ஹுவாவேக்கு மீண்டும் ஒரு தடை

0
1400

கடந்த வாரம் அனுமதியில்லாமல் தங்கள் நாட்டு நிறுவனங்களுடன் வர்த்தம் செய்ய முடியாத நிறுவனங்களின் பட்டியலில் ஹுவாவே நிறுவனத்தை சேர்த்தது அமெரிக்கா.

அந்த நிறுவனத்தை தடை செய்யும் அமெரிக்காவின் முயற்சியின் முக்கிய நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது.

அடுத்த தலைமுறை 5ஜி தொழில்நுட்பத்தில் ஹூவாவேயின் தயாரிப்புகளை பயன்படுத்துவதில் உள்ள ஆபத்து குறித்து மேற்கத்திய நாடுகளில் இருந்து பின்னடைவுகளை சந்தித்தது ஹுவாவே நிறுவனம்.

இந்நிலையில், தற்சமயம் SD Association (SDA) உறுப்பினராக இருந்து  ஹுவாவே நிறுவனம் தடை செய்யப்பட்டது. இதையடுத்து  ஹுவாவே standardizing SD மற்றும் microSD cards பயன்படுத்தி இனி தயாரிப்புகளை வழங்க முடியாது.இது ஹுவாவே நிறுவனத்துக்கு பெரிய அடி அல்ல தனது சொந்த “நானோ மெமரி கார்டுகள்” இதற்கு ஆதரவாக வடிவமைக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்க அரசின் நடவடிக்கையை அடுத்து, ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தின் சில மேம்படுதல்களை ஹுவாவே அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் மற்றும் சிப் தயாரிப்பாளர்களான இன்டெல், குவால்காம் மற்றும் AMD ஆகியவை சீன தொழில்நுட்ப உற்பத்தியாளர்களுக்கு விநியோகத்தை துண்டித்துவிட்டன.

அமெரிக்காவின் தடை தங்களை பாதிக்காமல் இருப்பதற்காக ஏற்கனவே தங்களது சொந்த தயாரிப்புகளை மேம்படுத்திவிட்டதாகவும் ரென் தெரிவித்தார்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments