மீழ்தலை வேண்டிக் கொண்டேன்
இருந்தும் என்ன கிடைக்கப்
போகிறது எனும் அளவுக்கு
உள்ளம் நொந்தாயிற்று…
மனம் திறந்து பேசவோ
மெய் மறந்து சிரிக்கவோ
நினைத்ததை சொல்லவோ
திராணி இல்லமால் ஆயிற்று…
தன்னில் இருந்து இயல்பை
மாற்றி விட்டு பிறருக்காய்
நடிக்கப் போவதில்- அப்படி
என்ன இருக்கப் போகிறது?
உள்ளம் அழுது வடிக்க
உதடுகள் புன்னகையை உதிர்க்க
உளி தாங்கும் சிலையாய்
வலி தாங்கி ஆயிற்று…
நாளை என்ன நடக்கும் என
நிச்சயம் இல்லை தான்
நடப்பது நடக்கட்டும் என
படைத்தவனிடமே விட்டாயிற்று…