ஈசன் – அத்தியாயம் 3: வட இந்தியர்கள் பார்வையில் சிவ ‘பார்வதி’

0
192
3. சிவ 'பார்வதி'-67a52f8d

சிவனையும் பார்வதியையும் வட இந்தியர்கள் உருவாக்கிய விதம் மிக விந்தையானது.

இப்போதைய ‘ஈரான்’ தேசத்தை பூர்விகமாக கொண்டவர்கள் ஆரியர்கள். கி.மு. 3000-7000 கால கட்டத்தில் இவர்கள் சிந்து நதி கரைக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள இந்தியர்களுடன் கலந்தனர் என்பது வரலாறு.  இன்றைய ஈரான், மெசபடோமிய நாகரிகத்தின் ஒரு பகுதியாகும். இந்த நாகரிகத்தின் முக்கிய நதியான யூப்ரட்டீஸ் நதியோரம் உள்ள ‘ஊர்’ என்ற ஊரில்தான் யூதர்களின் தந்தையான ஆபிரகாம் பிறந்து வளர்ந்தார். ‘ஊர்’ என்ற ஊர் தற்போதைய ஈராக்கில் இருந்தாலும் அனைவருக்கும் ஒரே கலாச்சாரம்தான் இருந்தது.

யூத புத்தகமான தோராவின்படி, முதல் மனிதனான ஆதாமையும், அவனுக்கு துணையாக ஏவாளையும் இறைவன் உருவாக்கினார்.  மனிதன் இறைவனை கண்டதில்லை. ஆனால், தற்கால மனிதன், தான் முதல் மனிதனின் வழி வந்தவன் என்பதையும், ஆதி மனிதன் எப்படி இருந்தான் என்பதையும் ஆதாமின் தலைமுறையாகிய தன் மூதாதையர்கள் மூலம் கேட்டு வந்துள்ளான்.

வரலாறு அனைத்தும் மூதாதையர்களிடம் இருந்து தலைமுறை தலைமுறையாய் கேட்ட மற்றும் நிரூபணமான செய்திகளாகும். ஆனால், வேதங்கள் திருஷ்டாந்தமாய் எழுதப்பட்டவைகளாகும்.  இறைவன் தன் தூய அருவத்தின் மூலம் மனிதனுக்கு வெளிப்படுத்தியதே திருஷ்டாந்தம். மூதாதையர் மூலம் தலைமுறையாய் கேட்டு வந்த செய்தி, ‘கரு’ மாறாமலும், காலத்திற்கு ஏற்றாற்போல் சற்று மெருகூட்டப்பட்டும் கதைகளாய் மாற்றப்பட்டிருக்கும்.  திருஷ்டாந்தமாய் எழுதப்பட்டவைகளில் மாற்றம் இருக்காது.

ஆதாமையும், ஏவாளையும் பற்றி ஆரியர்கள் தங்கள் முன்னோர்கள் மூலம் கேட்டறிந்ததை வைத்து ஒரு உருவத்தினை உருவாக்கினார்கள். முதலாவதாக, ஆதி மனிதர்கள் தங்கள் முடியை வெட்டும் பழக்கம் இல்லாதவர்கள். அனைத்து ஆண்களும் பெண்களைப்போல் சடைமுடி வளர்த்திருப்பார்கள். இரண்டாவதாக, இறைவன் ஆதாமையும், ஏவாளையும் படைத்த பின்னர், அவர்கள் இருவரும் ஒரே உடலாய் இருப்பர் என்று வாழ்த்தினார் என்று யூதர்களின் வரலாறு கூறுகிறது. மூன்றாவதாக, முதல் மனிதன் ஆதாமும் அவன் மனைவி ஏவாளும் பாம்பினால் ஏமாற்றப்பட்டு, பாவத்திற்கு அடிமை ஆனார்கள் என்பதும் வரலாறு.

ஆரியர்கள், இம்மூன்றையும் கலந்து ஒரு உருவத்தினை உருவாக்கினார்கள். அதாவது, ஆணிற்கு, அவனுடைய நீண்ட சடை முடியை, அவன் தலைமேல் சுருட்டி வைத்திருப்பதை போல் உருவாக்கினார்கள்.  அடுத்து, பாதி ஆணும் பாதி பெண்ணும் கலந்தாற்போல் ஒரு உருவத்தை உருவாக்கினார்கள். இவர்கள் இருவரையும், நீங்கள் என்றுமே எனக்கு அடிமை என்று பாம்பு இருவரின் தலைக்கு மேலே இருந்து சொல்வது போல் செய்தனர். அதற்கு, ‘சிவ பார்வதி’ என ஒரு பெயரும் கொடுத்தனர். அதாவது, முதல் மனிதன் ஆதாம் ‘சிவன்’ என்றும் அவன் மனைவி ஏவாள், ‘பார்வதி’ என்றும் பெயரிட்டனர்.

சிந்து சமவெளி பகுதியில் குடியிருந்த இந்தியர்களுடன் கலந்த பின்னர் சமஸ்கிருத மொழியையும், புதிய சமயத்தையும் உருவாக்கினர். அதன்படி, சிவன், சக்தி எனும் ஆற்றலாய் செயல் புரிகிறான் என்ற கருத்தினையும், ஆதாம் ஏவாள் உருவத்தினையும் கலந்து சிவனுக்கும் பார்வதிக்கும் உருவம் கொடுத்தார்கள்.

இறைவன், முதல் மனிதனாகிய ஆதாமை தம்முடைய சாயலாக படைத்தார் என்று யூதர்களின் வேதம் கூறுகிறது. ஆனால், மனிதன், இறைவனை தனது சாயலாக உருவாக்கி விட்டான். இது ஏற்கத்தகாதது. கண்ணால் காணும் உருவத்தையே அப்படியே வரையவோ வடிக்கவோ தடுமாறும் மனிதன், காணாத இறைவனுக்கு எப்படி உருவம் கொடுக்க முடியும்?

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments