மாமிச உணவின் மருத்துவப் பயன்கள் – ஆடு (தொடர்ச்சி)

0
18772

முங்தைய பதிவில் ஆடு தொடர்பான விளக்கத்தைப் பார்த்தோம் .அதனை படிக்க இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

தற்போது ஆட்டிறைச்சியில் அடங்கியுள்ள மருத்துவப் பயன்களையும் அதனை எவ்வாறு சமைத்து உட்கொள்வது என்பது பற்றியும் பார்ப்போம்.

ட்டிறைச்சி சமைக்கும்‌ முறைகள்‌

இதுவரையில்‌, ஆட்டின்‌ வகைகள்‌, ஆட்டிறைச்சியில்‌ அடங்கியுள்ள சத்துகள்‌, அதன்‌ மருத்துவப்‌ பண்புகள்‌ ஆகியவற்றைக்‌ கண்டோம்‌.

ஆட்டிறைச்சியை நம்‌ மக்கள்‌ வித விதமான முறையில்‌ சமைத்து உண்டு வருகிறார்கள்‌. அத்தனை முறைகளையும்‌ எழுத வேண்டுமானால்‌ ஒரு தனிப்‌ புத்தகமாகவே எழுத வேண்டியிருக்கும்‌. ஆகவே, ஆட்டிறைச்சி கலந்த ஒரு சில உணவுகளின்‌ தயாரிப்பு முறைகளை மட்டும்‌ இங்குப்‌ பார்ப்போம்‌.

சத்துகள்‌ செறிந்த இறைச்சிப்‌ புலவு / பிரியாணி

தேவையான பொருள்கள்‌

ஆட்டிறைச்சி         – 500 கிராம்‌

நெய்‌                     – 400 கிராம்‌

தக்காளி               – 200 கிராம்‌

பச்சை மிளகாய்‌   – 100 கிராம்‌

இஞ்சி                  – 50 கிராம்‌

எலுமிச்சம்‌ பழம்‌  – 1

முந்திரிப்‌ பருப்பு  – 100 கிராம்‌

கிராம்பு               – 1.0 கிராம்‌

இலவங்கப்‌ பட்டை – 10 கிராம்‌

சாதிக்காய்‌           – 1 துண்டு

மஞ்சள்‌ பொடி      – 1 ஸ்பூன்‌

புலவு அரிசி          – 1 கிலோ 

முற்றிய தேங்காய்‌ – 1

சிறிய வெங்காயம்‌ – 200 கிராம்‌

பெரிய வெங்காயம்‌ _ 200 கிராம்‌

“ பூண்டு (உரித்தது) – 200 கிராம்‌

புதினா இலை         – ஒரு கைப்பிடி

கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி

கசகசா                     -‌ 20 கிராம்‌

ஏலக்காய்‌                – 10 கிராம்‌

சோம்பு                   – 5 கிராம்‌

மிளகாய்த்‌ தூள்‌     – 2 ஸ்பூன்‌

சுவைக்கு ஏற்றவாறு உப்பு

செய்முறை

ஆட்டிறைச்சியை வாங்கிவந்து சுத்தம்‌ செய்து தேவையான அளவுகளில்‌ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்‌.

தேங்காயைத்‌ துருவிப்‌ பால்‌ பிழிந்து, அதனொடு சுமார்‌ 2% லிட்டர்‌ அளவு வரும்படியாக நீர்‌ சேர்த்துக்‌ கலந்துகொள்ளவும்‌.

மல்லி, புதினா இலைகளை வேர்‌, தண்டு இவை நீக்கிச்‌ சுத்தப்படுத்தி வைத்துக்‌ கொள்ளவும்‌. சிறிய, பெரிய வெங்காயங்களைத்‌ தோல்‌ நீக்கி நீளவாட்டில்‌ அரிந்து கொள்ளவும்‌.

உரித்த பூண்டு, இலவங்கப்‌ பட்டை, கிராம்பு, ஏலக்காய்‌ ஆகியவற்றில்‌ பாதி பாதி அளவு எடுத்து, இஞ்சி, கசகசா, சோம்பு, சாதிக்காய்‌ ஆகியவற்றொடு சேர்த்து விழுதாக அரைத்துக்‌ கொள்ளவும்‌.

200 கிராம்‌ நெய்யை ஒரு வாய்‌ அகன்ற பாத்திரத்தில்‌ ஊற்றி அடுப்பில்‌ வைக்கவும்‌. நெய்‌ காய்ந்ததும்‌, விழுதாக அரைத்ததுபோக மீதி இருக்கும்‌ இலவங்கப்‌ பட்டை, கிராம்பு, ஏலக்காய்‌, முந்திரிப்‌ பருப்பு ஆகியவற்றை அதில்‌ போட்டு வறுக்கவும்‌. பின்‌, அரைத்துவைத்துள்ள விழுதை அதில்‌ சேர்க்கவும்‌. பூண்டை, ஒன்றிரண்டாகத்‌ தட்டி அதில்‌ போடவும்‌. கூடவே தக்காளி, பச்சை மிளகாய்‌ ஆகியவற்றை ஒன்றிரண்டாக நறுக்கி அதில்‌ போட்டு, வெங்காயம்‌, புதினா, மல்லித்‌ தழை ஆகியவற்றையும்‌ அதில்‌ இட்டுக்‌ கிளறவும்‌. எல்லாம்‌ ஒன்று சேர்த்து ஓரளவு வதங்கி மசாலா வாசனை வந்தவுடன்‌ ஆட்டு இறைச்சித்‌ துண்டுகளையும்‌ அதில்‌ போட்டு வதக்கி மசாலாவும்‌, மாமிசமும்‌ ஒன்றாகக்‌ கலந்து வருமாறு கிளறிக்‌ கொண்டிருக்கவும்‌.

பிறகு, நீர்க்கத்‌ தயாரித்து வைத்துள்ள தேங்காய்ப்‌ பாலை ஊற்றிக்‌ கொதிக்க விடவும்‌. ஆட்டு இறைச்சி பாதி அளவு வெந்தவுடன்‌, அரிசியைக்‌ கழுவி அதில்‌ இடவும்‌. மஞ்சள்‌ பொடி, மிளகாய்ப்‌ பொடி, உண்பு ஆகியவற்றையும்‌ கலந்து கிளறிவிடவும்‌. அரிசியும்‌ மாமிசமும்‌ முக்கால்‌ பங்கு வெந்தவுடன்‌, எலுமிச்சம்‌ பழத்தை நறுக்கிச்‌ சாறு பிழிந்து அதில்‌ சேர்க்கவும்‌. மீதமுள்ள நெய்யையும்‌ ஊற்றவும்‌. நன்றாகக்‌ கிளறி மூடிவிட்டு, அடுப்பின்‌ தீயைக்‌ குறைக்கவும்‌. அப்படியே பாத்திரத்தின்‌ மூடி மீது கொஞ்சம்‌ தணலை வைத்து 10-15 நிமிடங்கள்‌ பொறுத்திருக்கவும்‌. பிறகு எடுத்துப்‌ பரிமாறவும்‌.

இந்த ஆட்டுறைச்சி பிரியாணிக்குத்‌ துணையாக வெங்காயத்‌ தயிர்ப்‌ பச்சடி செய்து கொள்ளலாம்‌. சிலர்‌ ஆட்டு எலும்பு, கத்தரிக்காய்‌, மாங்காய்‌ போட்ட பருப்புக்‌ குழம்பையும் (தாளிச்சா எனச்‌ சொல்வார்கள்‌) தயாரித்துச்‌ சேர்த்து உண்பார்கள்‌.

பிரியாணி உண்டவுடன்‌ அது நன்கு ஜீரணமாவதற்காக “ஸ்டிராங்கான’ தேநீர்‌ ஒரு கோப்பை அருந்துவதும்‌, சில இடங்களில்‌ வழக்கத்தில்‌ உள்ளது.

இப்பிரியாணி உண்பதற்குச்‌ சுவையும்‌ மிகுந்த ஊட்டச்‌ சத்தும்‌ கொண்ட ஒரு உணவாகும்‌.

ஆட்டு இறைச்சி வறுவல்‌‌

தேவையான பொருள்கள்‌

எலும்பு நீக்கிய ஆட்டிறைச்சி – 500 கிராம்‌

இஞ்சி – 1 துண்டு

மஞ்சள்தூள்‌ – 1 ஸ்பூன்‌

மிளகு – 2 ஸ்பூன்‌

சீரகம்‌ – 1/2 ஸ்பூன்

தேங்காய்‌ – 1/2 முடி

கிராம்பு -2

பட்டை – 1 துண்டு

தக்காளி – 3

பெரிய பூண்டு (உரித்தது) – 4

மல்‌‌லித்‌ தூள்‌ – 2 ஸ்பூன்‌

மிளகாய்த்‌ தூள்‌ – 1 ஸ்பூன்‌

சோம்பு – 2 ஸ்பூன்‌

௧௪கசா – 2 ஸ்பூன்‌

சின்னவெங்காயம்‌ _ 250 கிராம்‌

கறிவேப்பிலை – 1 கொத்து

சமையல்‌ எண்ணெய்‌ – 50 மி.லி

சுவைக்கு ஏற்ப உப்பு

செய்முறை

பூண்டையும்‌ இஞ்சியையும்‌ சுத்தப்படுத்தி, அதில்‌ பாதி பாதி அளவு எடுத்து விழுதாக அறைத்துக்‌ கொள்ளவும்‌.

பாத்திரத்தில்‌ ½ லிட்டர்‌ தண்ணீர்விட்டு அடுப்பிலேற்றி அரைத்த விழுதை அதில்‌ டோட்டுக்‌ கொதிக்கவிடவும்‌.

கொதிவந்தவுடன்‌, சுத்தப்படுத்தித்‌ துண்டுகள்‌ செய்து ஆட்டிறைச்சியை அதில்‌ போட்டுக்‌ கூடவே மஞ்சள்தூள்‌ சேர்த்து நன்றாக வேகவிடவும்‌. கறி வெந்தவுடன்‌ அடுப்பிலிருந்து. பாத்திரத்தை இறக்கி இறைச்சியையும்‌, நீரையும்‌ தனித்‌ தனியாகப்‌ பிரித்து வைத்துக்‌ கொள்ளவும்‌.

மிளகு, சீரகம்‌, சோம்பு, கசகசா, தேங்காய்‌ ஆகியவற்றை நன்கு அரைத்து அதனொடு மிளகாய்த்‌ தூள்‌, மல்லித்தூள்‌ ஆகியவற்றையும்‌ கலந்து, தேவையான அளவு உப்பையும்‌ சேர்த்து, வெந்த கறியில்‌ இட்டுப்‌ பிசறி வைக்கவும்‌.

வாணலியில்‌ சமை யல்‌ எண்ணெயை ஊற்றி அடுப்பில்‌ வைத்து எண்ணெய்‌ காய்ந்ததும்‌, கிராம்பு, . பட்டை ஆகியவற்றைப்‌ போட்டுச்‌ சிறிது வறுத்து, நறுக்கி வைத்துள்ள தக்காளி, வெங்காயம்‌, மற்றும்‌ கறிவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை எண்ணெயில்‌ இட்டு நன்றாக வதக்கவும்‌, மசாலா கலந்து பிசறி வைத்திருக்கும்‌ ஆட்டுறைச்சித்‌ துண்டுகளையும்‌, அதனொடு சேர்த்து முன்பு எடுத்துவைத்திருக்கும்‌ கறி வேகவைத்த நீரையும்‌ ஊற்றிப்‌ பாத்திரத்தை மூடி வேகவிடவும்‌.

தீ சீராக இருப்பது அவசியம்‌. கறி நன்றாக வெந்தவுடன்‌ எடுத்துப்‌ பறிமாறவும்‌.

ஆட்டு ஈரல்‌, கோழி இறைச்சி, உடும்பு இறைச்சி, மான்‌ கறி, ஆமை இறைச்சி, முயல்‌ கறி ஆகியவற்றையும்‌ இதே முறையில்‌ வறுவலாகச்‌ செய்து உண்டால்‌, அந்தந்த மாமிசங்களின்‌ மருத்துவப்‌ பயன்களைப்‌ பெறலாம்‌.

ரசம்‌, மற்றூம்‌ சூப்பு வகைகள்‌

இறைச்சிகளில்‌ உள்ள பெரும்‌ பகுதி சத்துகளை அற்புதமான முறையில்‌ ரசம்‌, மற்றும்‌ சூப்பு வகைகள்‌ நமக்குக்‌ கிடைக்கும்படி செய்கிறது.

ஆட்டின்‌ எலும்பு, கால்‌, தலை, கறி, குடல்‌, ஈரல்‌ ஆகியவற்றில்‌ ரசம்‌, மற்றும்‌ சூப்பு செய்து உண்பது நம்‌ மக்களின்‌ உணவுப்‌ பழக்க வழக்கங்களுள்‌ ஒன்றாகும்‌.

கெட்டி உணவை உண்ண இயலாத நோயாளிகளுக்கும்‌, சூப்பு ஓர்‌ அரு மருந்தாகவும்‌, எளிதில்‌ சீரணமாகும்‌ உணவாகவும்‌, சக்தியையும்‌, போஷாக்கையும்‌ அளிக்கவல்லதாகவும்‌ விளங்குகிறது.

வளரும்‌ குழந்தைகளுக்கும்‌, தினசரி, சூப்பை (அல்லது ரசத்தை) ஓரளவு உணவோடு சேர்த்துக்‌ கொடுத்து வருவோமானால்‌, அவர்களின்‌ ஆரோக்கியத்திற்கும்‌ வளர்ச்சிக்கும்‌ அது உறுதுணை செய்யும்‌. மொத்தத்தில்‌ குழந்தைகள்‌, வாலிபர்கள்‌, முதியவர்கள்‌, நோயாளிகள்‌ ஆகிய அனைவருக்குமே இது சக்தியளிக்கும்‌ உணவாகும்‌. இங்குச்‌ சில வகை சூப்பு தயாரிக்கும்‌ முறைகளைக்‌ காண்போம்‌.

ஆட்டுத்‌தலை சூப்பு

தேவையான பொருள்கள்‌

ஆட்டுத்‌ தலை – 1

மிளகு – 1 ஸ்பூன்‌

சீரகம்‌ – 1/2 ஸ்பூன்

சோம்பு – 1/2 ஸ்பூன்

பூண்டு – 2

கிராம்பு – 3

பட்டை – 1 துண்டு

கசகசா – 2 ஸ்பூன்‌

சமையல்‌ எண்ணெய்‌ – 2 ஸ்பூன்‌

சின்ன வெங்காயம்‌ – 200 கிராம்‌

தக்காளி – 8

பச்சை மிளகாய்‌ – 6

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்துமல்லித்‌ தழை – சிறிதளவு

இஞ்சி – 1 துண்டு

தேங்காய்‌ – 1/4 மூடி

சமையல்‌ எண்ணெய்‌ – 2 ஸ்பூன்‌

உப்பு சுவைக்கு ஏற்ப.

செய்முறை

ஆட்டுத்‌ தலையை வாங்கிவந்து வெந்நீரில்‌ நனைத்து, ஒரு மழுங்கிய கத்தியால்‌ சுரண்டினால்‌ மேலுள்ள ரோமங்கள்‌ அகன்றுவிடும்‌. பின்‌ தலையில்‌ வாட்டி மெல்லிய ரோமங்களைப்‌ பொசுக்கிவிடவும்‌. பிறகு இறைச்சிக்‌ கடையில்‌ கொடுத்துத்‌ தேவையற்ற எலும்புகளை நீக்கித்‌ துண்டுகளாக வெட்டி வாங்கிக்‌ கொள்ளவும்‌.

இவ்வாறு ஆட்டுத்‌ தலையைச்‌ சுத்தம்‌ செய்யத்‌ தெரியாதவர்களும்‌, இந்த முறையில்‌ சுத்தம்‌ செய்த தலைறைச்சியை உண்ணப்‌ பிடிக்காதவர்களும்‌, பின்வரும்‌ முறையில்‌ சுத்தம்‌ செய்து பயன்படுத்தலாம்‌. இறைச்சிக்‌ கடையிலேயே, தலையை’ வாங்கும்பொழுது மேல்‌ தோலை உரித்துப்‌ பின்‌ தேவையற்ற எலும்புகளை நீக்கித்‌ துண்டுகளாக வெட்டி வாங்கி வந்து பயன்படுத்தலாம்‌.

அரிசியைக்‌ கழுவிய கழு நீரில்‌ சுமார்‌ 3 லிட்டர்‌ எடுத்து ஒரு பாத்திரத்தில்‌ ஊற்றிக்‌ கொதிக்க வைக்கவும்‌.

இஞ்சி, பூண்டு இரண்டையும்‌ விழுதாக அரைத்து, மஞ்‌௪எள்‌ தூளையும்‌, வெட்டி வைத்த தலை இறைச்சியையும்‌ அதனொடு சேர்த்துக்‌ கொதிக்கும்‌ கழு நீரில்‌ போட்டு வேகவிடவும்‌.

தலைறைச்சி நன்கு வெந்ததும்‌, இறக்கிவைத்து*கொண்டு, ஒரு வாணலியை அடுப்பில்‌ வைத்து எண்ணெய்‌ விட்டு, இலவங்கம்‌, பட்டை ஆகிய இரண்டையும்‌ போட்டுப்‌ பொறிய விடவும்‌. பிறகு வெங்காயம்‌, தக்காளி, பச்சை மிளகாய்‌ ஆகியவற்றை நறுக்கி இறைச்சிவேப்பிலை, மல்லித்‌ தழை ஆகியவற்றையும்‌ சேர்த்து வாணலியில்‌ இட்டு நன்கு வதக்கவும்‌.

இந்த வதக்கலை அப்படியே தலை இறைச்சியில்‌ கொட்டிக்‌ கிளறி மீண்டும்‌ கறியை அடுப்பிலேற்றிக்‌ கொதிக்க வைக்கவும்‌.

தேங்காய்‌, கசகசா, மிளகு, சீரகம்‌, சோம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்துக்‌ கொதித்துக்‌ கொண்டிருக்கும்‌ சூப்பில்‌ சேர்த்துக்‌ கிண்டி, ஒரு கொதி வந்ததும்‌ இறக்கிப்‌ பரிமாறவும்‌.

தலை இறைச்சிக்குப்‌ பதிலாக மூட்டெலும்புச்‌ சூப்பு, நெஞ்செலும்புச்‌ சூப்பு, கல்லீரல்‌ சூப்பு ஆகியவற்றையும்‌ இதே முறையில்‌ தயார்‌ செய்து அருந்திப்‌ பலன்‌ பெறலாம்‌.

ஆட்டுக்கால்‌ சூப்பு

ஆட்டுக்‌ கால்‌ சூப்பு நன்கு பசியைத்‌ தூண்டும்‌, என்புருக்கி நோயாளிகளுக்கும்‌, டைபாய்டு காயச்சலால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கும்‌ உடல்‌ ஆயாசத்தை நீக்கிச்‌ சக்தியைத்‌ தரும்‌ ஓர்‌ அருமருந்தாகவும்‌ செயல்படுகிறது.

தேவையான பொருள்கள்‌

ஆட்டுக்‌ கால்கள்‌ – 4

மிளகாய்த்‌ தூள்‌ – 1 ஸ்பூன்‌

மல்லித்‌ தூள்‌ – 1 ஸ்பூன்‌

மற்றும்‌ ஆட்டுத்‌ தலை சூப்பிற்குத்‌ தேவையான அத்தனை பொருள்களும்‌ இதற்கும்‌ தேவையாகும்‌.

செய்முறை

ஆட்டுக்‌ கால்களைக்‌ கொண்டுவந்து, வெந்நீரில்‌ நனைத்து ஒரு மழுங்கிய கத்தியால்‌ சுரண்டி, ஆட்டுத்‌ தலையைச்‌ சுத்தப்படுத்துவது போலவே சுத்தப்படுத்தித்‌ தீயில்‌ பொசுக்கி எடுத்துக்‌ கொள்ளவும்‌. தேவைப்பட்டால்‌ துண்டுகளாக வெட்டிக்‌ கொள்ளலாம்‌. இல்லாவிட்டால் முழுக்‌ கால்களை அப்படியே சூப்புக்குப்‌ பயன்படுத்தலாம்‌.

ஆட்டுத்தலையைச்‌ சூப்பு வைப்பது போலவே ஆட்டுக்கால்‌ சூப்பு தயாரிக்க வேண்டும்‌.

வெங்காயம்‌, தக்காளி, பச்சை மிளகாய்‌, கறிவேப்பிலை, கொத்துமல்லித்‌ தழை ஆகியவற்றொடு மிளகாய்த்தூளையும்‌, மல்லித்தூளையும்‌ கலந்து வதக்கிக்கொண்டு பிறகு தலைச்‌ சூப்பு போன்றே பக்குவம்‌ செய்துகொள்ளவும்‌.

வயிற்றில்‌ புண்‌ உள்ளவர்கள்‌ சூப்பு அருந்தவேண்டுமென்றால்‌, பச்சை மிளகாய்‌, மிளகாய்த்‌ தூள்‌, மல்லித்‌ தூள்‌ ஆகியவற்றைச்‌ சேர்க்காமல்‌ சூப்பைத்‌ தயாரித்து அருந்துவது நல்லது.

தோஞ்சல்‌ என்ற கொழுப்புக்‌ குடல்‌ சூப்பு

வாய்ப்புண்‌, வயிற்றுப்புண்‌ ஆகியவற்றை ஆற்றும்‌ சக்தி இக் கொழுப்புக்‌ குடலுக்கு உண்டு.

உட்கொண்ட மருந்துகளின்‌ ஒவ்வாமை (அலர்ஜி) காரணமாக, வாய்‌, குடல்‌ வெந்தவர்களுக்குக்‌ கொழுப்புக்‌ குடல்‌ ஒரு நன்மருந்தாகப்‌ புண்ணை ஆற்றுகிறது.

ஆட்டு இறைச்சிக்‌ கடைகளில்‌ தோஞ்சல்‌ அல்லது கொழுப்புக்‌ குடல்‌ என்று கேட்டு வாங்கி வரவும்‌. அதனை வெந்நீரில்‌ 1௦ நிமிடங்கள்‌ போட்டு வைத்திருந்து கழுவித்‌ துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்‌.

ஒரு பாத்திரத்தில்‌ ஒரு லிட்டர்‌ அரிசி கழுவிய கழு நீரை ஊற்றிக்‌ கொதிக்க விடவும்‌.

தேவையான அளவு இஞ்சி, பூண்டு இரண்டையும்‌ தோல்‌ நீக்கி விழுதாக அரைத்துக்‌ கொழுப்புக்‌ குடலுடன்‌ சேர்த்துக்‌ கொதிக்கும்‌ கழுநீரில்‌ இட்டு வேக விடவும்‌.

வாணலியில்‌ 2 ஸ்பூன்‌ சமையல்‌ எண்ணெய்‌ விட்டு அடுப்பில்‌ ஏற்றவும்‌. எண்ணெய் காய்ந்ததும்‌, இலவங்கப்‌ பட்டையைப்‌ போட்டுப்‌ பொரிந்ததும்‌, தோல்‌ நீக்கிப்‌ பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும்‌ கறிவேப்பிலையையும்‌ போட்டு வதக்கவும்‌. வெங்காயம்‌ வதங்கிய பின்பு, வெந்துகொண்டிருக்கும்‌ கொழுப்புக்‌ குடல்‌ சூப்பில்‌ அவற்றை (பட்டை, வெங்காயம்‌ வதக்கியதைப்‌ போட்டுக்‌ கிண்டிவிடவும்‌.

சூப்பு நன்றாகக்‌ கொதித்து வரும்பொழுது, கசகசா, சீரகம்‌, மிளகு, தேங்காய்‌ ஆகியவற்றை மை போல்‌ அரைத்துப்‌ போட்டுக்‌ கலக்கி ஒரு கொதி வந்ததும்‌ எடுத்துப்‌ பதமான சூட்டில்‌ அருந்தவும்‌.

மண்ணீரல்‌ / சுவரொட்டிச்‌ சூப்பு

மண்ணீரல்‌ என்றும்‌, சுவரொட்டி என்றும்‌ கூறப்படும்‌ ஆட்டின்‌ கணையமானது மிகச்‌ சிறப்பான மருத்துவக்‌ குணங்களைக்‌ கொண்டதாகும்‌. வாய்ப்புண்‌, வயிற்றுப்புண்‌ உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து ஆகவும்‌ செயல்படுகிறது. உப்பு சேர்க்காமல்‌ இச்சூப்பைத்‌ தயாரித்து உண்டு வந்தால்‌ மிகுந்த பலன்‌ உண்டு என்றும்‌ சொல்லப்படுகிறது.

தேவையான பொருள்கள்‌

ஆட்டின்‌ மண்ணீரல்‌ – 2

நெய்‌ – 1 தேக்கரண்டி

வெங்காயம்‌ _ 200 கிராம்

உப்பு – சுவைக்கு ஏற்ற அளவு

செய்முறை

மண்ணீரலைக்‌ கொண்டுவந்து கழுவி அதில்‌ 100 கிராம்‌ வெங்காயத்தைத்‌ தோல்‌ நீக்கி அரிந்து போட்டுச்‌ சுமார்‌ 1 1/2 லிட்டர்‌ நீரும்‌ 400 மிலி அளவிற்குச்‌ சுண்டிய பின்‌ பாத்திரத்தை இறக்கி, மண்ணீரலை எடுத்துத்‌ துண்டுகளாக நறுக்கி மீண்டும்‌ அதே நீரில்‌ போட்டுவிடவும்‌.

ஒரு வாணலியில்‌ நெய்‌ ஊற்றி, அடுப்பில்‌ ஏற்றவும்‌. மீதமுள்ள 100 கிராம்‌ வெங்காயத்தைத்‌ தோல்‌ நீக்கி அரிந்து அவ்வாணலியில்‌ போட்டு வதக்கவும்‌. வெங்காயம்‌ வெந்து சிவந்ததும் சூப்பைத்‌ தாளித்துவிடவும்‌. இது வாய்ப்புண்‌, குடல்‌ புண்ணிற்கு மிகச்‌ சிறந்த மருந்தாகும்‌.

வாய்ப்புண்‌ குணமாக மண்ணீரல்‌ வறுவல்‌

தேவையான எண்ணிக்கையில்‌ மண்ணீரலை வாங்கி வரவும்‌. அவற்றைத்‌ துண்டுகளாக நறுக்காது, குறுக்கும்‌ நெடுக்குமாக, ஆழமாக இரண்டு மூன்று கீறல்களை ஒரு கூர்மையான கத்தியால்‌ கீறி விடவும்‌.

மிளகுத்‌ தூள்‌, சீரகத்‌ தூள்‌, உப்புத்‌ தூள்‌ மூன்றையும்‌ ருசிக்கு ஏற்றவாறு அளவுடன்‌ கலந்து கீறல்களின்‌ உள்ளும்‌, மண்ணீரலின்‌ மேலும்‌ பூசவும்‌, பின்‌ கொஞ்ச நேரம்‌, அப்படியே அச்சுவைகள்‌ ஊறுவதற்காக வைத்திருக்கவும்‌.

தோசைக்‌ கல்லை அடுப்பில்‌ வைத்து 2 ஸ்பூன்‌ சமையல்‌ எண்ணெயை அதில்‌ விட்டு மிளகு, சீரகத்தூள்‌ பூசி வைத்திருக்கும்‌ மண்ணீரலை அதில்‌ போட்டு அடிக்கடி புரட்டிப்‌ புரட்டி வேக வைக்கவும்‌. நன்கு வெந்தவுடன்‌ எடுத்துப்‌ பரிமாறவும்‌.

மண்ணீரல்‌ வாட்டல்‌ (சுட் மண்ணீரல்‌)

வாய்ப்புண்‌, வயிற்றுப்புண்‌ உள்ளவர்கள்‌, இதே முறையில்‌ மண்ணீரலை மிளகு, சீரகத்‌ தூள்‌ பூசி நெருப்பில்‌ சுட்டு (வாட்டி)த்தின்று நோய்‌ தீர்க்கும்‌ வழக்கம்‌ நமது நாட்டில்‌ பரவலாக உள்ளது.

கல்‌லீரல் ‌/ ஈரல்‌ வறுவல்‌

ஆட்டின்‌ ஈரலில்‌ அதன்‌ கறியைவிடச்‌ சத்துகள்‌ அதிகம்‌ உண்டு என ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம்‌. குறிப்பாக, 100 கிராம்‌ செம்மறியாட்டு ஈரலில்‌ வைட்டமின்‌ ஏ 6690 மி.கிராம்‌ உண்டு என்பதையும்‌ அறிந்தோம்‌. வைட்டமின்‌ ஏ குறைவால்‌ உண்டாகும்‌ பார்வைக்‌ குறைவு நோய்க்கு இவ்வீரல்‌ ஒரு நல்ல மருந்தாகும்‌.

தேவையான பொருள்கள்‌

செம்மறியாட்டு ஈரல்‌ – 1 (300 கிராம்‌)

சமையல்‌ எண்ணெய்‌ – 5௦ மிலி

நறுக்கப்பட்ட வெங்காயம்‌ – 150 கிராம்‌

உரித்த பூண்டு – 2

தோல்‌ சீவிய இஞ்சி – ஒரு சிறிய துண்டு

சோம்பு – 5 கிராம்‌

மிளகாய்ப்‌ பொடி – 2 ஸ்பூன்‌

மஞ்சள்‌ பொடி – 8 ஸ்பூன்‌

கறிவேப்பிலை – ஒரு கொத்து

உப்பு – சுவைக்கு ஏற்ப

செய்முறை

பூண்டையும்‌, சோம்பையும்‌, இஞ்சியையும்‌, சிறிது நீர்‌ விட்டுக்‌ கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும்‌.

ஈரலைச்‌ சுத்தம்‌ செய்து ஒரு பாத்திரத்தில்‌ போட்டு 1/2 லிட்டர்‌ நீர்‌ விட்டு வேகவைத்து இறக்கவும்‌. சூடு ஆறியதும்‌, தேவையான அளவுகளில்‌ துண்டுகளாக நறுக்கிக்‌ கொள்ளவும்‌.

ஈரலை வேகவைத்து நீரைக்‌ கொட்டிவிடாமல்‌ வைத்துக்கொள்ளவும்‌.

வாணலியை அடுப்பில்‌ வைத்து எண்ணெய்‌ காய்ந்ததும்‌, வெங்காயம்‌, கறிவேப்பிலை.மற்றும்‌ அரைத்த விழுதையும்‌ போட்டுச்‌ சிவக்க வதக்கவும்‌. பிறகு ஈரல்‌ வேகவைத்த நீரை விட்டு மஞ்சள்‌ பொடி, மிளகாய்ப்‌ பொடி, உப்பு ஆகியவற்றைப்‌ போட்டு வாணலியை மூடிக்‌ கொதிக்க விடவும்‌. நீர்‌ சுண்டி மசாலா திரண்டு வந்ததும்‌ துண்டுகளாக நறுக்கி வைத்துள்ள ஈரலைப்‌போட்டுக்‌ கிளறவும்‌. சுவையேறி ஈரல்‌ துண்டுகள்‌ நன்கு வறுபட்டதும்‌ எடுத்துவைத்துப்‌ பரிமாறவும்‌.

மருத்துவக்‌ குறிப்புகளும்‌ மருந்து செய்முறைகளும்

ஆட்டிறைச்சி சமைப்பதற்கு நூற்றுக்கணக்கான முறைகள்‌ உள்ளன. அவ்வளவையும்‌ இச்சிறு நூலில்‌ கொடுக்க இயலாததால்‌, சமையல்‌ குறிப்புகளை இத்துடன்‌ நிறுத்திக்‌ கொண்டு, சில மருத்துவக்‌ குறிப்புகளை இனிக்‌ காண்போம்‌.

பத்திய உணவான உயர்ரக கண்டம்‌

உப்புக்‌ கண்டம்‌ என்பதை “இறைச்சி வற்றல்‌’ என்றும்‌ கூறலாம்‌. எலும்புகளற்ற சுத்தமான ஆட்டிறைச்சியை வாங்கி வரவும்‌. மிளகாய்த்‌ தூள்‌, சீரகத்‌ தூள்‌, மஞ்சள்‌ தூள்‌, உப்புத்‌ தூள்‌ ஆகியவற்றைத்‌ தேவையான அளவு கலந்து இறைச்சித்‌ துண்டுகளொடு சேர்த்துப்‌ பிசறி வெயிலில்‌ காயவைக்கவும்‌. நன்கு காய்ந்தவுடன்‌ எடுத்துப்‌ பத்திரப்படுத்திக்கொண்டு தேவைக்கு ஏற்ப உணவுக்குப்‌ பயன்படுத்திக்கொள்ளவும்‌.

தேவையான பொழுது நன்கு நசுக்கித்‌ தட்டி, எண்ணெயில்‌ பொறித்துச்‌ சாப்பிடலாம்‌ சாம்பார்‌, மற்றும்‌ கறிக்‌ குழம்பு போன்று இவ்வுப்புக்‌ கண்டத்தையும்‌ சேர்த்துவைக்கச்‌ சுவையாக இருக்கும்‌.

இது ஒரு சிறந்த பத்திய உணவு ஆகும்‌ என்று அகத்தியர்‌ வைத்திய காவியம்‌ 1500, அகத்தியர்‌ 2000, போகர்‌ வைத்தியம்‌ 700, பதார்த்த குண சிந்தாமணி முதலிய நூல்கள்‌ விவரிக்கின்றன.

வெள்ளாட்டுப் பித்து அல்லது பிச்சு

வெள்ளாட்டின்‌ கல்லீரலை ஒட்டிப்‌ பித்தப்‌ பை இருக்கும்‌. இதனைச்‌ சாதாரணமாகப்‌ பித்து என மக்கள்‌ கூறுவார்கள்‌. இது மிகக்‌ கசப்புச்‌ சுவை கொண்டதாகையால்‌, இறைச்சிக்‌ கடைகளில்‌ மிக நுணுக்கமாக உடையாமல்‌ அழிந்தெடுத்து வீசிவிடுவார்கள்‌. எதிர்பாராமல்‌ பித்து உடைந்து உள்ளிருக்கும்‌ திரவப்பொருள்‌ கறியில்‌ படுமானால்‌, அறைச்சி கசப்புச்‌ சுவை உள்ளதாகிவிடும்‌.

இப்பித்து மிகச்‌ சிறந்த மருத்துவக்‌ குணங்கள்‌ கொண்டதாகும்‌. இன்றைக்கும்‌ நம்‌ கிராம மக்களுள்‌ பித்தின்‌ மருத்துவ ஆற்றலை அறிந்தவர்கள்‌ அநேகர்‌ இருக்கிறார்கள்‌. இவர்கள்‌ மாதத்திற்கு ஓரிரு தடவை கடைக்குச்‌ சென்று இப்பித்தை வாங்கி அப்படியே பச்சையாக விழுங்கி விடுவார்கள்‌. இதனால்‌ கண்பார்வை தெளிவாக இருக்கும்‌ என்பது இவர்களின்‌ நம்பிக்கை.

நம்பிக்கை மட்டுமல்ல, சித்த மருத்துவ உண்மையும்‌ இதுவே!

இப்படிப்‌ பச்சையாகப்‌ பித்தை உண்பதால்‌ இரத்தத்தில்‌ சர்க்கரையின்‌ அளவு கட்டுப்படுகிறது என்றும்‌, நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த சித்த மருந்து என்றும்‌ தற்போது அறியப்பட்டுவருகிறது.

பித்திற்கு மலமிளக்கிச்‌ செய்கையும்‌ உண்டு. சன்னி நோய்களுக்குக்‌ கொடுக்கப்படும்‌ வைரவ மாத்திரைகளிற்‌ பித்து சேர்த்தே செய்யப்படுகிறது.

கண்‌ எரிச்சலுக்கு அஞ்சனம்‌ (மை)

வெள்ளாட்டுப்‌ பித்தை வாங்கி வந்து அதனுள்‌ 10-12 மிளகைப்‌ புகுத்தி மண்‌ ஓட்டில்‌ வைத்து நிழலில்‌ உலர விடவும்‌. நன்கு உலர்ந்தவுடன்‌ எடுத்துப்‌ பத்திரப்படுத்தி வைத்துக்‌ கொள்ளவும்‌.

தேவைப்படும்‌ பொழுது, சந்தனக்‌ கல்லில்‌ தாய்ப்பால்‌ சில துளிகள்‌ விட்டு முன்னர்ப்‌ பத்திரப்படுத்தி வைத்துள்ள மிளகில்‌ ஒன்றை அதில்‌ இழைத்து மை போல்‌ கண்ணுக்கு இட்டுக்‌ கொண்டு வரவேண்டும்‌. கண்ணெரிச்சல்‌ நீங்கும்‌.

வெண்குட்டத்திற்குப்‌ பிச்சு மாத்திரை

தேவையான பொருள்கள்‌

வெள்ளாட்டுப்‌ பிச்சு _ 50 கிராம்‌

காட்டுச்‌ சீரகம்‌ _ 50 கிராம்‌

தரா இலை – 50 கிராம்‌

இம்மூன்று பொருள்களையும்‌ மருந்து அரைக்கும்‌ கல்வத்தில்‌ (குழி அம்மியில்‌) இட்டு நான்கு நாள்கள்‌ அரைக்கவும்‌. நன்கு அரைத்துப்‌ புளியங்‌ கொட்டை அளவு மாத்திரைகளாகச்‌ செய்து நிழலில்‌ உலர்த்தி எடுத்துப்‌ பத்திரப்படுத்திக்‌ கொள்ளவும்‌.

அளவு : 1. வேளைக்கு ஒன்று வீதம்‌ ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள்‌. மூன்று மாதம்‌.

            2.  இம்‌ மாத்திரையை நீர்‌ விட்டுக்‌ குழைத்து நோய்‌ கண்ட இடத்தில்‌ பூசி வரவும்‌.

      தீரும்‌ நோய்‌ : வெண்குட்டம்‌ எனப்படும்‌ லூகோடர்மா.

மூலக்கடுப்பு எனப்படும்‌ ஆ௪னக்‌ கடுப்பிற்கு ஆட்டுக்குடல்‌ மருந்து

வெள்ளாட்டுக்‌ குட்டியின்‌ சிறு கடல்‌ 5௦ திராம்‌ அளவிற்கு வாங்கி வந்து சுத்தப்படுத்திச்‌ சிறு துண்டுகளாக நறுக்கிக்‌ கொள்ளவும்‌. 50 கிராம்‌ கருணைக்‌ கிழங்கையும்‌ தோல்‌ சீவிச்‌ சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்‌ கழுநீர்‌ அல்லது மோரில்‌ கழுவி எடுத்துக்கொள்ளவும்‌. இரண்டையும்‌ ஒன்றாகச்‌ சேர்த்துச்‌ சிறிது நீரும்‌ உப்பும்‌ கூட்டி நன்றாக வேகவைத்து, ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள்‌ வீதம்‌ மூன்று நாள்களுக்கு உண்டு வரவும்‌. மூலக்கடுப்புகள்‌ பறந்து போகும்‌.

தாய்ப்‌ பால்‌ ஊற்றெடுக்க

வெள்ளாட்டுக்‌ கொழுப்பைக்‌ காய்கறி, மற்றும்‌ பூண்டு சேர்த்து மூன்று நாள்களுக்கு ஒருமுறை உண்டு வரத்‌ தாய்ப்பால்‌ அமிர்தமாகச்‌ சுரக்கும்‌.

ஆட்டுத்‌தலை லேகியம்‌

மூளை பலம்‌ பெற்று நினைவாற்றலை அதிகப்படுத்தவும்‌, உடலைச்‌ செழுமை பெறச்‌செய்யவும்‌, விந்துச்‌ சுரப்பினை அதிகரிக்கச்‌ செய்யவும்‌, வல்லதான பல மருந்துகளில்‌ ஆட்டுத்‌ தலை லேகியமும்‌ ஒன்று. அதன்‌ செய்முறையை இங்குக்‌ காண்போம்‌.

தேவையான பொருள்கள்‌

வயதான வெள்ளாட்டின்‌ தலை – 3

பனை வெல்லம்‌ – 1400 கிராம்

வெள்ளிப்‌ பற்பம்‌ – 20 கிராம்‌

ஏலரிசி – 20 கிராம்‌

சாதிக்காய்‌ – 20 கிராம்

சாதிப்பத்திரி – 20 கிராம்

குங்குமப்‌ பூ – 5 கிராம்‌

இலவங்கப்‌ பட்டை – 20 கிராம்‌

மிளகு – 100 கிராம்‌

சீரகம்‌ – 100 கிராம்‌

முந்திரிப்‌ பருப்பு – 100 கிராம்‌

வாதுமைப்‌ பருப்பு – 100 கிராம்‌

பிஸ்தாப்‌ பருப்பு – 100 கிராம்‌

தேன்‌ – 300 மிலி

செய்முறை

ஏலரிசி, சாதிக்காய்‌, சாதி பத்திரி, இலவங்கப்‌ பட்டை, மிளகு, சீரகம்‌ ஆகிய சரக்குகளைத் தனித்‌ தனியாக இடித்துச்‌ சலித்து வெள்ளிப்‌ பற்பத்தையும்‌ சேர்த்து ஒன்றாகக்‌ கலந்து கொள்ளவும்‌.

முந்திரிப்‌ பருப்பு, வாதுமைப்‌ பருப்பு, பிஸ்தாப்‌ பருப்பு ஆகிய பருப்பு வகைகளைத்‌ தண்ணீர்‌ விடாமல்‌ மை போல்‌ அரைத்து வைத்துக்கொள்ளவும்‌.

முன்‌ தயாரித்துள்ள வெள்ளிப்‌ பற்பக்கலவையோடு, அரைத்து வைத்துள்ள விழுதையும்‌ந ன்றாகப்‌ பிசைந்து கலந்துகொள்ளவும்‌.

ஆட்டுத்‌ தலையின்‌ தோல்‌ உரித்து நீக்கிவிட்டு, சுத்தப்படுத்தித்‌ துண்டுகளாக வெட்டி உரலிலிட்டு நன்றாக இடித்து ஒரு பழகிய மண்பானையில்‌ போட்டுப்‌ பத்து லிட்டர்‌ சுத்தமான நீர்‌ விட்டு, மாமிசம்‌ குழையும்படி சுண்டக்‌ காய்ச்சவும்‌. பத்து லிட்டர்‌ நீரும்‌ ஒரு லிட்டர்‌ அளவுக்குச்‌ சுண்டும்படி காய்ச்சி, நீரை வடிகட்டிக்‌ கொதிக்கவைத்து நன்றாகக்‌ குலுக்கி அந்த நீரையும்‌ வடிகட்டி எடுத்துக்‌ கொள்ளவும்‌. இவ்வாறே மீண்டும்‌ ஒருமுறை செய்து கறியை வேகவைத்து நீர்‌ சுமார்‌ 2 லிட்டர்‌ அளவிற்குச்‌ சேகரித்துக்‌ கொள்ளவும்‌. இந்நீரை மேலும்‌ இரண்டு மூன்று முறை வடிகட்டி எடுத்துக்‌ கொள்ளவும்‌. இந்நீரில்‌ பனைவெல்லத்தை உடைத்துப்‌ போட்டுக்‌ கரைத்து மறுபடியும்‌ வடிகட்டி எடுத்துக்‌ கொள்ளவும்‌.

லேகியம்‌ தயாரிக்கத்‌ தேவையான இரும்புக்‌ கடாயை அடுப்பில்‌ ஏற்றி முன்பு சேகரித்து வைத்துள்ள பனைவெல்லம்‌ கலந்த நீரை ஊற்றிச்‌ சிறு தீயில்‌ எரிக்கவும்‌.

நீர்‌ பாகு பதத்திற்கு வரும்போது முன்பு தயார்‌ செய்து வைத்திருக்கும்‌ மருந்துச்‌ சரக்குகளையும்‌ குங்குமப்‌ பூவையும்‌ அதில்‌ போட்டு நன்கு கிளறி இறக்கிவிடவும்‌.

கடைசியாகத்‌ தேன்விட்டுப்‌ பிசைந்து பத்திரப்படுத்திக்கொள்ளவும்‌.

அளவு : 6 முதல்‌ 12 கிராம்‌ வரை காலை, மாலை இருவேளைகள்‌.

பத்தியம்‌ : மருந்து உட்கொள்ளும்‌ காலங்களில்‌ உடலுறவைத்‌ தவிர்ப்பதும்‌, நல்ல சத்தான, புஷ்டி தரும்‌ உணவுகளை உண்பதும்‌ மிகுந்த பலனைத்‌ தரும்‌.

ஆட்டுக்‌ கால்‌ லேகியம்‌

தேவையான பொருள்கள்‌

கொழுத்த ஆட்டுக்‌ கால்‌ – 20

வெல்லம்‌ – 1 கிலோ

நெய்‌ _ 250 கிராம்‌

தேன்‌ – 200 கிராம்‌

வெள்ளாட்டுப்‌ பால்‌ _ 500 மிலி

பசுப்பால்‌ – 500 மிலி

கருங்குறுவை அரிசி –  200கிராம்‌

வெங்காயம்‌ _ 200 கிராம்‌

நிலப்‌ பனங்‌ கிழங்கு – 20 கிராம்‌

பூமிச்சாக்கரைக்‌ கிழங்கு –  30கிராம்‌

சீமைக்‌ கிச்சிலிக்‌ கிழங்கு _ 20 கிராம்‌

ஆனை நெருஞ்சி முள்‌ – 20 கிராம்‌

சீமை அக்கிர காரம்‌ _ 20 கிராம்

இலவங்கப்‌ பட்டை – 20 கிராம்‌

அரிசித்‌ திப்பிலி –  20கிராம்‌

கொத்தமல்லி இலை – 200 கிராம்

சுக்கு – 20 கிராம்‌

முற்றிய சந்தனக்கட்டை – 20 கிராம்‌

சாதிபத்திரி –  50கிராம்‌

கசகசா – 200 கிராம்‌

வாதுமைப்‌ பருப்பு –  200கிராம்‌

சாரைப்‌ பருப்பு – 100 கிராம்‌

பேரீச்சங்‌ காய்‌ _ 20 கிராம்

பிஸ்தாப்‌ பருப்பு –  20கிராம்‌

சல்கஜா பருப்பு –  20கிராம்‌

சாலாமிஸிரி _ 20 கிராம்‌

கருஞ்சீரகம்‌ _ 20 கிராம்‌

பூனைக்காலி விதையை உடைத்த பருப்பு – 50கிராம்‌

சாதிக்காய்‌ – 500 கிராம்‌

செய்முறை

ஆட்டுக்‌ கால்களைச்‌ சூப்பிற்குச்‌ சுத்தப்படுத்தியது போல்‌ சுத்தப்படுத்திக்‌ குளம்புகளை நீக்கி, தீயில்‌ நன்கு வாட்டி, மயிர்களைப்‌ பொசுக்கிச்‌ சிறு துண்டுகளாக நறுக்கவும்‌, அத்துண்டுகளை இரும்புரலில்‌ இட்டு உலக்கையால்‌ நைய இடித்து ஒரு பாத்திரத்தில்‌ போட்டு, வெங்காயத்தைக்‌ குறுக நறுக்கி அதில்‌ சேர்த்துப்‌ பத்து லிட்டர்‌ தண்ணீர்‌ விட்டு நன்கு வேகவிடவும்‌. பத்து லிட்டர்‌ தண்ணீரும்‌ 1 லிட்டர்‌ அளவிற்குச்‌ சுண்டியபின்‌ இறக்கிவைத்து நன்றாகப்‌ பிசைந்து அந்த நீரை மட்டும்‌ வடிகட்டி எடுத்துவைத்துக்‌ கொள்ளவும்‌.

கருங்குறுவை அரிசியை ஆட்டுப்‌ பாலில்‌ ஊறவைத்து மை போல்‌ அரைத்து எடுத்துக்‌ கொள்ளவும்‌.

கசகசா முதல்‌ சாதிக்காய்‌ வரை உள்ள சரக்குகளைப்‌ பசுப்பால்‌ விட்டு மை போல்‌ விழுதாக அரைத்து எடுத்துக்‌ கொள்ளவும்‌.

நிலப்பனங்‌ கிழங்கு முதல்‌ சாதிப்பத்திரி வரை உள்ள சரக்குகளைச்‌ சூரணமாக இடித்து, சலித்து, ஒன்றாகக்‌ கலந்து எடுத்துக்கொள்ளவும்‌.

ஆட்டுக்கால்‌ வேகவைத்த நீரில்‌ வெல்லத்தை உடைத்துப்‌ போட்டுக்‌ கரைத்து வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனொடு, மீதம்‌ இருக்கும்‌ ஆட்டுப்‌ பால்‌, பசுப்‌ பால்‌ ஆகியவற்றைச்‌ சேர்த்து அடுப்பில்‌ ஏற்றிச்‌ சிறு தீயில்‌ பாகு பதம்‌ வரும்வரை அடிபிடிக்காமல்‌ கிளறிக்‌ கொண்டே இருக்கவும்‌. பாகுபதம்‌ வந்ததும்‌, அடுப்பிலிருந்து பாத்திரத்தை இறக்கி வைத்து அரைத்து வைத்து இருந்த விழுதுகளையும்‌, சூரணங்களையும்‌ அதில்‌ இட்டு நன்றாகக்‌ கிண்டி, தேனையும்‌, நெய்யையும்‌ சேர்த்து மறுபடியும்‌ ஒருசேரக்‌ கிண்டி ஆறியதும்‌ எடுத்துப்‌ பத்திரப்படுத்தவும்‌.

அளவு : வேளைக்கு 5 கிராம்‌ வீதம்‌ ஒரு நாளைக்கு இரு வேளைகள்‌.

பயன்‌ : ஒரு மாதம்‌ உண்டுவந்தாலே இழந்த ஆண்மையைத்‌ திரும்பப்‌ பெறுவர்‌. உடல்‌ வலுப்பெற்றுச்‌ செழுமை பெறுவர்‌. மிக அதிக அளவிற்குப்‌ போகச்‌ சக்தியும்‌ விந்து உற்பத்தியும் பெருகும்‌.

வெள்ளாட்டுப்‌ பால்‌

‘பால்‌ அசைவ உணவா? சைவ உணவா” என்று முடிவு செய்ய இயலாத அளவிற்குச்‌ சைவ உணவு உண்பவர்களும்‌, அசைவ உணவு உண்பவர்களும்‌ ஆகிய இரு சாராருமே பாலைத் தங்களின்‌ உணவுப்‌ பொருள்களில்‌ ஒன்றாகக்‌ கொண்டிருக்கின்றனர்‌.

மிருகங்களின்‌ பாலைப்பற்றித்‌ தனியாக மருத்துவ நூல்‌ எழுதும்‌ அளவிற்குப்‌ பாலின்‌ மருத்துவக்‌ குணங்கள்‌ விளங்குகின்றன என்றால்‌ அது மிகையன்று.

இருப்பினும்‌, வெள்ளாட்டுப்‌ பாலின்‌ மகத்துவம்‌ கருதி இச்சிறு நூலில்‌ அதற்கு மட்டும்‌ இடம்‌ ஒதுக்கி இருக்கின்றோம்‌.

அண்ணல்‌ காந்தியடிகளின்‌ அற்புத உணவு வெள்ளாட்டுப்‌ பால்‌ ஆகும்‌. மாட்டுப்‌ பாலில்‌ (பசு, மற்றும்‌ எருமைப்‌ பாலில்‌) நுண்ணுயிரிகள்‌ உண்டு. ஆனால்‌, ஆட்டுப்‌ பாலில்‌ நுண்ணுயிரிகள்‌ இல்லை என்பது தற்கால அறிவியல்‌ கண்டுபிடிப்பாகும்‌. நுண்ணுயிரிகள்‌ காரணமாக மாட்டுப்பாலைக்‌ காய்ச்சி அருந்துதலே நல்லது. ஆனால்‌, வெள்ளாட்டுப்‌ பாலைக்‌ காய்ச்சாமலே அருந்தலாம்‌.

100 கிராம்‌ வெள்ளாட்டுப்‌ பாலில்‌ 3.3 கிராம்‌ புரதமும்‌, 4.5 கிராம்‌ கொழுப்பும்‌, 4.6 கிராம்‌ மாவுச்‌ சத்தும்‌ உள்ளன.

170 மிலி கிராம்‌ சுண்ணாம்புச்‌ சத்தும்‌, 120 மி.கிராம்‌ பாஸ்பரச்‌ சத்தும்‌, 0.3 மி.கிராம்‌ இரும்புச்‌ சத்தும்‌ இதில்‌ இருக்கின்றன. மேலும்‌, 55 மைக்ரோகிராம்‌ வைட்டமின்‌ – ஏயும்‌, 0.05 மி.கிராம்‌ தயமினும்‌, 0.04 மி.கிராம்‌ ரிப்போஃபிளவினும்‌, 0.3 மி.கிராம்‌ நியாசினும்‌, 1.3 மைக்ரோ கிராம்‌ ஃபோலிக்‌ அமிலமும்‌, வைட்டமின்‌ – சி 1 மி.கிராமும்‌, 100 கிராம்‌ வெள்ளாட்டுப்‌ பாலில்‌ உள்ளன.

சோடியம்‌ 11.0 மி.கிராமும்‌, பொட்டாசியம்‌ 110 மி.கிராமும்‌, மற்றும்‌ பிற சில தாதுக்களும்‌ சேர்ந்து 100 கிராம்‌ வெள்ளாட்டுப்‌ பாலில்‌ 0.8 கிராம்‌ அளவிற்கு உள்ளன என்று ஆய்வு முடிவுகள்‌ தெரிவிக்கின்றன.

100 கிராம்‌ வெள்ளாட்டுப்‌ பாலை அருந்தினால்‌ நமது உடலிற்கு 72 கலோரி சக்தி கிடைக்கிறது.

ஆட்டுப்‌ பால்‌ வாய்ப்புண்‌, குடற்புண்‌ உள்ளவர்களுக்கு அருமருந்தாகும்‌. உட்புண்களை ஆற்றுவதில்‌ ஆட்டுப்பால்‌ பெரும்‌ பங்காற்றுகின்றது.

பசியைத்‌ தூண்டவல்லது. வாதம்‌, பித்தம்‌ ஆகியவற்றைக்‌ கட்டுப்படுத்தும்‌ ஆற்றலும்‌ இதற்குண்டு. காசநோய்‌, காய்ச்சலுட.ன்கூடிய பேதி (அதிசாரம்‌), சீதபேதி, கபம்‌, வாதத்தால்‌ உண்டான வீக்கம்‌ ஆகியவற்றை வெள்ளாட்டுப்‌ பாலை உண்டு குணப்படுத்த முடியும்

ஆட்டுப்‌ பால்‌ மருத்துவம்‌ – சில குறிப்புகள்‌

கசகசாவை மை போல்‌ அரைத்து வெள்ளாட்டுப்‌ பாலில்‌ கலந்து கொடுக்கச்‌ சீதபேதி‌ குணமாகும்‌.

வெள்ளாட்டுப்‌ பாலில்‌ சிறிது நீர்‌ சேர்த்துக்‌ காய்ச்சிப்‌ பனங்‌ கற்கண்டு சேர்த்துக்‌ காலை.மாலை அருந்திவந்தால்‌ கபம்‌ விலகும்‌.

இரத்தச்‌ சோகை, மஞ்சட்காமாலை முதலிய நோய்க்கு (அயச்‌ செந்தூரம்‌, அயகாந்தச செந்தூரம்‌ முதலிய) மருந்துகளைச்‌ சாப்பிடும்‌ நாள்களில்‌ வெள்ளாட்டுப்‌ பாலைக்‌ காய்ச்சி சாதத்துடன்‌ கலந்து உண்ண விரைவில்‌ நலம்‌ பெறலாம்‌. இது ஒரு பத்திய உணவாகும்‌.

மஞ்சட்‌ காமாலை நோய்க்குக்‌ கீழா நெல்லிச்‌ செடியை நைய அரைத்து வெள்ளாட்டுப்‌ பாலில்‌ கலந்து கொடுக்க நல்ல பலன்‌ தரும்‌.

பல்வேறு மருந்து தயாரிப்புக்கு வெள்ளாட்டுப்‌ பால்‌ பயன்படுகிறது என்பது சித்த மருத்துவ உண்மையாகும்‌.

“வெள்ளாட்டுப்‌ பாலுக்கு வியாதிஅறும்‌, மெய்‌ குளிரும்‌”என்றும்‌ “வெள்ளாட்டின்‌ சாதிப்பால்‌ முப்பிணியைத்தான்‌ சாடும்‌”என்றும்‌ அகத்தியர்‌ – 2000 என்ற சித்த மருத்துவ நூல்‌ கூறுகிறது.

“இது குணத்தில்‌ பசுப்‌ பாலைவிடச்‌ சிறந்தது. இயற்கையாகவே வெப்பமுள்ள உடலுக்கு மிகவும்‌ ஏற்றது. நல்ல பருத்த வெள்ளாட்டிலிருந்து கறந்த பால்‌ மிகச்‌ சிறந்தது” என்கிறது போஜன குதூகலம்‌’ என்ற வடமொழி நூல்‌.

வெள்ளாட்டுக்‌ குளம்பு பற்பம்‌‌

ஆடு, மாடு, குதிரை, மான்‌ முதலிய மிருகங்களின்‌ காலின்‌ முனைப்‌ பகுதிக்குக்‌ “குளம்பு’ என்று பெயர்‌. இக்குளம்பு அம்மிருகங்களின்‌ காலில்‌ நகம்‌ போன்ற உறுப்பாகும்‌. இக்குளம்பிற்கும்‌ சில மருத்துவக்‌ குணங்கள்‌ உண்டு என நமது நாட்டுச்‌ சித்தர்கள்‌ கண்டறிந்து கூறி உள்ளனர்‌. இங்கு வெள்ளாட்டுக்‌ குளம்பு கொண்டு பற்பம்‌ செய்யும்‌ முறையைக்‌ காணலாம்‌.

வெள்ளாட்டுக்‌ குளம்புகளைத்‌ தனியாகச்‌ சேகரித்து, (அல்லது சூப்பு தயாரிப்பதற்காகச்‌ சுத்தப்படுத்தும்‌ ஆட்டுக்‌ கால்களின்‌ குளம்புகளைச்‌ சேகரித்து), அரத்தால்‌ அராவி சுமார்‌ 35 கிராம்‌ குளம்புப்‌ பொடியைத்‌ தயாரித்துக்‌ கொள்ளவும்‌.

ஒரு பாத்திரத்தில்‌ 150 மி.லி. இளநீர்‌ விட்டுக்‌ குளம்புப்‌ பொடியை அதில்‌ போட்டுக்‌ காலை முதல்‌ மாலை வரை வெயிலில்‌ வைத்திருந்து எடுத்த இளநீரை வடிகட்டி விட்டுப்‌ பொடியை உலரவிடவும்‌. இவ்வாறு ஏழு நாள்கள்‌ புதிது புதிதாய்‌ இளநீர்‌ விட்டு வெயிலில்‌ வைத்தெடுக்கவும்‌.

ஏழு நாள்களுக்குப்‌ பிறகு, இரண்டு நாள்கள்‌ இளநீர்‌ ஊற்றாமல்‌ வெயிலில்‌ வைத்து எடுக்கவும்‌.

இவ்வாறு பக்குவம்‌ செய்யப்பட்ட பொடியை நான்கு முறை புடமிட்டு எடுக்கக்‌ குளம்பு பற்பம்‌கிடைக்கும்‌. புடமிடும்‌ முறை வருமாறு.

முதல்‌ புடம்‌

குளம்புப்‌ பொடியின்‌ எடைக்கு ஆறு மடங்கு வன்னி (மர) இலைச்சாறு சேர்த்து ஆறு நாள்கள்‌ அரைத்து வில்லை தட்டி 5 நாள்கள்‌ காயவிடவும்‌. பிறகு அவ்வில்லைகளை இரண்டு மண்‌ அகல்களுக்கு இடையில்‌ வைத்து மூடி, மண்‌ பூசி, சிலை மண்‌ செய்து, ஒரு நாள்‌ காய வைத்து, 40 வரட்டியிட்டுப்‌ புடமிடவும்‌.

இரண்டாம்‌ புடம்‌

புடம்‌ ஆறியதும்‌ அகலைப்‌ பிரித்து மருந்தை எடுத்து அதன்‌ எடைக்கு 5 மடங்கு வன்னி (மர) இடைச்‌ சாறுவிட்டு 5 நாள்கள்‌ அரைத்து, வில்லை தட்டி, 4 நாள்கள்‌ வில்லையை உலாத்தவும்‌. பின்‌ முதற்‌ புடத்திற்குச்‌ செய்தது போலவே அகலில்‌ வைத்துச்‌ சிலை மண்‌ செய்து ஒரு நாள்‌ உலர்த்தி 35 வரட்டியிட்டுப்‌ புடமிடவும்‌.

மூன்றாம்‌ புடம்‌

மூன்றாம்‌ முறையாக மருந்தின்‌ எடைக்கு நான்கு மடங்கு வன்னியிலைச்‌ சாறு விட்டு, நான்கு நாள்கள்‌ அரைத்து வில்லை தட்டி, மூன்று நாள்கள்‌ உலர்த்தி, முன்போலவே சீலை மண்‌ செய்து, ஒரு நாள்‌ காயவைத்து 30 வரட்டியில்‌ புடமிட வேண்டும்‌.

நான்காம்‌ புடம்

நானகாம்‌ முறையாக மருந்தின்‌ எடைக்கு 3 மடங்கு வன்னி (மர) இலைச்‌ சாறு விட்டு 3 நாள்கள்‌ அரைத்து வில்லை தட்டி, 3 நாள்‌ காயவிட்டு, சீலை மண்‌ செய்து ஒரு நாள்‌ உலர்த்தி 25 வரட்டியில்‌ புடமிட்டு எடுக்கவும்‌.

இவ்வாறு நான்கு முறை அரைத்துப்‌ புடமிட்டு எடுக்க, சிறந்த குளம்புப்‌ பற்பம்‌ கிடைக்கும்‌. பத்திரப்படுத்திக்‌ கொண்டு தேவைக்கு ஏற்பப்‌ பயன்படுத்தவும்‌.

அளவு : 100 மிலி கிராம்‌ முதல்‌ 300 மிலிகிராம்‌ வரை ஒரு நாளைக்கு இரண்டு வேளைகள்‌.

அனுபானம்‌ : தேனில்‌ குழைத்துத்‌ தருதல்‌ வேண்டும்‌.

தீரும்‌ நோய்‌ : சுவாச காசம்‌. (ஆஸ்த்துமா)

Source : ‘மாமிச உணவின் மருத்துவப் பயன்கள்’ நூலிலிருந்து

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments