சந்தேகம்

0
1086

நீரிலே வாழவும் முடியாமல்
மண்ணிலே சாகவும் முடியாமல்
தூண்டிலில் சிக்கி தவிக்கும் மீனைப்போல
உன் காதல் என்னும் மாய வலையில்
சிக்கி கண்ணீரில் கரைகிறது என் வாழ்க்கை

காதல் என்னும் காப்பியத்தில் உன்னவளாய் நான் வாழ
பல கனவுகளோடு கரம் கோர்த்து
புதிய பயணம் செய்தேன்

உன் இறுகிப்போன இதயத்தில்
நச்சுக் கலந்த சந்தேகப்பார்வை
என் காதலையும் என்னையும் அணுஅணுவாய் கொல்லுதடா
மரணத்தின் வலி ஒரு நொடி
ஒவ்வொரு நொடியும் மரண வலியை தருகிறதடா
உன் சந்தேக கழுகுப்பார்வை

அனாதையாக்கப்பட்டது நானா
இல்லை நான் உன் மேல் வைத்த அன்பா
தெரியவில்லை
முடியுமென்றால் கொன்றுவிடு என்னை
இல்லை உன் சந்தேகத்தை கொன்றுவிட்டு வா
மீண்டும் காதல் செய்வோம்
இல்லை சென்று விடு
நான் கொண்ட உண்மை காதலின் நினைவுகளோடு
கடக்கிறேன் என் வாழ்வில் இறைவன் விதித்த விதிப்படி
கல்லறையில் நான் உறங்கும் வரை

உன்னவாளய் நான் உனக்காக வாழ நினைத்த ஒவ்வொரு நொடியும்
காற்றோடு கரைந்து போனதடா
கவலைகள் ஏராளம் உணர்வுகளை மறைத்து
உண்மையை தொலைத்து
மீண்டும் மீண்டும் உன்னோடு வாழத்தான் ஏங்குது என் இதயம்
முடியவில்லையடா உன் சந்தேகத்தோடு போராட என் காதலுக்கு
உன் அதீத அன்பின் வெளிப்பாடா தெரியவில்லை
எனக்கு வேஷம் போடவும் பிடிக்கவில்லை

காலம் கடந்தும் நான் காத்திருப்பேன் உன்னவளாய்
உன் இறுகிப்போன இதயத்தில் ஊற்றெடுக்கும் சந்தேகத்தை
உன் இதயக் கல்லறையில் இருந்து
கிள்ளி எறிந்துவிட்டு நீ வருவாய் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிறேன்

உனக்காக பிறந்தவள் நான்
உன்னில் பிறந்த சந்தேகம்
அழிக்க முடியாத கொடிய விஷம் முடியும் என்றால்
போராடி அழித்துவிட்டு வா
விழி மேல் விழி வைத்து காத்திருக்கிறேன் உனக்காக
மீண்டும் காதல் காற்றை சுவாசிக்க

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments