கோரை (Cyperus-rotundus)

0
1844
மூலிகையின் பெயர்: கோரைமருத்துவப்  பயன்கள்: கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், இதயம், மூளை, வயிற்றுக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காய்ச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பைக் கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்.

பயன்படுத்தும் முறைகள்:

  • கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் கலந்து உட்கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம், உடற்பொலிவு உண்டாகும்.
  • கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்படாகம், பிரமட்டை, சுக்கு வகைக்கு 5 கிராம் சிதைத்து 500 மி.லி. நீரில் போட்டு 125 மி.லி.யாகக் காய்ச்சிக் காலை, மாலை கொடுத்து வரத் தாகத்துடன் கூடிய சுரம் நீங்கும்.
  • பச்சைக்கிழங்கை அரைத்து மார்பின் மீது பற்றுப்போட்டால் பச்ச உடம்புக்காரிக்குப் பால் சுரக்கும். தேள் கடி, குளவிக் கடி ஆகியவைகளுக்குப் பற்றிட்டால் குணமாகும். இதை உடல் மீது பூசினால் வியர்வை நாற்றம் வராது.
  • வலிப்பு நோய், காய்ச்சல், பைத்தியம் குணமடையும். மேலும் இரத்தக்கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், சிறுநீர்த்தாரை சுத்தம் ஆகியவை குணமாகின்றது.
  • கோரைக்கிழங்குப் பவுடரை அரை தேக்கரண்டி வீதம் காலையும் இரவும் உணவுக்கு முன் நீர் (அ) பால் (அ) தேனில் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும்.
  • கர்ப்பப் பையையும், மார்பகங்களையும் நன்கு வளர்ச்சியடையச் செய்கிறது. இதை 1-3 கிராம் பவுடராகவும், 10-70 மில்லி வரை கசாயமாகவும் குடிக்கலாம். குழந்தைகளுக்கும், பச்சை உடம்புக்காரிகளுக்கும் குடிக்கக் கொடுக்கக்கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி கொடுக்க வேண்டும்.

Cyperus rotundusபசியின்மை தீரும்

கிழங்கை குடிநீர் செய்து காய்ச்சிய பாலில் சேர்த்து மோராக்கி அதில் உணவு உட்கொள்ளக் குழந்தைகளுக்குக் காணும் பசியின்மை, செரியாமை தீரும்.

இஞ்சியும் கோரைக் கிழங்கையும் நன்கு தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டக்காயளவு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

கோரைக் கிழங்கைப் பாலுடன் அரைத்துப் பசையாக்கி தலைக்குப் பூசினால் ஞாபகசக்தி கூடும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments