கடலினில் மிதக்கிறேன்

0
572

வானத்தில் விண்மீன்கள்
மிதக்கிறது -இங்கு
பூஞ்சோலையும் வண்ணத்தில் மினுக்கிறது.
நீலக் கடலின் பஞ்சு மெத்தையில்
மீனினம் ஓடி தூங்குதடி
மெல்லமாய் சத்தம் போட்டுக் கிட்டு
மெதுவாய் அலைகளும் கரையில் மோதுதடி
என்ன அதிசயம் பாருங்கடி
ஏழ்கடலும் தாலாட்டு தாயாய் ஆகுதடி

அந்தி மாலையும் ஆனதடி
அம்புயம் எட்டிப் பார்க்குதடி
அவள் திங்கள் மகள் எனப் பெயர் கொண்டு
திலகம் வைத்திட
கடல் கண்ணாடியால் கண் சிமுட்டுதடி


தோணியும் திரும்பிப் பார்க்குதடி
திசையறியாமல் நின்று முழிக்குதடி
தோல் கொடுக்க யாரும் இல்லையன்று
துவண்டுப் போய் நிக்குதடி
என்ன அதிசயம் பாருங்கடி
தோழனாய் காற்றும் வீசுதடி

கடலின் அடியில் ஓர் உலகமடி
அங்கு சங்கும் சிற்பியும் முழங்குதடி
கடற் குதிரையும் இங்கு கனைக்குதடி
அவை கனத்தில்
சவாரியும் செய்ய நினைக்குதடி
கடற் பாசியும் மிதக்குதடி
அதை நூலில் கோர்க்க ஆமைக் குஞ்சிகளும் ஓடித் துரத்துதடி

கடலின் பூக்களும்
அழைக்குதடி ஆகா! என்ன அதிசயம் பாருங்கடி
அவை ஆனந்த தேனினை
நீரினில் கலக்குதடி

நானும் ஆழ்கடல் சென்றேனடி
அங்கு அதிசய ஆனந்தம்
கண்டேனடி
நீங்களும் சென்று பாருங்கடி
நிம்மதி நிலையாய் இருக்குமடி
என்ன அதிசயம் பாருங்கடி
மனம் புதுமையைத் தேடியே போகுமடி!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments