குரங்கு

0
7413

குரங்கு ஒரு பாலூட்டி விலங்கு. வால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 சென்டிமீட்டர்  அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன.

  • குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் முன்மொழிந்தார். இராமாயணத்தில் குரங்கிற்குத் தனி இடம் உண்டு குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது.கடுவன் என்பது ஆண் குரங்கு. மந்தி என்பது பெண் குரங்கு.

மனிதக் குரங்கு என்பது ஹொமினோய்டியே பெருங்குடும்பத்தைச் சேர்ந்த உயர் விலங்கினம் ஆகும். பொது வழக்கில் இது பெரும்பாலும் மனிதர்களை உள்ளடக்குவதில்லை எனினும் அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதரும் இவ்வகையுள் அடங்குபவரே. நடைமுறையில் உள்ள வகைப்பாட்டில் இரண்டு ஹொமினோய்டு குடும்பங்கள் உள்ளன.

  • ஹைலோபட்டிடே குடும்பம்: இது 4 பேரினங்களையும், 13 கிப்பன் இனங்களையும் அடக்கியுள்ளது. இவ்வினங்களுள், லார் கிப்பன், சியாமாங் என்னும் இனங்களும் அடங்கும். இவை அனைத்தையும் ஒருங்கே “குறைந்த மனிதக் குரங்குகள்”  என அழைப்பர்.
  • மனிதக் குரங்குகள் :  கிப்பன், கொரில்லா, சிம்பன்சி, பொனொபோ, மலைக் கொரில்லா, மனிதக் குரங்கு
Monkey
  • ஹொமினிடே குடும்பம்: இது ஒராங்குட்டான்கள், கொரில்லாக்கள், சிம்ப்பன்சிகள் என்பவற்றுடன் மனிதர்களையும் உள்ளடக்கும். இவை “பெரு மனிதக் குரங்குகள்”  ஆகும். பார்பேரி மனிதக் குரங்குகள் போன்ற சில உயர் விலங்குகளில் வாலில்லாத் தன்மையை வைத்து மனிதக் குரங்குகள் எனப்பட்டாலும் இவை உண்மையான மனிதக் குரங்குகள் அல்ல.

உலகின் குட்டி குரங்கு நிறைய குரங்குகள் இருந்தாலும் ‘மர்மோசெட்’ என்ற குரங்குக்கு மட்டும் தனி மரியாதைதான். ஏனென்றால், இதுதான் உலகின் குட்டி குரங்கு. அதுவும், அரியவகைக் குரங்கு! தென் அமெரிக்கக் கண்டத்தில்தான் இந்தக் குரங்குகள் காணப்படுகின்றன. பொலிவியா, பெரு, பிரேசில், கொலம்பியா போன்ற நாடுகளிலேயே இது காணப்படுகிறது. இந்தக் குட்டிக் குரங்குகள் சாவிக்கொத்துபோல உள்ளங்கையில் அடங்கிவிடுகின்றன. இந்தக் குரங்குகள் அதிகபட்சமே 20 செ.மீ. உயரம்தான் வளரும்.

குரங்கு வகைகள்

முதனி

சோலை மந்தி

பனி மந்தி

சிறு குரங்கு

தாட்டான் குரங்கு

மந்தி குரங்கு

இலை குரங்கு

அணில் குரங்கு

ஒராங்குட்டான்

கருங்கால் சாம்பல் குரங்கு

குக்குரங்கு

வடவெளிச் சாம்பற் குரங்கு

குரங்கு

குல்லாய் குரங்கு

சுள்ளிய சாம்பல் குரங்கு

செங்குரங்கு

செம்முகக் குரங்கு

சைக்சின் குரங்கு

தங்க நிற மந்தி

சோலைமந்தி

துள்ளுகுரங்கு

தென்வெளிச் சாம்பல் குரங்கு

தேவாங்கு

வெண்தலைக் கப்புசின்

நண்டு உண்ணும் குரங்கு

நீலகிரி மந்தி

நேபாளச் சாம்பல் குரங்கு

பனி மந்தி

பெரிய தேவாங்கு

பேய்க்குரங்கு

பேரரசர் சிறு குரங்கு

போர்னியோ ஒராங்குட்டான்

மங்கிய இலைக் குரங்கு

மிஸ் பேக்கர்

லெசூலா

ஹுலக் கிப்பான்

நாட்டுக்குரங்கு

இவ்வினம் வயல்வெளி, கோயில் பகுதி மற்றும் கிராமப்பகுதியில் அதிகமாகக் காணப்படும். பொதுவாகத் தென்னிந்தியா முழுவதும் இவை காணப்படும். இதன் சினைக்காலம் 6 மாதங்களாகும். இவை சுமார் 8 வருடங்கள் வரை உயிர்வாழும்.

அனுமான் குரங்கு

நாட்டுக்குரங்கு போல மிகுதியான எண்ணிக்கையில் இவை கிடையாது.

தென்வெளிச் சாம்பல் குரங்கு

தென்வெளிச்  சாம்பல் மந்தி என்பது ஒரு பழைய உலக குரங்காகும். மற்றய சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு இந்தியாவில் கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கூட்டமாகவே வாழ்கின்றன. கூட்டமாகவே உண்ணும் பழக்கம் கொண்டவை.

குரங்குகளின் உணவு

பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments