இட்லி

0
1884

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி அல்லது புழுங்கலரிசி – 4 டம்ளர்

உடைத்த வெள்ளை

உளுத்தம்பருப்பு – 1 டம்ளர்

வெந்தயம் – 1 டீஸ்பூன்

அவல்- ஒரு கைப்பிடி

செய்முறை:

  • இட்லி அரிசி என்றால் 5 மணி நேரம் ஊறினால் போதும், புழுங்கலரிசி என்றால் முந்தின நாள் இரவே ஊற விடவும்.
Idly
  • வெள்ளை உளுத்தம்பருப்பு ஒரு மணி நேரம் ஊறினால் போதும், ஊறின பிறகு பருப்பைக் குளிர்சாதனப் பெட்டியில்வைத்து விடவும்.
  • அரிசியைக் களைந்து மின் அரைப்பானில்(கிரைண்டர்) போடவும், இதனுடன் அவல், வெந்தயத்தையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைக்க விடவும்.
  • இருபத்தைந்து நிமிடங்கள் அரைபட வேண்டும், அடிக்கடி தண்ணீர் விட்டு வர வேண்டும். நன்றாக மையாக அரைபட வேண்டுமென்ற அவசியமில்லை. பிறகு அதனை வேறொரு பாத்திரத்தில் போட்டு விட்டு வெள்ளை உளுத்தம்பருப்பைக் களைந்து போட வேண்டும்.
Idly
  • தண்ணீர் அதிகம் ஊற்றாமல் மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை கொஞ்சமாக ஊற்ற வேண்டும்.
  • பருப்பு வெண்ணெயாக அரைபடுவதில் தான் சூட்சமமே அடங்கியிருக்கிறது.
  • பிறகு உப்பைப் அரைபட்ட பருப்புமாவில் போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
  • அரைத்த மாவையும் இந்த உளுத்தம்மாவையும் ஒன்று கலக்கவும், ஆற்றவும். தனித்தனிப் பாத்திரங்களில் முக்கால்வாசி அளவு வருமாறு(பொங்கும், புளிக்கும் என்பதால்) விட்டு வெளியில் வைக்கவும், குளிர்காலங்களில் புளிக்காது என்பதால் அவனில் வைத்துக் கொள்ளலாம்.

நன்மைகள் : அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள விட்டமின்கள், நார்ச்சத்துக்கள், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்றஉப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments