தரைப்பசலை (Portulaca-quadrifida)

0
2503

மூலிகையின் பெயர்: கொடிப்பசலை

மருத்துவப் பயன்கள்: தரைப்பசலையில் இரும்புச் சத்து ஏராளமாக உள்ளது. இரத்தம் குன்றியுள்ள சோகை நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை தருகின்றது. பசலைக்கீரை மிகுந்த ஊட்டச்சத்து உள்ளது. அதிக மருத்துவ குணம் உள்ளது.

பயன்படுத்தும் முறைகள் : 

  • இதில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன. சுண்ணாம்புச்சத்து உள்ளது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது.
  • புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. அது நம்மைப் பேணிப் பாதுகாக்கும் உணவு. அதில் காரசத்துள்ள தாதுப் பொருள்கள் ஏராளமாக உள்ளன. ஆதலால் அது தொற்று நோய்க்கு எதிரான தடுப்புச் சக்தியை மிகவும் ஆற்றலுடன் பேணுகின்றது.

பசலைக்கீரையை உட்கொண்டால் எரிச்சலூட்டும் ஒரு வகை நச்சு அமிலச்சத்து மிகமிகச் சிறிய அளவில் உண்டு. தண்ணீரில் கரையக்கூடிய ஒரு வகைப் புரதச்சத்தும் இதில் மிகமிகச்சிறிய அளவில் உண்டு.

  • ஆனால் கொழுப்பு சத்துக்கிடையாது. பசலைக்கீரை மிகவும் சுலபமாக செரிக்கின்றது. குளிர்ச்சி தருகின்றது, ஊட்டச்சத்து உள்ளது. எரிச்சலைத் தணிக்கின்றது. மிக உயர்ந்த உணவாக உள்ளது. பித்தம், நீர்த்தாரை, வெட்ட நோய்கள் குணமாகின்றன. தோல்நோய்கள், மேகம், சீதபேதி குறைகின்றது. 
  • இதன் இலைச் சாற்றுடன் சிறிது தேன் சேர்த்து குழந்தைகளுக்குக் கொடுக்க நீர்க்கோவை குணமாகும்.
Portulaca quadrifida (tharai pasalai)
  • இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டிப்படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இலையை வாட்டி தலையில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். இதை சிறிதளவு தண்ணீரில் சமைக்க வேண்டும். சமைத்த பின் தண்ணீரை வெளியில் கொட்டிவிடக் கூடாது. ஏனெனில் அதில் மிகுந்த ஊட்டச்சத்துப் பொருள்கள் உள்ளன. மிளகு, பூண்டு, தக்காளி சேர்த்து ரசம் வைக்கலாம்.
  • இலைகளைக்  (1 லிருந்து 10 வரை) கக்ஷாயம் வைத்து அருந்தினால் காய்ச்சல்கள், கல்லடைப்பு, சுவாசப்பைகளிலும் குடல்களிலும் ஏற்பட்டுள்ள வீக்கங்கள், சுவாசிப்பதில் சிரமம், வேகமாக இயங்கும் சுவாசம் ஆகியவை குணமாகின்றன.
எரிச்சலைத் தணிக்கின்றது

பசலைக்கீரை மலத்தை நன்றாக இளகச் செய்கின்றது. எரிச்சலைத் தணிக்கின்றது. திசுக்களின் அழிவை  இது குறைக்கின்றது. இதில் உடல் வறட்சிக்கு எதிரான பெரிபெரி என்னும் வீக்க நோயிக்கு எதிரான, கரப்பான் வியாதிக்கு எதிரான சத்துக்கள் கணிசமான அளவில் உள்ளன. கொழுந்தாக உள்ள கொடிச் சுருளைப் பச்சையாகவே உண்பது மிகுந்த நன்மையைத் தருகின்றது.

நீரிழிவு, இரத்தக் குறைவு, கால் விரல்களில் உள்ள வீக்கம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பசலைக்கீரை மிகவும் உதவுகின்றது. இதன் சாறு, சிறுநீரில் கற்கள் இருந்தால் அவற்றைக் கரைக்க உதவுகின்றது. இதன் சாற்றைக் கொப்பளித்தால் தொண்டைப்புண் குணமாகின்றது.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments