கொரோனா

0
580
images (22)

இயற்கையை அழித்தாய்
குடியிருப்புகள் ஆக்கினாய்….

டவர் நட்டாய்
பறவையினம் அழித்தாய்…..

வீணான குப்பையை வீசி
கடலன்னையை கோபித்தாய்…..

ஐந்தறிவு ஜீவன்களை
உனக்கு ருசியாக்கினாய்…..

மண்ணைத் துளைத்து
போர்வெல் இட்டு
பூமி தேவியை சினந்தாய்….

தொழிற்கூட புகையினால்
வாயு பகவானையும் கூட…….

ஆகாயத்தில் ஓசோனில் துளையும் வரச்செய்தாய்……

இப்படி பஞ்சபூதங்களையும்
உன் அறிவால் சேதப்படுத்தினாய்…..

இப்போதோ
அந்த இயற்கையே உன்னிடம் திரும்பி கோபப்பட்டு விட்டது….

பூமாதேவியோ பொறுமை இழந்தவளானாள்…..

கொரோனா எனும் கொடிய அரக்கனை
அனுப்பி நமக்கு,
நாம் செய்த இந்த தீவினையை
உணரும் வண்ணம் செய்து விட்டாள்…..

இனியாவது விழித்துக்கொள் மானிடனே…….!
எந்த வினைக்கும் நிச்சயம்
எதிர்வினை உண்டு….!(கர்மா)

எனவே நாம்நம் கடவுள் மூலமே
இந்த கர்மாவிர்க்கு பரிகாரம் தேடுவோம் !!!

இப்போது
விழித்திரு! தனித்திரு!

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments