சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்!

0
2246

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் சக்தி ஆரஞ்சி பழத்திற்கு உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை கீழே பார்க்கலாம்.

சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்
சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும் சுண்ணாம்பு சேர்ந்த சிறுநீரக கற்களை உடைத்து, வெளியேற்ற, ஏற்ற பழம் ஆரஞ்சுப் பழமாகும்.

100 கிராமுள்ள ஆரஞ்சு பழத்தில் 46 கிலோ கலோரிகள் சக்தி கிடைப்பதால் கோடைக்காலத்தில் சக்தி இழப்பை தடுக்க ஆரஞ்சு பழங்களை பயன்படுத்தலாம்.

ஆரஞ்சுப் பழத்தை தோல் நீக்கி, பிழிந்து, சாறெடுத்து, சமஅளவு நீர் சேர்த்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என மூன்று நாட்கள் தினமும் காலை முதல் இரவு வரை உட்கொண்டு வர சுண்ணாம்பு சத்து சேர்ந்த சிறுநீரக கற்கள் கரைந்து வெளியேறும். இயற்கை மருத்துவத்தில் சிறுநீரக கற்களை கரைக்க இந்த முறை வலியுறுத்தப்படுகிறது. ஆரஞ்சுப் பழச்சாறை உட்கொள்ளும் போது புரத உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.சுண்ணாம்பு சத்து சேர்ந்த கற்கள் சேரவிடாமல் தடுக்க சிட்ரேட் அதிகமுள்ள ஆரஞ்சுப் பழத்தை உட்கொள்வதால் சிறுநீரில் சிட்ரேட்டின் அளவு அதிகரித்து, யூரிக் அமில மற்றும் சுண்ணாம்பு கற்கள் தோன்றுவது தடுக்க படுகிறது. ஆரஞ்சு பழத்திலுள்ள பொட்டாசியம் சிட்ரேட் அளவு அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது.

தையமின், ரிபோபுளோவின், நியாசின், பான்டோதெனிக் அமிலம், வைட்டமின் பி6, போலேட், அஸ்கார்பிக்அமிலம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தனிமங்கள் ஆரஞ்சு பழத்தில் அதிகமாக காணப்படுவதால் சற்று அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன.

Source : வலைப்பகிர்வு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments