யதார்த்தம்

0
668

காசாய் தண்ணீர்
போத்தல்களை
வாங்குவோரிடத்தில்
தாகத்தில் ஒரு துளி
தண்ணீர் கேட்டு
யாசிப்போரின் பசி
தெரிய வாய்ப்பிருக்க
போவதில்லை


அதைப்போல்

விதமாய் உணவை
வீணடித்து சொல்வோருக்கு
மீதமாய் உணவேதும்
கிடைத்திடுமா?
என்றிருப்பவனின் வலியும்
ஏக்கமும் ஏளனம் என்றே
வரையறை
செய்யப்பட்டுவிடுகிறது
சிலரிடத்தே

சந்தி சிரித்து சொந்தம்
கொண்டாடி விஞ்சிப்போகும்
விசேஷ விழாக்களின்
மத்தியிலே – கெஞ்சிக்
கேட்கப்படாத வரதட்சணை
இல்லா வலி இல்லா
வண்ண கல்யாணங்கள்
கலகலப்பானவை தான்
எப்போதும்

காரிருள் அமிழும் கண
நேரத்தில் இடையிடையே
கண்சிமிட்டும்
நட்சத்திரங்களை போல்
அல்லாது – எப்போதும்
பிரகாசிக்கும் நிலவு

போல

சொந்தங்களின்
இச்சை புரிந்து
அவர்களை கொச்சைப்
படுத்தாமல் மிச்சமே
இல்லாமல் அன்பால்
மட்டுமே அவர்களை
ஆட்கொள்ளும் அத்தனை
உறவுகளும் மிக
அழகானவை

அவன் தோற்கப்போகும்
நொடி அறிந்தும்
அவனை தேற்றப்போகும்
நண்பர்களை விட
அவன் தோற்கும் கணமும்
வேடிக்கையாய் அமைத்து
கொடுக்கப் போகும்
உயிர் நண்பர்கள் அவனுக்கு
ஆசிர்வாதமானவர்களே

சொல் கொண்டு
மனம் கருக்கும்
மூடர் மத்தியில்
ஓர் கலாய்போடு
கருத்தாய் கதை
சொல்லி போகிறவர்
நம்மை மெல்ல
கவர்ந்துவிடுவார்கள்
விரைவாக..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments