எரிச்சலா? கோபமா? இனி சொல்வோம் NO!

0
919

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும் கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகின்றது. உங்கள் எரிச்சலும் கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் மிக வலுவாக மாறிவிடுகின்றது. அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாக மாறப்போகின்றது. அதன் பின், கோபமும் எரிச்சலும் இல்லாமல் வாழ்வது முடியாத காரியம் என்கின்றது மருத்துவ ஆராய்ச்சி முடிவுகள்.

மேலும், மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள் என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள். சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவாரியாக எடுத்துரைக்கிறது campaign for forgiveness research. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும் உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

Stanford பல்கலைக்கழக பேராசிரியர் தனது Learn to forgive நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும் அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையை பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார். நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மன அழுத்தத்தை குறைக்கும் மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை. மனைவி மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே மன்னிக்கும் பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கின்றது. மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால், பெற்றோர்களை பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலை எளிதாகவே பெற்று விடுகிறார்கள். குழந்தைகளுக்கு எதிர்கால சமூகத்தில் ஏற்படும் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும் பழக்கம் வருகின்றது.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால் பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும். குறிப்பாக கணவன், மனைவி குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள் எரிச்சல்கள் வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது. ஆனால், அதை எதிர்காலத்தின் பாதை தன்னில் ஆனந்த ஆச்சரிய பூக்களை வீசும். வாழ்க்கை பணத்தினாலோ செல்வத்தினாலோ கட்டப்படுவது அல்ல. அது அன்பின் இலைகளால் பின்னப்படுவது. உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும். மன்னிப்புக் கேட்கும் எவருக்கும் மன்னிப்பை மறுக்காதீர்கள். மன்னிப்பு கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள். மன்னித்து மகான் ஆகுங்கள். மன நோய்களில் இருந்தும் விடுபடுங்கள்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments