மருதமரம் (அர்ஜூனா)

0
2792
  • மருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.மருத மரம் ஆற்றோரங்களிலும் வயலோரங்களிலும்  செழித்து வளரும்.
  • மருத மரத்தில் வெண்மருது கருமருது, பில்லமருது எனப் பல வகைகள் உண்டு. பில்லமருது வீட்டுக்கு நிலை, சன்னல் சட்டங்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
  • தெர்மினலியா அர்ஜூனா ( மருத மரம்)  20-25  மீட்டர் உயரம் வரை வளரும். இந்த மரம் இந்தியாவில் வளர கூடிய மரமாகும்.
  • அர்ஜூனா மரத்தின் மரப்பட்டையில்  ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதால் முலிகைக்காக பயன்படுத்துகிறார்கள்.  
  • கோ-என்சைம் கே -10, டான்னிக் அமிலம், ஃபிளாவனாய்டுகளில்  மெக்னீசியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள் அதிகமாக உள்ளன.
  • இந்த மரத்தில் உள்ள மலர்கள் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இலை கூம்பு வடிவத்தில் பச்சை நிறமாக இருக்கும். ஆனால், இறுதியில் பழுப்பு நிறத்தில் இருக்கும்.
Terminalia arjuna
  • செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு  இடையே  இந்த மரத்தில் கனி விடும். ஆகஸ்ட் மற்றும்  ஜூன் பருவமழையின் போது மலர்கள் காணப்படும்.

பயன்கள்:

  • இந்த அர்ஜூனா பட்டை மூலம் இதய நோய் வருவதையும் தடுக்கலாம்.
  • அர்ஜூனா பட்டயை தேநீராக குடிக்கும் போது உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. அதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கிறது.

சிறுநீரகத்தில் உருவான கல் கரைய:

சிறுநீரகத்தில் உருவான கல் கரைய , அர்ஜூனா பட்டையை நன்கு வேகவைத்து வடிக்கட்டி பருக வேண்டும் . இவ்வாறு செய்தால் சிறுநீரகத்தில் உள்ள கல் சிறுநீர் வழியாக வெளியேறி விடும்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments