பனித்துளி

0
1465

 

 

 

 

 

பனிக்கூட்டம்
எங்கும் படலமாய்
படர்ந்திருக்க
காலையில் கதிரவன்
தாமதமாய் வரக் கண்டு
குளிர் காற்று
என்னை
நெருடலுடன் கொள்ள
உடலும் உருகும் மெல்ல
பூக்களும் சிரித்து
கொண்டிருக்க
பனித்துளி பூக்களை
முத்தமிட
என் மெய் சிலிர்க்க
நா எழவில்லை
பனியே
வந்த இடம்
தெரியாமல்
மறைந்து விடு
காரணம்
உன் வாடை பட்டால்
தேயிலை கருகிடும்.
மார்கழி மாதம்
உன் பனித்துளி
கண்டு தூக்கம்
கலைந்திடும்
உன்னால் இயற்கையே
மாயமாய் போய்விடும்
பூக்கள் மீது நீ கொண்ட பருக்களை
நீயே இல்லாமல் செய்துவிடு
பனித்துளியே கரைந்திடு 
பனித்துளியே என்னை கொல்லாமல் கொல்வது உன் இரகசியம்
என்னை வெல்ல உன் ஒருதுளி போதும்…

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments