மான்

0
7883

மான் பாலூட்டி வகையைச் சேர்ந்த இரட்டைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. அறிவியலில் மான் இனத்தை செர்விடீ என்பர். இவை இலைதழைகளை உண்ணும் இலையுண்ணி விலங்குகள்.

  • மான் ஆடு மாடுகள் போல உண்ட உணவை இருநிலைகளில் செரிக்கும் அசைபோடும் விலங்குகள் வகையைச் சேர்ந்த விலங்கு. மான்கள் உலகில் ஆஸ்திரேலியாவும் அண்டார்டிக்காவும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் வாழ்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் சாதுவாக இருக்கும்.

மான்களில் புள்ளிமான், சருகுமான், சம்பார் மான், கவுரிமான் என நிறைய வகைகள் உள்ளன. கனடாவிலும் சைபீரியா முதலிய வடநிலப் பகுதிகளிலும் வாழும் மூசு அல்லது எல்க் என்னும் மான் தான் உலகிலேயே மிகப்பெரிய மான் இனம் ஆகும். இவற்றின் ஆண் மூசு, 2 மீட்டர் உயரமும் 540 – 720 கிலோ.கி (1200–1600 பவுண்டு) எடையும் உள்ள மிகப்பெரிய விலங்காகும்.

  • மான்களில் பொதுவாக ஆண் மான்கள் மட்டுமே அழகான கொம்புகளைக் கொண்டிருக்கும். கொம்புகள் கிளைத்து இருப்பதால் ஆண்மானுக்கு கலை என்று பெயர் பெண்மானுக்கு சிறிய கொம்புகளோ அல்லது அவை இல்லாமலோ இருக்கும். பெண்மானுக்குப் பிணை என்று பெயர். மானின் குழந்தைக்கு (குட்டிக்கு), மான்மறி என்று பெயர்.
  • இந்தியாவில் நிறைய மலைப்பகுதிகளில் பல வகையான மான்கள் காணப்படுகின்றன. மான்கள் அழிந்துவரும் இனமாக வகைப்படுத்தப்பட்டு அவற்றை வேட்டையாடுவதை இந்திய அரசு தடை செய்துள்ளது.
Deer
  • மானின் கொம்புகள் ஆண்டுதோறும் விழுந்து முளைத்தாலும் ப்ரோங் ஹார்ன் என்னும் மானின் கொம்புகள் பழைய கொம்புகள் இருக்கும்போதே, அதன் கீழிருந்து புதிய கொம்புகள் முளைக்கத்தொடங்கிவிடும்.

மான் வகைகள்

பூட்டான் மறிமான்

ஆப்பிரிக்க மறிமான்

ஆப்பிரிக்க மான்

ஆப்பிரிக்கச் சிறுமான்

இந்தியச் சிறுமான்

இலங்கைப் புள்ளிமான்

கடமான்

கருமத மான்

காசுமீர் மான்

காட்டுமான்

சதுப்புநில மான்

சருகுமான்

தாமின் மான்

திபெத்திய சிறு மான்

தொம்சன் சிறுமான்

நாற்கொம்பு மான்

நானமா

நீர் மான்

நீலான்

புல்வாய்

புள்ளிமான்

மறிமான்

மான்

வர்ச்சீனிய தூவால் மான்

வனப்புமிக்க சிறுமான்

வெள்ளை இரலை

மானின் கொம்புகள்

விலங்கியல் ஆய்வுகளின்படி மானின் தலையில் இருப்பது கொம்புகள் என்று கூறப்பட்டாலும், அவை எலும்புகளின் நீட்சியே ஆகும். தலையின் எலும்பு வெளியே நீண்டு வளரும் ஒரே விலங்கு மான் ஆகும். மானின் கொம்புகள், ஆண்டுதோறும் விழுந்து புதிதாக முளைக்கும். முதல் ஆண்டில் கிளை இல்லாமல் இருக்கும். பிறகு ஆண்டுதோறும் விழுந்து புதிய கிளைகளுடன் முளைக்கும். மானின் வயது அதிகமாகும்போது கிளைகளும் அதிகமாகும். கொம்பு விழுந்த மான் புதுக்கொம்புகள் முளைக்கும் வரை எதிரிகளின் பார்வையில்படாமல் காட்டில் மறைந்தே வாழும்.

மானின் நீளம்

புள்ளிமானின் கொம்புகள் சுமார் 100 செ. மீ இருக்கும். ஓரிக்ஸ் என்ற மானின் கொம்புகள் 130.செ.மீ. வரை இருக்கும். அது தன் கூர்மையான கொம்புகளால் ஒரு சிங்கத்தைக் கூட குத்திக் கொன்றுவிடும். உலகின் மிகவும் அகலமான பெரிய கொம்புகளை உடையது மூஸ் எனும் மானினம் ஆகும். இதன் கொம்பு 190 செ.மீ நீளமும் 90 செ.மீ அகலம் வரையும் இருக்கும்.

கொம்புப் போர்

பொதுவாக மானின் கொம்புகள் தற்காப்பிற்காகப் பயன்படுகின்றன. ஆனால் சில சமயம் இதுவே ஆபத்தாகவும் முடிந்துவிடும். ஆண்கலைமான்களுக்குள் சண்டை ஏற்படும்போது, இரண்டு மான்களின் கொம்புகளும் பிரிக்க முடியாதபடி சிக்கிக் கொள்ளும்; இரை தின்ன முடியாமல், நீர் அருந்த முடியாமல் இரண்டும் பட்டினியால் இறக்க நேரிடுவதும் உண்டு.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments