கவினுறு காலை

0
731

அறுசீர் விருத்தம் (மரபுப் பா)

செங்கதிரோன் கடல்கு ளித்து
 செங்கதிரைப் புவிப ரப்பி
கங்குலெனும் இருள்வி லக்கிக்
 காலையெனும் பொழுதைத் தந்தான்
பொங்குமெழிற் சோலை பூத்த
 பூவிதழின் புன்ன கைக்குள்
தங்குநறை யெடுக்கும் வண்டு
 தானிசையும் கோலம் என்னே!

பொங்கியெழும் மனக்க ளிப்பில்
 புரியுமிறைத் தொழில்கள் பண்ண
எங்குமேகித் தொழில் செய்வோர்
 ஏற்றமுள்ள பணிதொ டர்ந்தார்
திங்களவன் தீண்டும் கதிரால்
 திருக்குளத்து மலர்கள் பூத்து
எங்குமெழிற் காலைப் பொழுதோ
 இதயமதற் கின்ப மூட்டும்

புல்நுனியிற் பனித்து ளியாட
 புல்பறந்து இரைகள் தேட
கல்மலையைக் கார்ப னிமூடக்
 கதிரொளியோ புதுமை சூட
பொல்லாமனத திருள கன்று
 புன்னகையைப் புவியில் பூக்க
நல்பொழுதாய்க் காலை யென்னும்
 நங்கையவள் நலம்பி றந்தாள்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments