இதயம் நனைக்கும் ஈரக்கவிதை

0
621
1248c376ac86750cc1445616de2c2a4c

 

 

 

 

பெரும் தீக்குள்
இறங்கிச் சாகும்
பனிக்காற்றாய்
உணர்வுகள்

வறண்ட பாலைநில
மனவெளிகளில்
புரண்டு எழும்
கடலலைகளாய்
எண்ணச்சிதறல்கள்

உங்கள் அத்தனை
சோழிகளையும்
சுழட்டி எறிந்து
வித்தைகாட்டும்
பேரவாக் கொண்ட
ஆர்ப்பரிப்புக்கள்

மெய்யுருகி மொழியுருகி
தானுருகி பேசிடும்
வார்த்தைகள் அத்தனையும்
மரபுவழி மாறாது
கவரக் கற்றுக் கொள்ளாத
கருத்தின் கனங்கள்

கூரான முட்களாய்
கீறுகின்ற மனங்களை
ரசிப்பு வீரியங்களுடன்
முகம் நனைத்து
குசலப் புன்னகை வீசி
நவீனமாகிறாள்

கண்ணீர் துளிகளுக்குள்
ஒளிந்து கொண்டு….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments