பதின் பருவத்தின்
பரவசத்தில்
பக்குவம் எல்லாம்
பறந்தோடிட
பள்ளிக்கூட நட்புகளுடன்
பகிர்ந்து கொண்ட
பசுமையான நாட்கள் அவை
பகிடிக்காக ஒருவன்
பற்றி வைத்த தீப்பொறி
பச்சை சுடிதாரில் நேற்று
பார்த்த பிள்ளையை
பாவி நான் காதலிப்பதாக
பரவியது காட்டுத்தீயாய்
பள்ளி எங்கும்
பார்ப்பவர் எல்லாம்
பல் இளிக்க
பதறியது – அது போக
பாசத்தோடு வீட்டார்
பார்த்து வைத்த
பெயரும் மாறிவிட்டது
பச்சை சுடிதார் என
புயலில் அடிபட்டு செல்லும்
படகாய் மனம்
புரியாத ஓர் உணர்வில்
புதைந்து
புறப்பட சொன்னது சுடிதார்
பின்னால் – ஆனால்
பரிச்சயமானவரின் கண்ணில்
பட்டு மாட்டினேன் அன்னையிடம்
பவ்வியமாக விசாரித்தாள்
பராசக்தியாக மாற முன்
பாதத்தில் சரணடைந்தேன்
பொய்யுரைக்காமல்
புத்தி சொன்னாள்
பக்குவப்படுத்தினாள்
புயலும் ஓய்ந்துவிட்டது
முடிந்தது முற்றும்
பரிசுத்தமாய் முதற்காதல்…
Subscribe
Please login to comment
0 கருத்துரைகள்
Oldest