். அது இன்றைக்கு நம்முடைய கைகளில் கர்த்தர் நம்மோடு பேசும்படியாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை எந்த அளவுக்கு நாம் உணர்ந்து வாழுகிறோம் என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்லது.

திறந்தருளும்(சங்.119:18) என்பது இன்னொரு வசனம்.வேதம் தேவனால் நமக்கு எழுதப்பட்ட அன்பின் கடிதம். வானமும் பூமியும் அழிந்தாலும் போனாலும் கர்த்தருடைய வார்த்தை  போகாது. அப்படிப்பட்ட வேதத்தை அன்றாடம் வாசியுங்கள். கர்த்தருடைய பரிசுத்தம் வேதம் குறையற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாய் இருக்கிறது.

இவ் உலகத்தைப் படைத்தது இறைவனுடைய வார்த்தைகளே. இறைவனுடைய படைப்பு ஆகும்  பரிசுத்தம் வேதம் படிக்கிறபோது ‘‘கடவுள், ‘ஒளி தோன்றுகிறார்!’ என்றார்; ஒளி தோன்றிற்று’’ என்கிறது தொடக்க நூல் 1:3.
ஒன்றுமில்லாமையில் இருந்தும் ஒழுங்கின்மையிலிருந்தும் நிறைவைக் கொண்டு வரக்கூடிய ஆற்றல் கடவுளுடைய வார்த்தைகளுக்குஉண்டு. அண்டச் சராசரங்கள் அனைத்தின் மீதும் கடவுளுடைய வார்த்தைகளுக்கு அதிகாரம் உண்டு.

மனிதன் இவ்வுலகில் தன் விருப்பம் போல வாழ்ந்து இதைப் பாவம் நிறைந்த உலகாக மாற்றி விட்டான். மனிதன் தூய வாழ்வு வாழ அவன் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது. அது, தாயின் வயிற்றில் இரண்டாம் முறையாக நுழைந்து பிறப்பதில்லை. வார்த்தையால் பிறப்பது.

‘நீங்கள் அழியக் கூடிய வித்தினால் அல்ல; மாறாக, உயிருள்ளதும், நிலைத் திருப்பதுமான, அழியா வித்தாகிய கடவுளின் வார்த்தையால் புதுப்பிறப்பு அடைந்துள்ளீர்கள்’ (1 பேதுரு 1:23) என்கிறது இறைவன் வார்த்தை.

கடவுளுக்கு விருப்பமான வாழ்வு வாழ, கடவுளின் சித்தத்தை நிறைவேற்றுகின்றனர்  வாழ்வு வாழ, மனிதன் மறுபடியும் பிறக்க வேண்டியுள்ளது. கடவுளுடைய வார்த்தைக்கு இந்த ஆற்றல் இருக்கிறது.

யோவான் எழுதின நற்செய்தியில் மூன்றாம் அதிகாரத்தில்  நிக்கோதேமு  எனும் பரிசேய உயர் அதிகாரி  ஆண்டவரைச்  சந்திக்க இரவில் வருகிறான். மறுபடியும் பிறக்கும் அனுபவம் பற்றி ஆண்டவர் அவனுக்குக் கற்றுத் தருகிறார்.  யோவான்  இவரைப்  பற்றிக் குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ‘இரவில் ஆண்டவரிடம் வந்த நிக்கோதேமு’ என்றே குறிப்பிடுகிறார்.

அவன் பரிசேயனாக இருந்தும் இருளுக்குள் தான் வாழ்ந்திருந்தான்.  ஒளியாகிய ஆண்டமெய்யானவரிடம் வந்து மறுபடியும் பிறக்கிறது வாழ்வின் அனுபவத்தை கற்றுக் கொண்டான்.

கடவுளுடைய வார்த்தை மனிதனை மறுபடியும் பிறக்கிற வாழ்வுக்கு ஆற்றல் அளிக்கிறது.

மறுபடியும் பிறப்பது மட்டுமல்லாமல், அந்தளவுக்கு வாழ்வை தூய வாழ்வாக வாழவும், கடவுளுக்குள் வளருகிறது வாழ்வதாக வாழவும், துணைபுரிவது கடவுளுடைய வார்த்தைகளே.

‘புதிதாய்ப் பிறந்த குழந்தைகள் போல, வஞ்சகமற்ற வார்த்தையாகிய பாலை அருந்த ஆர்வமுள்ளவர்களாயிருங்கள். இதை அருந்துவதால் நீங்கள் மீட்பில் வளருவீர்கள்’ என்கிறது 1 பேதுரு 2:2,3 வசனங்கள்.

ஒரு நல்ல விதை செழிப்பான செடியாக வளருவதற்குத் தடையாக அமைந்து விடுகின்ற முட்செடிகள், களைகள் போல மனித வாழ்விலும்  துர்க்குணம், கபடம், வஞ்சகம், பொறாமை, புறங்கூறுதல் போன்ற வி‌ஷயங்கள் இருக்கின்றன. இவற்றை ஒழித்துவிட்டு தூய வாழ்வில் வளர கடவுளுடைய வார்த்தைகள் நமக்கு ஆற்றல் அளிக்கின்றன.

படுக்கைக்குச் செல்லும் முன்  பிராத்தனை செய்யும் வழக்கத்தைக் கொண்டிருந்தான் சிறுவன் ஒருவன். ஒருநாள்  அருகிலிருந்த  தன் தாயிடம், ‘அம்மா, இன்று நான் தனியே பிராத்தனை வேண்டும், நீங்கள் சென்று விடுங்கள்’ என்றான். அம்மா அவனிடம் காரணம் கேட்டாள். அவனோ, ‘இன்று நான் அதிக தவறுகள்  செய்திருக்கிறேன். எனவே பிராத்தனை யில் அவற்றைக் கடவுளிடம் சொல்ல வேண்டும், நீங்கள் இருந்தால் கேட்பீர்கள், கேட்டால் திட்டுவீர்கள். கடவுளிடம் மட்டுமே சொன்னால் அவர் மன்னித்து, மறந்து விடுவார்’ என்றான்.

இந்த சிறுவன் ‘ஆண்டவரை அறிந்தவன் மட்டுமல்ல, ஆண்டவருக்குள் வளரத்தொடங்கி விட்டான்’ என்று பொருள்.

எனவே கடவுளுடைய வார்த்தைக்கு மறுபடியும் பிறப்பிக்கிற ஆற்றல் மட்டுமல்ல, அவருக்குள் வளருவதற்குத் தேவையான ஆற்றலும் உள்ளது.

மறுபடியும் பிறக்கிற, கடவுளுக்குள் வளருகிற வாழ்வு மட்டுமல்ல, தூய்மையான வாழ்வைக் காத்துக் கொள்ளவும் கடவுளுடைய வார்த்தைகள் துணை புரிகின்றன.

கடவுளுக்குள் வளர்ந்து வருகிற போது இவ்வுலகம், இவ்வுலகின் தன்மைகள் நம்முடைய வாழ்வைத் திசை திரும்புகின்றனர். ஆனால் கடவுளுடைய வார்த்தைகள், போதனைகள் நம்மைச் சுத்தமாக்குகின்றது

‘நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கனவே தூய்மையாய் இருக்கிறீர்கள்’ என்கிறது யோவான் 15:3.

ஆண்டவரிடம், ‘உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் கூடும்’ என்று கேட்டவருக்கு ‘எனக்குச் சித்தமுண்டு நீ சுத்தமாகு’ எனப் பதிலளித்தார் இயேசு. ஆண்டவரின் வார்த்தை நம்மைச் சுத்தமாக்குகிறது ஆற்றல் உள்ளது.
இறைவனுடைய வார்த்தைகள், ஒருவரை மறுபடியும் பிறக்கச் செய்கிற ஆற்றல் உள்ளது. மறுபடியும் பிறந்தவரை ஆண்டவருக்குள் வளரச் செய்கிற ஆற்றல் உள்ளது.அதை விட மேலாகச் சுத்தமான வாழ்க்கை வாழக் காத்துக் கொள்ளுகிற ஆற்றல் உள்ளது இறைவனுடைய வார்த்தைகள்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments