நமக்கான நாளை….

1
1952

இன்னதென்று அறியுமுன் 
முற்றுப்புள்ளிகளை முத்தமிடும் 
முழுமையடையாத தேற்றங்களாய் 
நேற்றும் இன்றும்….

சொல்லில் அடங்காது கொல்லும் 
ரணமான வலிகளை தாண்டி மனதை
மெல்ல வென்று கொண்டிருக்கும் 
நேசங்களும்…..

வாழ்க்கை பயணத்தை பற்றி 
சற்றே நெகிழ வைக்கும் பல
இன்ப அதிர்ச்சிகளும்….

அன்பு என்ற சொல்லுக்காய் 
ஏங்கி நிற்கும் ஒற்றை மனது
அழகிய வார்த்தைக்காய்
அடித்து கொள்ளும் அந்த 
இளகிய இதயமும்….

ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரம் 
கனவுகளை சுமந்து நிற்கும் 
இலட்சிய பாதையும்…

அடுத்தவருக்கு விளக்கம் 
சொல்லும் அழகிய வார்த்தைகளும்
அன்பான உபசரிப்புகளும்…

உரிமையுடன் கூடிய 
அதட்டல்களும் அதட்டல்களை 
தாண்டிய அத்துமீறல்களும்…

பார்க்கின்ற திரைப்படத்தில் 
படிக்கின்ற கதைப்புத்தகத்தில் 
வரும் எதிர்பாராத திருப்பங்கள் 
ஆயிரமாய் கொட்டி கிடக்கிறது
இங்கே…

எதிர்காலத்தில் என்ன 
நடக்குமென்று தெரியாமல் 
இருப்பதும் வாழ்வின் 
அட்டகாசமான சுவாரசியத்தின் 
நேசமாய் துளிர் விடும் நாளை
நிச்சயமாக…

5 1 vote
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
1 கருத்து
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Riya
Riya
5 years ago
இதை மதிப்பிடுங்கள் :
     

Nice poem