சப்போட்டா

0
1827

சப்போட்டா   சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா,பாக்கிஸ்தான் மற்றும் மெக்சிக்கோவில் மிகுதியாக விளையக்கூடியது. தெற்கு மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளுக்கு உரித்தான இவ்வகைப் பழங்கள் எசுப்பானியக் குடியேற்றத்தின் போது பிலிப்பீன்சில் அறிமுகப்படுத்தப்பட்டது. குண்டுசப்போட்டா, வால்சப்போட்டா என இதில் வகைகள் உண்டு.

பால்-சப்போட்டா தின்னும்போது உதடுகளில் பால் ஒட்டிக்கொள்ளும். கர்நாடகச் சப்போட்டாவில் இனிப்பு மிகுதி. பொதுவாகச் சப்போட்டாப் பழம் உடலுக்கு நல்லது. எனிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனை அதிக அளவு உண்ணக்கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.இந்த பழம் பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது.

இனிப்பு சுவை அதிகமுள்ள சப்போட்டா பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின் சி மற்றும் ஏ சத்துக்கள் நிறைந் துள்ள சப்போட்டா பழம் நோய் எதிர்ப்பு சக்தி உடையது. இந்த பழத்தில் நார் சத்து உள்ளதால் செரிமானத்துக்கு உதவுகிறது. புரோட்டின், இரும்பு சத்து கொண்ட சப்போட்டா பழங்கள் உடலுக்கு புத்துணர்வை தரக்கூடியது. கண்பார்வையை அதிகரிக்கும். தோல் பாதிப்படையாமல் பாதுகாக்கும்.

சப்போட்டா பழத்திலுள்ள வைட்டமின்கள் இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது இயற்கை மருந்தாகும். 

சத்தான பழம் என்றுதான் சப்போட்டா பற்றி அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது.

 

Sapodilla

சப்போட்டா என்று நன்கு அறியப்பட்ட பழத்தின் மற்றொரு பெயரே சிக்கு என்று அழைக்கப்படுகிறது. சப்போட்டா பழத்தில் பலதரப்பட்ட சத்துக்கள் நிறைந்துக் காணப்படுவதற்கு நன்றி கூறுவதோடு மட்டுமல்லாமல், நல்ல சுவை நிறைந்த பழமான இது பெருமளவிலான சுகாதார நன்மைகளை தரும் பழங்களில் ஒன்றாகும்.

இந்த பழம் எளிதாக செரிமானமாவதோடு மட்டுமல்லாமல், அதில் அதிக அளவு குளுக்கோஸ் இருப்பதன் காரணமாக நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கி நிறைவாக்குகிறது. இந்த பழங்களில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் டானின் நிறைந்துக் காணப்படுகிறது.

பயன்கள்

100 கிராம் சப்போட்டா பழத்தில் 28 மில்லி கிராம் கால்சியமும், 27 மில்லிகிராம் பாஸ்பரசும் உள்ளது. எனவே தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் வளர்ச்சி அதிகரிக்கும், எலும்புகள் வலுவடையும், சருமம் பளபளப்பாகும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments