பாதை தேடி

0
130
IMG-20250822-WA0006

புதிய பாதையில் நடந்து

புதிய காட்சிகளை கண்டு
காற்றின் மெல்லிசை கேட்டு
இதயத்தில் முளைக்கின்றது கனவு…!

தொலைவுக்கு  நான்
செல்லும் போது
என்  பயணம்
பல பரிமாணம்
அதில் பல
பாத்திரமாய் நானும்…!

காலம் கடந்து 
காற்றின் மெல்லிய
கீற்றில் – கண்ணீரும்
சிரிப்பும் கலக்கும் – என்
பயணம் கற்ற பாடங்கள்
என் எழுத்தினில் சொல்லும்…!

என் கனவுகள்
உணர்வினில் சங்கமித்து
நிலவினில் மிதக்கும்
நாளும் ஓர் புதிய பகுதி
என் வாழ்க்கையின்
புத்தகம் எழுதும்…!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments