வேலையற்ற பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் 2020 (Application for Placement of Unemployed Graduates and Diploma Holders – 2020) *Closing Date:14/02/2020*

0
2023

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்ப ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவினால் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தகைமை :
2019.12.31 இற்கு முன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் அல்லது டிப்ளோமா

நோக்கம் :
அரச தொழில் வாய்ப்பினைத் தேடும் பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காகப் பணி செய்யும் கலாசாரம் ஒன்றை ஏற்படுத்தும் வகையில் இளம் தலைமுறையினரைப் பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பங்களிக்கச் செய்ய வைப்பது இதன் நோக்கமாகும். எனது ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

கல்வித்தகைமை:
தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டப் படிப்பு ஒன்றினை அல்லது டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019.12.31ஆம் திகதிக்கு முன்னர் பூரணப்படுத்தியிருக்க வேண்டும்.

வயதெல்லை:
அந்த தினத்தில் – 35 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும்.

ஏனைய தகைமை:
விண்ணப்பதாரி விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராகவும், மேற்படி திகதி வரையிலான கடந்த மூன்று வருடக் காலப்பகுதியில் தொழில் ஒன்றில் ஈடுபடாதவராகவும் இருத்தல் வேண்டும்.

சமர்ப்பிக்கும் ஆவணங்கள்:
விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து, பட்டச் சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பெறுபேறு சான்றிதழின் புகைப்படப் பிரதி ஒன்றினை, மூலப் பிரதியுடன் ஒத்திருப்பதை சமாதான நீதவான் ஒருவர் அல்லது சட்டத்தரணி ஒருவரினால் உண்மையான பிரதி என்பதை உறுதிப்படுத்தி அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய இறுதித்திகதி மற்றும் முறை:
2020.02.14ஆம் திகதிக்கு முன்னர், இலங்கை தபால் திணைக்களத்தின் துரித அஞ்சல் (speed post) அல்லது கூரியர் சேவையின் (courier service) ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பெற:
விண்ணப்பங்களை ஜனாதிபதி செயலகத்தின் www.presidentsoffice.gov.lk என்ற இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும். ( இணைக்கப்பட்டுள்ளது)

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் முறை:
முழுமைப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் கீழ்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020,
நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு,
ஜனாதிபதி செயலகம்,
காலி முகத்திடல்,
கொழும்பு – 01

கடிதத்தின் இடதுபக்க மேல் மூலையில் –
பட்டதாரி எனின் ‘பட்டதாரி/(மாவட்டத்தின் பெயர்)’ என்றும்,
டிப்ளோமாதாரி எனின் ‘டிப்ளோமாதாரி/(மாவட்டத்தின் பெயர்)’ என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பணி வழங்கப்படும் இடங்கள்:
தெரிவு செய்யப்படுபவர்கள்,
*கல்வி அமைச்சு (கிராமிய தோட்டப் பாடசாலைகள்)
*நீர்ப்பாசன திணைக்களம்
*கமநல சேவைகள் திணைக்களம்
*வன ஜீவராசிகள் திணைக்களம்
*சுதேச மருத்துவ (ஆயுர்வேத) திணைக்களம்
*சுகாதார அமைச்சு (கிராமிய வைத்தியசாலைகள்/மருத்துவ நிலையங்கள்)
*நில அளவை திணைக்களம்
*விவசாய திணைக்களம்
*சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம்
*விலைமதிப்புத் திணைக்களம்
*குடிவரவு குடியகல்வு திணைக்களம்  ஆகிய துறைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.

சம்பள அளவு மற்றும் தொழில் நிபந்தனை:
ஒரு வருட பயிற்சிக் காலத்தில் ரூபா 20,000 கொடுப்பனவு வழங்கப்படும். நியமனங்கள் மாவட்ட மட்டத்தில் வழங்கப்படுவதுடன், முதலாவது நியமனம் வழங்கப்படும் மாவட்டத்தில் ஐந்து வருடங்கள் சேவை செய்வது கட்டாயமானதாகும்.

APPLICATION-deg-1

[sociallocker]Click here to download the Application [/sociallocker]

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments