வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்…

0
2252
images (2)

 

 

 

 

என் நிழலில் இளைப்பாற
என்னிடம் தஞ்சம் அடைந்தாய்..‌.

மழைப் பொழியவே என்னை
அறிமுகப் படுத்தினாய்
என்று இருந்தேன்…

உன் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ளவே
என்னை பலி ஆடாய் வளர்த்தாய் என்று‌ தெரிந்து கொண்டேன்…

என்ன செய்வது
நான் மானிடப்பிறவி இல்லை அல்லவா…
ஆதலால் உன் தேவைகளை
நிறைவேற்றிக் கொள்!

ஆனால்…

அடுத்த தலைமுறைக்காவது
என்னை விட்டு வைப்பாய்
என்று நினைத்தேன்…

மறுபடியும் உன்னிடம்
தோற்றுப் போனேன்…

என் கைகளை (மரக்கிளை) வெட்டினாய்
பொறுத்துக் கொண்டேன்…
உனக்கு கனிகளை தரும்
பிஞ்சுகளையும் அழித்தாய்…

என்னில் இருந்த
இலை தழைகளை உதிர்த்து
என் கோபத்தை
வெளிப்படுத்தினேன்!

அப்போதும் கூட வீட்டிற்கு
என்னை விறகாய்
பயன்படுத்தினாய்!

என்னை முழுமையாக
அழித்துவிட்டு
எத்தனை நாள்
களிப்புறுவாய்!

உன்னை வாழ வைத்தால்
என்னை வீழ்த்துகின்றாய்…
இது தான் மனிதப்பிறவியா?
புரிந்து கொண்டேன்!

இறுதியில் முழுமையாக
அழித்துவிட்டோம் என்று
கர்வம் கொள்ளாதே!

வெட்டப்பட்டது
என்னை மட்டுமே தவிர
மண்ணிற்குள் செல்லும்
என் வேர்களை அல்ல!

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments