வன்முறை வேண்டும்

0
618
113-1

 

 

 

 

 

 

வன்முறைகள் நடக்கட்டும்
மாற்றங்கள் பிறக்கட்டும் 


சிற்பியின் வன்முறையால் 
சிற்பங்கள் பிறக்கட்டும்
மருத்துவன் வன்முறையால்
மழலைகள் பிறக்கட்டும்

கண்களால் வீழ்த்துங்கள் 
காதல் பிறக்கட்டும் 
மலர்களை கட்டி வையுங்கள் 
மாலைகள் பிறக்கட்டும் 

மேகங்கள் முரண்படட்டும் 
மண்ணினை குளிர்விக்க 
ஒலி துணிக்கைகள் மோதிக்கொள்ளட்டும்
ஓசைகள் தோன்றிட

வேய்கள் துளைக்கப்படட்டும் 
இசையினை உண்டுபண்ண 
வேர்கள் துண்டாடடப்படட்டும் 
கிழங்குகள் பெற்றிட 

வன்முறை வேண்டும்… 
விவசாயத்தில் வேண்டும் 
படியளந்திட 

கனிகளின் பிளவிலே 
விதைகள் வீழ்ந்திடட்டும் 

மண்ணின் பிளவிலே 
அவ்விதைகள் உயர்ந்திடட்டும்


வன்முறைகளும் கொலைகளும் வேண்டும் 
சக உயிர்களிடத்தில் அல்ல 
உள்ளிருக்கும் விலங்கிடம்

தற்கொலைகள் நடந்தேறட்டும் 
அது உங்கள் மனஉச்சியில் வீற்றிருக்கும் 
மறை எண்ணங்களும் பயங்களும் 
தற்கொலைக்கு தூண்டப்படட்டும் 

வன்முறைகள் வேண்டும் 
நல்லதொரு மாற்றங்களுக்காக….. !!!

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments