மருதாணி (Lawsonia-inermis)

0
1771

மூலிகையின் பெயர்: மருதாணி

மருத்துவப்  பயன்கள்: மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள்.

பயன்படுத்தும் முறைகள்: 

தோல் நோய்

  • மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு இந்த இலையை அரிசி சோற்றுடன் இரவு ஊறப் போட்டு காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும்.
  • கால், கை இடுக்கிலும், கழுத்துப்பகுதியிலும், இடுப்பிலும் வரக்கூடிய கரும்படை, வண்ணான் படை போன்ற படைகளை மருதாணியை கொண்டு குணப்படுத்த முடியும்.
  • உப்பில்லாதப் பத்தியம் இருத்தல் வேண்டும். 10 – 15 நாள் சாப்பிட வேண்டும்.

புண்கள்

  • ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம்.
  • அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

கால் ஆணி  

இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

முடிவளர 

  • இதன் தைலம் முடி வளர்க்கும். இள நரையை அகற்றும்.
  • இரும்பு வாணலியில் தேங்காய் எண்ணெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்ந்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திற்காக  10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டும்  காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.

தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும்.

 
Lawsonia inermis (maruthane)

குறிப்பு :

இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments